கமல் கட்சியில் சேரணுமா மையம்.காம் இணையதளத்துக்கு போங்க!
கமல்ஹாசனின் அரசியல் கட்சியில் சேர மையம்.காம் என்ற இணையதளம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
Recommended Video

சென்னை : புதிய அரசியல் கட்சி தொடங்கியுள்ள கமல்ஹாசனுடன் இணைந்து அவருடைய கட்சியில் செயல்பட விரும்புபவர்கள் கட்சியில் சேர வசதியாக மையம்.காம் என்ற இணையதளம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
6 மாதத்தில் அரசியலுக்கு வந்து புதிய அரசியல் பாதையை வகுத்து பயணத்தை தொடங்கியுள்ளார் கமல்ஹாசன். கமலின் புதிய கட்சி நேற்று மாலை மதுரையில் பிறந்துள்ளது, மக்கள் நீதி மய்யம் என்று தனது கட்சிக்கு பெயர்சூட்டி கொடியையும் அறிமுகம் செய்துவைத்துள்ளார் கமல்.
ராமேஸ்வரத்தில் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் வீட்டில் தொடங்கிய கமலின் அரசியல் பயணம், மானாமதுரை, பரமக்குடி என்று மதுரை வரை தொடர்ந்தது. கமல் அரசியல் பயணம் சென்ற இடத்தில் எல்லாம் மக்கள் திரண்டு வந்து கமலுக்கு ஆதரவு தெரிவித்தனர்.

கமல் டீமின் அரசியல் தீவிரம்
கட்சி தொடங்கிய வேகத்தில் அடுத்தடுத்த விஷயங்களில் களம் இறங்கியுள்ளது கமல் டீம். 8 கிராமங்களை தத்தெடுத்து அவற்றை முன்மாதிரி கிராமமாக்குவோம் என்று கமல் கூறியுள்ளார்.

கமல் சென்னை வருகை
காவிரி தொடர்பான அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு கமலுக்கு அரசு அழைப்புவிடுக்கப்படும் என்ற எதிர்பார்ப்பில் கமல் மதுரையில் இருந்து இன்று சென்னை வந்தார். ஆனால் அனைத்து கட்சி கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என்றாலும் கட்சியின் வேலைகளில் தொடர்ந்து ஈடுபடப்போவதாக கமல் கூறியுள்ளார்.

இணையதளம் மூலம் உறுப்பினர் சேர்ப்பு
கமல் அதிகாரப்பூர்வமாக கட்சி தொடங்கிய நிலையில் அவருடைய கட்சியில் சேர விருப்பம் உள்ளவர்கள் எவ்வாறு சேரலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது. கமல் கட்சியில் சேர விரும்புவோர் மையம்.காம்(www.maiam.com) என்ற இணையதளம் மூலம் உறுப்பினராக சேரலாம்.

கமல் அழைப்பு
இந்த இணையதள பக்கத்திற்கு போனதும் வாருங்கள் மாறுபட்ட தமிழகத்தை உருவாக்குவோம், நீங்களும் நாமும் நாமானால் நாளைய தமிழகம் நமதாகும் என்ற வாசகங்களுடன் கமலின் வித விதமான அழைப்புகள் வருகின்றன. வாருங்கள் பொலிவான தமிழகத்தை உருவாக்குவோம் என்றும் கமல் அழைப்பு விடுக்கிறார்.

எளிமையாக சேர்ந்துவிடலாம்
கட்சியில் இணைய எங்களுடன் இணையுங்கள் என்ற பக்கத்தை கிளிக் செய்தால் அதில் கட்சியில் சேர விருப்பம் உள்ளவரின் பெயர் உள்ளிட்ட விவரங்கள் கேட்கப்படுகின்றன. இந்த தகவல்களை பதிவிட்ட பின்னர் செல்போனுக்கு வரும் ஓடிபி எண்ணை மறுபதிவு செய்தால் நீங்கள் உறுப்பினராக சேர்ந்ததற்கான பதிவு எண் திரையில் தெரியும். அவ்வளவு தான் நீங்கள் கமல் கட்சியில் உறுப்பினராகிவிட்டீர்கள்.
-
விஜய் வந்தால்! அதிமுக 134 தொகுதிகளில் மட்டுமே போட்டியிடும்? எடப்பாடி பழனிசாமியின் சீட் கணக்கு! -
இப்போ வேண்டாம்.. தேர்தலுக்கு பின் ஆதரவு தருகிறேன்.. சிஎம் போஸ்ட் தாங்க.. பாஜகவிடம் பேசிய விஜய்? -
திருவள்ளூர் மக்கள் ஏக்கத்துடன் பார்த்த பல ஆண்டு கனவு... ரயில் நிலையத்தில் பார்த்துமே பெரு மகிழ்ச்சி -
"இது" இல்லை என்றால் சிலிண்டர் வராது! புக்கிங் விதிகளை திடீரென மாற்றிய மத்திய அரசு! முக்கிய அறிவிப்பு -
வேலைக்கு ஆகாத டிரம்ப் பிளான்! அமெரிக்காவின் தலைமையை ஏற்க தயங்கும் உலக நாடுகள்! ஈரான் வெற்றி! -
வடிவேலுவை சினிமாவில் நுழைய விட்டதும், வளர்த்து விட்டதும் தப்பு.. ப்ளூ சட்டை மாறன் காட்டம்! பின்னணி சம்பவம் -
தவெக 6-12 தொகுதிகள் ஜெயிக்க வாய்ப்பு.. விஜய் வருகையால் அதிமுகவுக்கு பூஸ்ட்? கருத்துக்கணிப்பு ரிசல்ட் -
ஜோதிடரிடம் இருந்து வந்த மெசேஜ்.. வியூகத்தை மாற்றும் எடப்பாடி பழனிசாமி -
கிங் மேக்கர்? செக் வைத்த ’விஜய்’.. திணறும் அறிவாலயம்! - மட்ரைஸ் சர்வே சொல்லும் ‘திடுக்’ ரிப்போர்ட்! -
தங்க மழை கொட்ட போகுது.. PF வச்சு இருக்கீங்களா? சம்பள உச்சவரம்பு ₹25,000 ஆக உயருது? மாஸ் பிளான் -
தயாநிதி மாறன் கணித்த திமுகவின் 200+ ஸ்வைப்.. அப்ப வாஷ் அவுட் ஆகிவிடுமா எடப்பாடி பழனிசாமியின் அதிமுக? -
PMK Ramadoss: பாமக ராமதாஸை தைலாபுரத்தில் சந்தித்தாரா செங்கோட்டையன்? நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications