Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

யார் இந்த சேரலாதன் இராமகிருஷ்ணன்? அண்ணாமலை செய்த "அந்த" தவறு.. வசமாக வளைத்த திமுக..மொத்தமாக போச்சே!

Subscribe to Oneindia Tamil

சென்னை: பாஜக தலைவர் அண்ணாமலைக்கு முக்கியமான சில கேள்விகளை திமுக எழுப்பி உள்ளது.

பாஜக தலைவர் அண்ணாமலையின் ரபேல் வாட்ச் விவகாரம்தான் தற்போது தமிழ்நாடு அரசியலில் விவாதத்தை ஏற்படுத்தி இருக்கும் டிரெண்டிங் டாப்பிக். அவர் கையில் கட்டி இருக்கும் பெல் அண்ட் ராஸ் நிறுவனத்தின் ரபேல் வாட்ச் இந்திய மதிப்பில் 4.40 லட்சம் ரூபாய் கொண்டது.

What are the 16 plus questions asked by DMK to BJP chief Annamalaion Rafale Watch bill?

இதை அண்ணாமலை வாங்கியது எப்படி? என்ற கேள்வியைத்தான் திமுகவினர் முன் வைத்து வருகின்றனர். இதை வாங்கிய பில்லை பொதுவில் சமர்ப்பிக்க வேண்டும் என்று திமுகவினர் அண்ணாமலைக்கு பிரஷர் போட்டு வருகின்றனர்.

இதற்கான பில் ஒன்றையும் அவர் சமீபத்தில் பத்திரிகையாளர் சந்திப்பில் காட்டினார்.

இந்த ரபேல் வாட்ச் பில் குறித்து பேட்டி அளித்த அண்ணாமலை, ரபேல் வாட்சை நான் சேரலாதன் ராமகிருஷ்ணன் என்ற நபரிடம் இருந்து வாங்கினேன். அவர் கோவையை சேர்ந்தவர். அவர் வாங்கி இருந்த வாட்சை அணிய வேண்டும் என்று விரும்பி.. அவரிடம் 3 லட்சம் ரூபாய் கொடுத்து வாங்கினேன். அவர் வாட்ச் வாங்கியதற்கான பில் இருக்கிறது.

What are the 16 plus questions asked by DMK to BJP chief Annamalaion Rafale Watch bill?

அவரிடம் இருந்து நான் வாட்ச் வாங்கியதற்கான பில்லும் இருக்கிறது. இரண்டையும் அந்த பக்கத்தில் நான் வெளியிட்டு இருக்கிறேன். அதிகாரியாக பணியில் இருந்தபோது லஞ்ச பணத்தில் ரஃபேல் வாட்ச் வாங்கியதாக திமுகவினர் தகவல் பரப்பினர். திமுகவினர் இதில் பொய்யை பரப்பி வருகின்றனர்.

அப்படி எல்லாம் இல்லை. ரபேல் வாட்ச் வரிசையில் 147வது வாட்சை நான் வாங்கினேன். நான் வாங்கிய வாட்ச்சிற்கு என்று தனியாக சீரியல் நம்பர் இருக்கிறது. அதற்கு உரிய பில் இருக்கிறது. இதை வைத்து சரியாக இருக்கிறதா என்று பார்த்துக்கொள்ளுங்கள். சீரியல் நம்பர் தெரியாமல் திமுகவினர் பொய்யான பில்லை நேற்று வெளியிட்டனர், என்று அண்ணாமலை குறிப்பிட்டார்.

இந்த நிலையில் இந்த வாட்ச் தொடர்பாக அண்ணாமலைக்கு திமுக பின்வரும் முக்கியமான கேள்விகளை எழுப்பி உள்ளது.

What are the 16 plus questions asked by DMK to BJP chief Annamalaion Rafale Watch bill?

அதில்,

பலரும் பல்வேறு வகைகளில் அந்த ரசீதை (அது பில் இல்லை) பிரித்து மேய்ந்துவிட்ட நிலையில் எல்லாவற்றையும் இணைத்து வாட்சுக்கு பில்லு தரேன்னு சொல்லிட்டு 'நான் வித்தேன்னு எழுதி தரேன் நீ வாங்குனன்னு எழுதி குடு'ன்னு வாங்கிய ரசீதை தூக்கிட்டு வந்த #மக்கு_மலை க்கு 16+ கேள்விகள்.

சேரலாதன் என்பவர் வாட்ச் வாங்கியதாக சொல்லப்படும் நாள் 21/03/2021. அந்த மாதம் (03.03.2021 - 31.03.2021) முழுவதுமே 24 மணிநேர கொரோனா ஊரடங்கு அமலில் இருந்தது.. அப்படியெனில் அவர் எப்படி கடைக்கு சென்று வாட்ச் வாங்கியிருக்க முடியும்?

சேரலாதனிடம் தான் வாட்ச் வாங்கியதாக அண்ணாமலை கூறும் 27/05/2021 அன்று அண்ணாமலை செலுத்தியதாக சொல்லும் ரூ.3,00,000-த்திற்கான எந்த பண பரிவர்த்தனையும் அண்ணாமலையின் வங்கிக் கணக்கில் நடைபெறவில்லையே? அப்படியெனில் அது யார் பணம்? எப்படித் தந்தார்?

எப்படியோ தந்தார் எனில் Section 269ST of the Income Tax Act படி ஒரு நாளைக்கு 2 லட்சத்திற்கும் அதிகமான எந்த பண கொடுக்கல் வாங்கலும் வங்கி மூலமாக மட்டுமே நடக்க வேண்டும். அப்படி இருக்கும் போது அண்ணாமலை அதை மீற காரணம் என்ன?

What are the 16 plus questions asked by DMK to BJP chief Annamalaion Rafale Watch bill?

ஊர் முழுக்க 'டிஜிட்டல் இந்தியா' என ஒன்றிய அரசு Digital Transactionகளை உருட்டிக் கொண்டிருக்கும் போது அண்ணாமலை அதை மீறக் காரணம் என்ன? அவர் கொடுத்த பணம் கருப்பு பணமா?

யார் இந்த சேரலாதன் இராமகிருஷ்ணன்? 4 மாதங்கள் அவகாசம் எடுத்துக்கொண்டும் பில்லுடன் வராமல் 'Delivery Challan'னுடன் வந்தது ஏன்? ஒரிஜினல் பில் எங்கே?

'சேரலாதனின் கேரளத்து நண்பன் லோகநாதன் சேலத்தில் வாங்கிய செக்கன்ட்ஹேன்ட் வாட்ச்' என்ற இந்த கதை கம்பி கட்டும் கதையாக தெரியவில்லையா?

சேரலாதனுக்கு எப்படி இந்த அமேசான் காடுகளின் அரியவகை 'ரபேல் வாட்ச்' கிடைத்தது? யார் இந்த சேரலாதன்? என்ன தொழில் பண்றார்? அப்படி ஒருத்தர் இருக்காரா? சேரலாதனின் வங்கி கணக்கையும் வெளியிடுவீர்களா? அவரைப் பொதுவெளியில் அறிமுகப்படுத்துவீர்களா?

What are the 16 plus questions asked by DMK to BJP chief Annamalaion Rafale Watch bill?

ரேர் பீஸ் - ரபேல் கடிகாரம்' இரண்டே மாதத்தில் அதை ஒன்னரை லட்ச ரூபாய் குறைத்து 3 லட்ச ரூபாய்க்கு சேரலாதன் விற்க காரணம் என்ன?? இல்லை அண்ணாமலை மிரட்டி வாங்கினாரா? தேசத்திற்காக சொன்ன விலைக்கு வாங்காமல் குறைத்து வாங்கியது ஏன்? ஓ.. இதுதான் 'டிஸ்கவுன்ட் தேசப்பற்றா?'

இந்தியாவில் Bell&Ross வாட்ச்களை அதிகாரப்பூர்வமாக விற்பது Ethos மட்டுமே! அப்படி இருக்கும்போது இந்தியாவிலேயே இரண்டு ரபேல் வாட்ச்கள் தான் வாங்கப்பட்டுள்ளன என்று இவருக்கு எப்படி தெரியும்? இவர் வாட்ச் பில்லைத் தேடினாரா இல்ல வாட்ச்க்கான ஒனர்களைத் தேடி தேடி கெஞ்சினாரா?

அப்படிப் பார்த்தாலுமே 2010 ல் இருந்தே Zimson நிறுவனம் Computer Generated Invoice பில்லை தான் தருகிறது. தெரு முனை மளிகைக் கடைக்காரர் கூட இப்போதெல்லாம் பிரிண்டட் பில் தருகிறார்! அப்படி இருக்கும் போது ரூ.4,50,000 மதிப்புள்ள ரசீது பார்க்க பெட்டிக் கடையில் வாங்கியது போலுள்ளது!

HSN mandatory for all transactions. Without HSN that transaction is invalid என சட்டம் சொல்கிறது. அப்படி எனில் சேரலாதனும், Zimson நிறுவனமும் அரசாங்கத்தை ஏமாற்றி இருக்கிறார்களா? அது தெரிந்தும் தான் அண்ணாமலை அந்த கடிகாரத்தை வாங்கினாரா?

Zimson நிறுவனத்திடம் ORIGINAL INVOICE உள்ளதா? அந்த Invoice அவர்களின் மாதாந்திர / ஆண்டுக் கணக்கு ஆடிட்டிங்கில் சமர்பிக்கப்பட்டுள்ளதா? இதில் வரி எய்ப்பு நடந்துள்ளதா ? அண்ணாமலை காட்டும் Delivery Challan -ல் நிறுவனத்தின் மெயில் ஐடி தவறாக இருக்கிறதே!? ஆமா இது எல்லாமே பொய்யா?

சேரலாதன் வாங்கிய வாட்ச் சீரியல் நம்பர் BRO394CBL147. ஆனால் அண்ணாமலை பில்லில் இருக்கும் சீரியல் நம்பர் BRO394DAR147 ! இந்த சீரியல் நம்பர் தப்பா இல்ல சீரியல் நம்பரே பொய்யா?

வாட்ச்க்கு பில் சர்ச்சை எழுந்தபோது, அன்று 149-வது வாட்ச் என சொன்னார். ஆனால் Delivery Challanல் 147 என குறிப்பிடப்பட்டுள்ளது! இரண்டு வாட்ச்கள் உள்ளதா? உங்கள் அழுக்குகள் வாட்ச் நம்பரை மறைத்து விட்டதாக நீங்களே துப்பியிருகிரீர்களே! அப்போ நீங்கள்தான் அந்த அழுக்கின் வடிவமா?

What are the 16 plus questions asked by DMK to BJP chief Annamalaion Rafale Watch bill?

திருவாளர் #மக்கு_மலை அவர்கள் சொன்னது போல அவரது மாத செலவினங்கள் ரூ.7.00 இலட்சம் நண்பர்களால் தரப்படுகிறது எனில் #அரசியல்கோமாளி_அண்ணாமலை வருடத்திற்கு அன்பளிப்பாக பெறும் ரூ.84 இலட்சம் தொகைக்கு 30% அன்பளிப்பு வரியாக செலுத்த வேண்டியிருக்கும் என்பதனை 🐐 அறிவாரா?!

வீட்டு வாடகை, காருக்கு பெட்ரோல் என எல்லாவற்றையும் நண்பர்கள்தான் தருகிறார்கள் எனில், வாட்ச் வாங்கும் அளவுக்கு பணம் கொடுத்துத் தள்ளும் நண்பர்கள் தான் யார்? அதானியா? ஆருத்ராவா?

'ஈலோகத்தில் வாட்ச்க்கு பினாமி வச்ச ஒரே ஆளு ஈ ஆட்டுக்குட்டி மட்டுமே'!
மேலும் நீங்கள் கண்டறிந்த பிழைகள் மற்றும் தகவல்களை ரிப்ளை செய்யவும்! அடுத்து அண்ணாமலையின் வங்கிக் கணக்கு டீக்கோட் வருது!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+