இந்தியாவின் அடுத்த பிரதமர் யார்? - தினகரன் அலப்பறையை பாருங்க மக்களே!
சென்னை: இந்தியாவின் அடுத்த பிரதமரை நாங்கள்தான் முடிவு செய்வோம் என்று அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் தலைவர் தினகரன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் தினகரன பேசுகையில் நாடாளுமன்ற தேர்தலுடன் தமிழக சட்டப்பேரவைக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் வரும்.

அந்த நம்பிக்கை எனக்கு உள்ளது. மேலும் அடுத்த பிரதமர் யார் என்பதையும் நாங்கள் முடிவு செய்வோம் என்று தெரிவித்துள்ளார். தினகரன் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் என்ற ஒரு கட்சியை தொடங்கியுள்ளார்.
இந்த கட்சிக்கு தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரமும் கிடைத்துள்ளது. ஆர் கே நகர் வெற்றியை போல் சட்டசபை தேர்தலில் வேண்டுமென்றால் அடுத்த முதல்வரை அவர் முடிவு செய்யலாம்.
ஆனால் அடுத்த பிரதமரையே நாங்கள்தான் முடிவு செய்வோம் என்று சொல்லும் அளவுக்கு அவரது கட்சியை வளர்த்துவிட்டாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. 38 எம்பிக்களை வைத்துள்ள அதிமுகவாலேயே ஒன்று செய்யமுடியவில்லை. இவரால் முடியுமா என்று மக்கள் பேசி கொள்கின்றனர்.
திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!