சட்டசபை தேர்தலில் திமுகவின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது: கருணாநிதி
சென்னை: சட்டசபை தேர்தலில் திமுகவின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது என்று திமுக தலைவர் கருணாநிதி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டசபை தேர்தலில் 232 தொகுதிகளுக்கான வாக்குப் பதிவு காலை முதலே விறுவிறுப்பான வாக்குப் பதிவு நடைபெற்று வருகிறது. திமுக தலைவர் கருணாநிதி சென்னை கோபாலபுரத்தில் வாக்களித்தார்.

அதன் பின்னர் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு கருணாநிதி கூறிய பதில்கள்:
செய்தியாளர் : தி.மு.க. வின் வெற்றி வாய்ப்பு எப்படி உள்ளது?
கருணாநிதி: தி.மு. கழகத்தின் வெற்றி வாய்ப்பு ஒளி மயமாக உள்ளது. பிரகாசமாக உள்ளது.
செய்தியாளர் : தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் எப்படி?
கருணாநிதி: சிலவற்றில் எங்களுக்குப் பிடிக்காத செயல்பாடு.
செய்தியாளர் : இந்த முறை பல இடங்களில் பணம் பிடிபட்டிருக்கிறது. பல இடங்களில் பணம் பட்டுவாடா செய்யப்பட்டிருக்கிறது. கன்டெய்னர் மூலம் கடத்தப்பட்ட பணம் பிடிபட்டிருக்கிறது. இதைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?
கருணாநிதி: தமிழ்நாட்டையே விலை கூறுகின்ற வகையில் செய்து விட்டார்கள். அது ஓரளவு தவிர்க்கப் பட்டிருக்கிறது. தவிர்க்கப்பட்டதோடு விடுவார்களா? தண்டனை தருகின்ற அளவுக்கு தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்குமா என்ற ஆவலோடு தமிழ்நாடு எதிர்பார்க்கிறது.
கேள்வி : திராவிட முன்னேற்றக் கழகம் எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும் என்று நினைக்கிறீர்கள்?
கருணாநிதி: தேவையான அளவுக்கு.
இவ்வாறு கருணாநிதி கூறினர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications