தேர்தல் ஆணையம் சுதந்திரமாக செயல்படவில்லை.. உச்சநீதிமன்றத்தில் அப்பீல் செய்வோம் - தினகரன்
குரங்கு கையில் மாட்டிக் கொண்ட பூமாலையாக அதிமுக சிக்கிவிட்டது என்று தினகரன் குற்றம்சாட்டினார்.
Recommended Video

சேலம்: இரட்டை இலை சின்னம் தொடர்பான தேர்தல் ஆணையத்தின் தீர்ப்பால் குரங்கு கையில் மாட்டிக் கொண்ட பூமாலையாக அதிமுக சிக்கிவிட்டது என்று தினகரன் குற்றம்சாட்டினார். மேலும் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் முறையிடுவோம் என்றும் அவர் தெரிவித்தார்.
இரட்டை இலை சின்னம், கட்சி, கொடி ஆகியவை எடப்பாடி- பன்னீர் அணிக்கே சொந்தம் என்று தேர்தல் ஆணையம் இன்று தீர்ப்பு அளித்தது. இதுகுறித்து சேலத்தில் தினகரன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

அப்போது அவர் கூறுகையில் தேர்தல் ஆணையம் நடுநிலையாக நடந்து கொள்ளவில்லை. இந்த தீர்ப்பே அதற்கு சிறந்த உதாரணம். தேர்தல் ஆணையத்தின் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் முறையிடுவோம்.
தேர்தல் ஆணையம் சுதந்திரமாக செயல்படவில்லை. 122 எம்எல்ஏக்கள், 37 எம்.பிக்கள் இருந்தபோது அப்போது இரட்டை இலை சின்னத்தை தேர்தல் ஆணையம் முடக்கியது.
தற்போது அவர்களுக்கு 111 எம்எல்ஏக்கள் மட்டுமே உள்ளனர். ஆனால் இரட்டை இலை சின்னத்தை எடப்பாடி- ஓபிஎஸ் அணிக்கு வழங்கிவிட்டது. அன்று பன்னீர் செல்வத்துக்கு ஆதரவாக செயல்பட்ட மத்திய அரசு இன்று எடப்பாடிக்காக செயல்பட்டுள்ளது.
மொத்தத்தில் இந்த தீர்ப்பால் குரங்கு கையில் கிடைத்த பூமாலை போல் அவர்கள் கையில் அதிமுக சிக்கிக் கொண்டது. ஆர்.கே.நகர் தேர்தல் அறிவிக்கப்பட்டால் நான் மீண்டும் போட்டியிட்டு வெற்றி பெறுவேன் என்று டிடிவி தினகரன் தெரிவித்தார்.
-
இபிஎஸ் வர்றதுக்குள்ள இப்படியா.. எஸ்.பி.வேலுமணி முகத்துக்கு நேராக துரோகின்னு கத்திய அதிமுக நபர் இவரா? -
எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..நீங்க ஒத்துழைப்பு மட்டும் கொடுங்க! ர.ர.க்களுக்கு எடப்பாடி மெசேஜ்! -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
எடப்பாடி பழனிசாமிக்கு நிம்மதி.. IT விசாரணை கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம் -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்! -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications