எடை குறைப்பு சிகிச்சை... 9 முறை அறுவை சிகிச்சை செய்து கொண்ட பெண் பலி... சென்னையில் விபரீதம்
சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் எடைக்குறைப்புக்காக அறுவை சிகிச்சை மேற்கொண்ட பெண் பலியானார்.
சென்னை: கீழ்ப்பாக்கத்தில் உள்ள தனியார் எடை குறைப்பு மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்து கொண்ட திருவண்ணாமலையைச் சேர்ந்த பெண் ஒருவர் பலியானார்.
திருவண்ணாமலையைச் சேர்ந்தவர் வளர்மதி (45). இவர் 150 கிலோ எடையுடன் இருந்தார். இவரது இரு மகள்கள், மகனும் இதேபோல் அதிக எடையுடன் இருந்தனர்.

இந்நிலையில் சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள தனியார் எடைக் குறைப்பு மருத்துவமனையில் ஆலோசனை கேட்பதற்காக அங்கு 4 பேரும் சென்றனர். அப்போது அவர்களிடம் பேசிய மருத்துவர்கள், இத்தனை உடல் எடையுடன் இருந்தால் ரத்தத்தை உடல் உறுப்புகளுக்கு அனுப்பும் இதயம் செயலிழந்துவிடும். இதனால் 4 பேரின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்று கூறியுள்ளனர்.
மேலும் ஒரே குடும்பத்தை சேர்ந்த நீங்கள் அறுவை சிகிச்சை செய்து கொண்டால் சலுகை விலை கிடைக்கும் என்றும் தெரிவித்துள்ளனர். இதனால் அச்சம் அடைந்த வளர்மதி கடந்த ஆகஸ்ட் 23-ஆம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அவருக்கும், அவரது இரு மகள்கள், மகனுக்கும் ஒரே நாளில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில் வளர்மதி அதிக எடை கொண்டிருந்ததால் அவருக்கு நேற்றிரவு 9-ஆவது முறையாக அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
அறுவை சிகிச்சைக்கு பின்னர் வளர்மதிக்கு காய்ச்சல் ஏற்பட்டது. இதை தொடர்ந்து அவர் இன்று அதிகாலை உயிரிழந்து விட்டார். இதுகுறித்து வளர்மதியின் கணவர் போலீஸில் புகார் அளித்துள்ளார்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications