நடிகர் விஷாலுக்கு டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் வாழ்த்து
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் சுயேட்சையாக போட்டியிடும் விஷாலுக்கு டெல்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால் வாழ்த்து கூறியுள்ளார்.
சென்னை: ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் சுயேட்சையாக போட்டியிடும் விஷாலுக்கு டெல்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால் வாழ்த்து கூறியுள்ளார்.
சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் இந்த முறை அரசியல் கட்சி வேட்பாளர்களை விட சுயேட்சை வேட்பாளர்கள் பலம் வாய்ந்தவர்களாக களமிறங்கியுள்ளனர்.

அதிமுகவின் மதுசூதனன், திமுகவின் மருதுகணேஷ், பாஜகவின் கருநாகராஜன், ஆகியோர்களை விட சுயேட்சைகளாக களமிறங்கியுள்ள டிடிவி தினகரன், தீபா, நடிகர் விஷால் ஆகியோர் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளனர்.
குறிப்பாக நடிகர் விஷாலுக்கு ஆதரவு பெருகி வருவதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. ஆர்.கே.நகர் தேர்தலில் போட்டியிட போவதாக விஷால் அறிவித்த நிமிடத்தில் இருந்தே அவருக்கு சமூக வலைத்தளங்களில் ஆதரவு அதிகரித்து வருகிறது.
முன்னாள் முதல்வர்கள் காமராஜர், எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரின் நினைவிடங்களுக்கு சென்று மரியாதை செலுத்திய விஷால் வேட்புமனுவை தாக்கல் செய்தார்.
விஷாலுக்கு டெல்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால் வாழ்த்து கூறியுள்ளார். தனது ட்விட்டர் பக்கத்தில் கெஜ்ரிவால் பதிவிட்டுள்ளார். டெல்லி வரும்போது சந்திக்கலாம் என்றும் தெரிவித்துள்ளார்.
இந்த வாழ்த்தினை ஏற்றுக்கொண்ட விஷால், தனது இன்ஸ்பிரேசன் அரவிந்த கெஜ்ரிவால்தான் என்று கூறினார். அவரது பாதையை பின்பற்றியே அரசியலுக்கு வந்துள்ளதாகவும் கூறியுள்ளார். கெஜ்ரிவால் போன்றவர்கள்தான் தங்களின் ஊக்கசக்தி என்றும் கூறினார்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications