சென்னையில் இன்றாவது பெய்யுமா மழை?
சென்னை: சென்னையில் இன்று மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கடந்த டிசம்பரில் மழை வெள்ளத்தில் தத்தளித்த சென்னை, அதன் பிறகு ஒரு துளி மழையைக் கூட கண்டதில்லை.
ஆனால் தமிழகத்தின் பல பகுதிகளில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. கோடை ஆரம்பிப்பதற்கு முன்பே சென்னையில் வெளியில் கொளுத்த ஆரம்பித்துவிட்டது. அவ்வப்போது வெயில் அளவு 100லிருந்து 102 வரை அனல் கக்கியது.

அக்னி நட்சத்திரம் என்று அழைக்கப்படும் கத்திரி வெயில் நீடித்தாலும், வெப்பச் சலனத்தின் காரணமாக கடந்த சில நாள்களாக தமிழகத்தின் பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது. இதனால், வெப்பத்தின் தாக்கம் ஓரளவு குறைந்து காணப்படுகிறது.
இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை காலை நிலவரப்படி ஊட்டியில் 20 மீ.மீ.. மதுரை மாவட்டம் சித்தாம்பட்டி, ராதாபுரம், வேலூர் மாவட்டம் ஆலங்காயம், சேலம் ஆகிய இடங்களில் 10 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. சென்னையில் அவ்வப்போது மப்பும் மந்தாரமுமாக இருந்தாலும் மழை இல்லை.
இதுதொடர்பாக வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறியது:
பகல் நேரங்களில் மேற்கு, தென்மேற்கு பகுதியில் இருந்து காற்று வீசுவதால் வெப்பத்தின் தாக்கம் ஓரளவு காணப்படுகிறது. மாலை, இரவு நேரங்களில் தென்கிழக்கு பகுதியில் இருந்து நிலப்பரப்புக்குள் காற்று வீசுவதால் வெப்பத்தின் தாக்கம் குறைந்து காணப்படும்.
உள் மாவட்டங்கள், கடலோர மாவட்டங்கள், புதுச்சேரியில் ஒரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னையில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும் என்றார்.
நேற்றைய வெயில் நிலவரம்:
வேலூர் 102 டிகிரி
சேலம், கரூர் 101 டிகிரி
மதுரை 100 டிகிரி
சென்னை 99 டிகிரி
கோவை 96.8 டிகிரி
-
கத்திரி வெயில் முடிஞ்சுபோச்சு.. சென்னை உட்பட 5 மாவட்டங்களில் இன்று காலையிலேயே மழைக்கு வாய்ப்பு! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 19 மாவட்டங்களில் கொட்டி தீர்க்கப்போகும் மழை! அடுத்த 2 மணி நேரம் உஷார்! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி?












Click it and Unblock the Notifications