சித்தப்பா நடராஜன், மாமா திவாகரனை அதிமுகவில் சேர்க்கவே மாட்டோம்.. தினகரன் திடீர்!

சித்தப்பா நடராஜன், மாமா திவாகரனை நாங்கள் அதிமுகவில் சேர்க்கமாட்டோம் என்று அதிமுக துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.

Subscribe to Oneindia Tamil

சென்னை : ஜெயலலிதாவினால் ஒதுக்கிவைக்கப்பட்ட நடராஜன், திவாகரனை ஒருபோதும் அதிமுகவில் சேர்க்க மாட்டோம் என்று அக்கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார். சொந்த சித்தப்பா, மாமாவிற்கு எதிராக பகிரங்கமாக மல்லுக்கட்ட ஆரம்பித்து விட்டார் டிடிவி தினகரன்.

சசிகலாவின் அக்காள் மகன் டி.டி.வி.தினகரன். இவர், ஜெயலலிதாவால் அடையாளப்படுத்தப்பட்டவர். இவருக்கு ஜெ.பேரவை செயலாளர், கட்சியின் பொருளாளர், டெல்லி அரசியலை கண்காணிக்கும் பொறுப்பு ஆகியவற்றை கொடுத்து அழகு பார்த்தார் ஜெயலலிதா. ஜெயலலிதாவின் நம்பிக்கைக்கு ஏற்ப தினகரனும் செயல்பட்டார்.

ஜெயலலிதாவால் கட்டம்கட்டப்பட்ட தினகரன், அதன்பிறகு அரசியலிருந்து ஒதுங்கியே இருந்தார். அவருக்குப் பிறகு கட்சிக்குள் ஆதிக்கம் செலுத்திய திவாகரன், குறுகிய காலத்திலேயே சர்ச்சையில் சிக்கினார். இதன்விளைவு சசிகலாவுடன் சேர்த்து மன்னார்குடி குடும்பத்தினர் அனைவரும் 2011ஆம் ஆண்டு மொத்தமாக வெளியேற்றப்பட்டனர்.

ஜெயலலிதா மறைவு

ஜெயலலிதா மறைவு

ஜெயலலிதா மறைவுக்குப்பிறகு அனைவரும் சசிகலாவுடன் நெருக்கம் காட்டத் தொடங்கினர். ஜெயலலிதா உடல் வைக்கப்பட்டிருந்த போது மன்னார்குடி சொந்தங்கள் அனைவரும் சசிகலா அருகில் நின்று கொண்டிருந்தனர்.

டிடிவி தினகரன் ஆதிக்கம்

டிடிவி தினகரன் ஆதிக்கம்

சசிகலா உடன் அதிகம் நெருக்கமான டிடிவி தினகரன் மட்டுமே கட்சியிலும் ஆட்சியிலும் ஆதிக்கம் செலுத்தி வருகிறார். நடராஜன், திவாகரனை அவர் ஓரம்கட்டிவிட்டார். இதுநாள்வரை வெளிவராமல் இருந்த குடும்ப பிரச்சினை இப்போது வெளிப்படையாகவே வெடிக்க ஆரம்பித்து விட்டது.

அதிமுகவில் பதவி

அதிமுகவில் பதவி

தந்திடிவிக்கு பேட்டியளித்த தினகரன் இதனை வெளிப்படையாகவே தெரிவித்துள்ளார். ஜெயலலிதாவினால் விலக்கி வைக்கப்பட்ட டிடிவி தினகரன், டாக்டர் வெங்கடேஷை கட்சிக்குள் சேர்த்தார் சசிகலா. ஆனால் வெங்கடேஷையும் ஒதுக்கிவிட்டு கட்சி, ஆட்சி என இரண்டையும் தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளார் தினகரன்.
இப்போது ஜெயலலிதாவினால் ஒதுக்கிவைக்கப்பட்ட நடராஜன், திவாகரனை ஒருபோதும் அதிமுகவில் சேர்க்க மாட்டோம் என்று கூறியுள்ளார்.

நடராஜன் கருத்து

நடராஜன் கருத்து

குடும்ப ஆட்சி பற்றி தஞ்சாவூரில் நடைபெற்ற பொங்கல் விழாவில் நடராஜன் பேசியது அவரது சொந்தக்கருத்து என்றும் அது அதிமுகவின் கருத்து அல்ல என்றும் தெரிவித்துள்ளார். நடராஜன் கூறுவதை அதிமுகவின் கருத்தாக எடுத்துக்கொள்ள முடியாது என்றும் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

குடும்ப மல்லுக்கட்டு

குடும்ப மல்லுக்கட்டு


சொந்த சித்தப்பா நடராஜன், மாமா திவாகரனுக்கு எதிராக வெளிப்படையாகவே மல்லுக்கட்ட தயாராகிவிட்டார் டிடிவி தினகரன். இனி வேடிக்கைகள் அதிகமாகவே இருக்கும். பூசல்களும் அதிகமாகவே இருக்கும் என்று கூறப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+