இடியோடு மழை... வறண்ட வானிலை - 5 நாட்களுக்கு தமிழக கிளைமேட் இதுதான்
தமிழகம், புதுச்சேரியில் 5 நாட்களுக்கு மழை, வெயில் எப்படி சென்னை வானிலை மையம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
Recommended Video

சென்னை: தென் தமிழகத்தில் இடியுடன் பலத்த மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் கணித்துள்ளது.
மாலத்தீவு பகுதிகளில் மேலடுக்கு சுழற்சி நிலவுவதால் வியாழன், வெள்ளிக்கிழமைகளில் இடியுடன் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கோடை வெப்பம் வாட்டி எடுத்து வருகிறது. குளிர் பிரதேசங்களை மக்கள் நாடத்தொடங்கிவிட்டனர். இயற்கை குளிர்பானங்களை குடித்து தாகத்தை தணித்து வருகின்றனர். மழைகாலம் என்றால் தினசரி வானிலை எச்சரிக்கை வெளியாகும்.

வெயில் காலத்தை முன்னிட்டு தமிழகம், புதுவையில் கோடைமழை எப்படி எங்கு, எப்போது பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்து அறிக்கை வெளியிட்டுள்ளது.
அந்த அறிக்கையில் குமரி மற்றும் அதனை ஒட்டியுள்ள மாலத்தீவு பகுதிகளில் மேலடுக்கு சுழற்சி நிலவுவதாக கூறியுள்ளது. இதனால்தென் தமிழகத்தின் ஓரிரு இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்ய வாய்ப்பு உள்ளதாக தெரிவித்துள்ளது.
27ஆம் தேதியான இன்று தமிழகத்தின் ஓரிரு இடங்களில் இன்று மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யும் வாய்ப்பு உள்ளதாக கூறியுள்ளது. வட தமிழகம் மற்றும் புதுவையில் வறண்ட வானிலையே காணப்படும் என கூறப்பட்டுள்ளது.
28ஆம் தேதியான நாளை தமிழகம் மற்றும் புதுவையின் சில இடங்களில் வறண்ட வானிலை காணப்படும் என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
29,30ஆம் தேதிகளில் தமிழகம் மற்றும் புதுவையின் சில இடங்களில் லேசான மழை அல்லது இடியுடன் மழை பெய்யும் என்றும் கடலோர மாவட்டங்கள் அல்லது புதுச்சேரியில் வறண்ட வானிலையும் நிலவும் என கூறியுள்ளது.
31ஆம் தேதியான சனிக்கிழமையன்று தமிழகத்தின் உட்பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான மழை மற்றும் இடியுடன் கூடிய மழையும், கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவையில் வறண்ட வானிலையும் நிலவும் என வானிலை மைய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 24 மணிநேரத்தில் கன்னியாகுமரி மாவட்டம் கொட்டாரம் பகுதியில் 1 செமீ மழை பெய்துள்ளது.
-
பாஜகவுடன் கூட்டணி அமைக்கலாமா? 98 தவெக மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு.. விஜய் எடுக்கப்போகும் முடிவு! -
சீனா அரண்டு நிற்குது.. மொத்த டிராகனுக்கும் சவால் விடும் தமிழ்நாட்டின் குட்டி சிட்டி.. ரியல் இன்ஜின்! -
வந்தாச்சு நீண்ட காலம் காத்திருந்த நல்ல செய்தி.. H-1b விசா கட்டுப்பாடுகள் நீக்கம்? புதிய மசோதா தாக்கல் -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
இந்திய வரலாற்றில் முதல்முறை.. தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் நோட்டீஸ்! -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட் -
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
ஏப்ரல் 20க்கு பின் தமிழக சட்டசபைத் தேர்தல்.. மே மாதத்தில் வாக்கு எண்ணிக்கை? டெல்லியில் இன்று ஆலோசனை -
ஜனநாயகன் ஓடிடி உரிமை ரத்து? விஜய்யால் மேலும் 120 கோடி ரூபாய் நஷ்டம்? கலக்கத்தில் கேவிஎன் நிறுவனம்! -
அம்பானி கொடுத்த பெரிய ஆஃபர்! சிஎஸ்கே கடைசியாக தான் சீனில் வந்தது.. சஞ்சு சாம்சன் தந்தை சொன்ன மேட்டர் -
Gas bill: சென்னை பெருங்குடி ஹோட்டலில்! இட்லி, வடையுடன் கேஸ் சிலிண்டருக்கும் கட்டண வசூலா? உண்மை என்ன?












Click it and Unblock the Notifications