சட்டென்று மாறுது வானிலை... சளி பிடித்து நெல்லை மக்களுக்கு ஒரே தொல்லை!
நெல்லை: கடந்த சில நாட்களாக அடிக்கடி சீதோஷ்ண நிலை மாறி வருவதால் நெல்லை வாழ் மக்களின் இயல்பு நிலை கடுமையாகப் பாதிக்கப் பட்டுள்ளது.
நெல்லையில் கடந்த சில நாட்களாக பனிப்பொழி அதிகரித்துள்ளது. இரவு மற்றும் அதிகாலையில் குளிர்ந்த காற்றுடன் பனிப்பொழிவும் இருப்பதால் பொதுமக்கள் அதிகாலை நீண்ட நேரம் கழித்தே எழுகின்றனர். ஆனால் இதற்கு நேர்மாறாக இருக்கிறது பகல் பொழுது. காலை 7 மணிக்கு சூரியன் உதிக்க தொடங்கியதும் பனி காணாமல் போய் விடுகிறது. இதனால் வெப்பத்தின் தாக்கம் தொடங்கி விடுகிறது.
இதனால் பலர் பனியால் சளி, இருமல் ஏற்பட்டும், மேலும் பலர் வெப்பத்தாக்கத்தால் வயிற்று பொருமல், கண் எரிச்சல் உள்ளிட்ட நோய்களாலும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். பனிப்பொழி காரணமாக நெல் கதிர்கள் மற்றும் காய்கறிகள் பாதிக்கப்பட்டுள்ளன. அதிகாலை பனிப்பொழி காரணமாக நடைபயிற்சி மேற்கொள்வோர் காலை வெகு நேரம் கழித்தே நடை பயிற்சி செய்ய வருகின்றனர்.
நெல்லையில் பகல் பொழுதில் குறைந்த பட்சம் வெப்பம் 18 முதல் 19 டிகிரி என்ற அளவில் பதிவாகியுள்ளது. நன் பகலில் தொடர்ந்து வெயில் அடித்தாலும் அதிகாலை நிலைமை தலை கீழாக மாறி விடுகிறது. வனப்பகுதிகளை அழிப்பதால் காற்று தடைப்பட்டு பருவநிலைகள் மாறி வருவதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
இதனால் பருவ மழைகள் பெய்து குடிநீர் பற்றாக்குறை, விவசாயம் படுத்து அரிசி பற்றாக்குறை உள்ளிட்ட பல பிரச்சனைகள் எழும் என அவர்கள் வருத்தம் தெரிவிக்கின்றனர்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது!












Click it and Unblock the Notifications