தமிழகத்தில் நாங்கள் தேர்தல் பணியை ஏற்கனவே துவங்கிவிட்டோம்: தமிழிசை சவுந்தரராஜன்
சென்னை: தமிழகத்தில் பாஜக சார்பில் தேர்தல் பணியை ஏற்கனவே துவங்கிவிட்டதாகவும், எப்பொழுது தேர்தல் வந்தாலும் சந்திக்கத் தயாராக இருப்பதாகவும் பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
பாஜக சார்பில் சென்னை வேளச்சேரியில் ரக்ஷாபந்தன் பண்டிகை சனிக்கிழமை சிறப்பாக கொண்டாடப்பட்டது. கொண்டாட்டத்தை பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் துவங்கி வைத்தார்.

அதன் பிறகு அவர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில்,
ரக்ஷாபந்தன் பண்டிகை கொண்டாட்டத்தின்போது காப்பு கயிற்றுடன் சேர்த்து காப்பீடு வழங்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி உத்தரவிட்டுள்ளார். அதன்படி நாங்களும் தமிழகம் முழுவதும் நடக்கும் ரக்ஷாபந்தன் கொண்டாட்டத்தின்போது காப்புக் கயிறு கட்டுகையில் காப்பீட்டு திட்டத்திற்கான விண்ணப்பங்களை பூர்த்தி செய்து ரூ.2 லட்சத்திற்கான காப்பீட்டை பரிசாக அளிக்கிறோம்.
தமிழகத்தில் பாஜக தேர்தல் பணியை ஏற்கனவே துவங்கிவிட்டது. ஞாயிற்றுக்கிழமை மற்றும் செப்டம்பர் மாதம் 1ம் தேதி ஆகிய இரண்டு நாட்கள் கட்சி நிர்வாகிகளுக்கான தேர்தல் பணி பயிற்சி முகாம் திருச்சி பெரம்பலூரில் நடக்கிறது. தமிழகத்தில் எப்பொழுது தேர்தல் வந்தாலும் அதை சந்திக்க பாஜக தயாராகவே உள்ளது.
எந்த ஒரு விழாவையும் மக்களுக்கு நன்மை பயக்கும் விழாவாகவே பாஜக கொண்டாடி வருகிறது என்றார்.
-
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
விஜய்யை வளைக்கிறதா தாமரை? காங்கிரஸை ஓரங்கட்ட தவெக மெகா பிளான்! அம்பலப்படுத்திய பாஜக -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி?












Click it and Unblock the Notifications