ப்ளூ வேல் யார் விளையாடினாலும் உடனே தகவல் கொடுங்க - சேலம் ஆட்சியர் ரோகினி
சேலம் மாவட்டத்தில் ப்ளூ வேல் விளையாட்டைத் தடுக்க உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் ரோகினி தெரிவித்துள்ளார்.
சேலம்: டீன் ஏஜ் மற்றும் கல்லூரி மாணவ மாணவியர்கள் மத்தியில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ள ப்ளூ வேல் ஆன்லைன் விளையாட்டைத் தடுக்க சேலம் மாவட்டத்தில் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று ஆட்சியர் ரோகினி தெரிவித்துள்ளார்.
தமிழகம் மற்றும் புதுவையில் இரண்டு நாட்களாக ப்ளூ வேல் ஆன்லைன் விளையாட்டு குறித்த மரண செய்திகள் பரவி மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து சேலம் மாவட்ட ஆட்சியர் ரோகிணி இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

அப்போது அவர் கூறுகையில், சேலத்தில் ப்ளூ வேல் விளையாட்டை விளையாடுவோர் யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறோம். சைபர் கிரைம் போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர்.
வாட்ஸ் அப் குரூப்கள் கண்காணிக்கப்படுகின்றன. மேலும் சேலம் மாவட்டம் முழுக்க உள்ள கணினி சென்டர்கள் முழுமையாக கண்காணிப்பு வளையத்தில் கொண்டுவரப்பட்டுள்ளன.
யார் ப்ளூ வேல் விளையாடுகிறார்கள் என்பதை தெரிந்தவர்களும் போன் மூலம் தகவல் அளிக்கலாம். வீட்டில் குழந்தைகள் அல்லது பள்ளி கல்லூரி மாணவ மாணவியர் யாராக இருந்தாலும் அவர்கள் ப்ளூ வேல் விளையாடுகிறார்கள் என்று தெரிந்தால் சைல்டு ஹெல்ப் லைன் எண் - 1098 க்கு அழைத்து புகார் தரலாம்.
புகாரின் பெயரில் கேம் விளையாடும் நபர்களுக்கு உரிய மன நல ஆலோசனைகள் வழங்கப்படும்." என்று தெரிவித்தார். இதனிடையே புதுச்சேரி பல்கலைக்கழகத்தில், அஸ்ஸாம் மாநில மாணவர் ஒருவர் ப்ளூ வேல் விளையாட்டால் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications