வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி... தமிழகத்தில் மீண்டும் கனமழை!
சென்னை: வங்க கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியால் மீண்டும் கன மழை தொடங்கியுள்ளது. இதன் காரணமாக தமிழ்நாட்டில் இன்றும், நாளையும் அநேக இடங்களில் மழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
வழக்கத்தை விட இம்முறை தமிழகத்தில் முன்கூட்டியே வடகிழக்கு பருவமழை தொடங்கி விட்டது. இதனால் கடந்தமாதம் தொடர்ச்சியாக பத்து நாட்களுக்கும் மேலாக தமிழகத்தில் பரவலாக மழை பெய்தது. சாலைகள் மற்றும் குடியிருப்புப் பகுதிகளில் மழை நீர் தேங்கியதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதித்தது.
அதேசமயம் இத்தொடர் மழை காரணமாக தமிழகத்தில் உள்ள ஏரி, குளங்கள் நிரம்பியது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். ஆனால், சில இடங்களில் மானாவாரி பயிர் சாகுபடி செய்திருந்த விவசாயிகள், பயிர்கள் மழை நீரில் மூழ்கியதால் பெரும் பாதிப்புக்கு ஆளானார்கள்.

மீண்டும் மழை...
பின்னர் மீண்டும் இம்மாதத்தின் தொடக்கம் முதல் தமிழகத்தில் வறண்ட வானிலையே நிலவி வந்தது. அவ்வப்போது ஓரிரு இடங்களில் மட்டும் மழை பெய்தது.

அந்தமான் அருகே
இந்நிலையில், அந்தமான் அருகே வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளது. அதன் காரணமாக தமிழ் நாட்டில் சில இடங்களில் மீண்டும் மழை வெளுத்து வாங்கத் தொடங்கியுள்ளது.

குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி...
இது தொடர்பாக சென்னை வானிலை மண்டல ஆராய்ச்சி மண்டல இயக்குனர் எஸ்.ஆர்.ரமணன் கூறுகையில், ‘அந்தமானுக்கும், இலங்கைக்கும் இடையே வங்க கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவானது. அது வலுப்பெற்று குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக மாறி உள்ளது. மேலும் ஆந்திரா அருகே மேலடுக்கில் சுழற்சி உள்ளது.

மழை நீடிக்கும்...
குறைந்த காற்றழுத்த பகுதி மற்றும் மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்றும் (புதன்கிழமை), நாளையும் (வியாழக்கிழமை) தமிழ்நாட்டிலும், புதுச்சேரியிலும் அநேக இடங்களில் மழை பெய்யும். சில இடங்களில் கனத்த மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது. சென்னையில் வானம் மேக மூட்டமாக இருக்கும். சில பகுதிகளில் மழை பெய்யும்' என இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

மழை அளவு...
தமிழ்நாட்டில் நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேர மழை அளவு பின்வருமாறு:-
கோத்தகிரி 8 செ.மீ., உடுமலைப்பேட்டை 6 செ.மீ., குன்னூர் 5 செ.மீ., சிவகிரி, ஆயிக்குடி, ஒரத்தநாடு, மன்னார்குடி, போடிநாயக்கனூர் தலா 3 செ.மீ., தென்காசி, கொடைக்கானல், கெட்டி தலா 2 செ.மீ., பெரியகுளம், சாத்தான்குளம், பொள்ளாச்சி, முத்துப்பேட்டை, வால்பாறை, செங்கோட்டை, பவானி, மதுக்கூர் தலா 1 செ.மீ. மழை பெய்துள்ளது.
-
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
கருணை காட்டுவாரா வருண பகவான்.. சென்னை, செங்கல்பட்டில் சட்டென மாறிய வானிலை -
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications