"டிசைனர்" கல்யாண உடைகளுடன் மேடையைக் கலக்கிய அழகிகள்!
சென்னை: சென்னையில் ஒரு வித்தியாசமான பேஷன் நிகழ்ச்சி நடைபெற்றது. இது திருமணப் பெண்களுக்கான டிசைனர் உடைகளுக்கான பேஷன் நிகழ்ச்சியாகும்.
இந்த நிகழ்ச்சியில் விதம் விதமான ஆடை அலங்காரத்துடன் அழகிகள் "மியாவ் மியாவ்" நடை போட்டனர்.
ஒரு இணையதளம் ஏற்பாடு செய்திருந்த ஆடை அலங்கார நிகழ்ச்சியாகும் இது. திருமண ஏற்பாட்டு தளமான அந்தத் தளத்தின் சார்பில் நடந்த இந்த நிகழ்ச்சியில் பலரும் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.

அப்ப கல்யாணம் வேற.. இப்ப வேற
முன்பு திருமணம் என்பது ஒவ்வொருவரையும் மலைக்க வைக்கும் சமாச்சாரமாக இருந்தது. இன்று சம்சார சாகரத்தில் சந்தோஷமாக நீந்த நாம் தயாரானால் மட்டும் போதும்.. ஏற்பாடுகளைக் கவனிக்க ஏகப்பட்ட ஏஜென்சிகள் அணிவகுத்துக் காத்திருக்கிறார்கள்.

வடை பாயாசம் முதல் வரவேற்பு வரை
வடை பாயாசத்துடன் திருமண விருந்தைக் கவனிப்பது முதல் வரவேற்பு வரை எல்லாவற்றுக்கும் இப்போது பேக்கேஜ் வந்து விட்டது. எனவே திருமண ஏற்பாடுகள் முன்பு போல கஷ்டமானதல்ல.. சரியான மாப்பிள்ளை, பெண்ணை பார்ப்பது மட்டுமே நமக்கு தற்போது உள்ள சவாலான வேலை.

திருமண ஆடை அலங்கார அணிவகுப்பு
இந்த நிலையில் சென்னையில் மேரேஜ்கலர்ஸ் என்ற திருமண ஏற்பாட்டுத் தளத்தின் சார்பாக திருமண டிசைன் மாநாடு என்ற பெயரில் ஒரு பேஷன் ஷோ நடந்தது. கிராண்ட சோழா ஹோட்டலில் நடந்த இந்த நிகழ்ச்ச்சியில், ஏகப்பட்ட சமாச்சாரங்கள் இடம் பெற்றிருந்தன.

சாப்பாடு முதல் நகை நட்டு வரை
என்ன மாதிரியான சாப்பாடு வகைகள் உள்ளன, என்ன மாதிரியான வெரைட்டி உள்ளன. யார் யார் சாப்பாட்டில் பிரபலம், எந்த மாதிரியான கேட்டரிங்கைப் புக் பண்ணலாம் என்பது குறித்து பெரிய லிஸ்ட்டே போட்டுக் கொடுத்தனர் இந்த நிகழ்ச்சியில்.

பேச்சலர் பார்ட்டிக்கு
திருமணத்திற்கு முன்பு வைக்கும் பேச்சலர் பார்ட்டிக்கான ஐடியா, சங்கீத் குறித்த ஆலோசனைகள், திருமண வைபவம் குறித்த ஐடியாக்களும் நிறையவே கொடுக்கப்பட்டன.

நகை அலங்காரம்
மணப்பெண் அலங்காரம், டிரஸ், நகை அலங்காரம் உள்ளிட்ட பல குறித்தும் இந்த நிகழ்ச்சியின்போது ஐடியாக்கள் தரப்பட்டன.

யார் யாரைக் கூப்பிடலாம்
விருந்துக்கு யார் யாரைக் கூப்பிடலாம், என்ன மாதிரியான வரவேற்பை ஏற்பாடு செய்யலாம், என்ன மாதிரி டிரஸ் அணியலாம், திருமண புகைப்பட, வீடியோ ஏற்பாடுகள் குறித்தும் அட்வைஸ் தரப்பட்டன.

பார்வதி ஓமனக்குட்டன்
நிகழ்ச்சியின்போது மாடல் அழகிகளின் ஆடை அலங்கார அணிவகுப்பும் நடந்தது. விதம் விதமான டிரஸ்ஸுடன் அழகிகள் நடை போட்டனர்.. நடிகை பார்வதி
ஓமனக்குட்டன் தலைமையில்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications