ஒன்னு இல்ல ரெண்டு இல்ல.. 10,000 கோடிக்கு ஒப்பந்தம்.. சேகர் ரெட்டிக்கு கைமாற்றிய ராமமோகன் ராவ்
பலகோடி ரூபாய் புரளும் அரசு ஒப்பந்தங்களை சேகர் ரெட்டிக்கு வழங்கியவர் ராமமோகன் ராவ்தான் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன.
சென்னை: கட்டுக்கட்டாக பணமும், கட்டிக் கட்டியாக தங்கமும் வருமானவரித் துறையால் கைப்பற்றப்பட்ட சேகர் ரெட்டிக்கு ரூ. 10 ஆயிரம் கோடிக்கு மேல் ஒப்பந்தங்களை தமிழக தலைமை செயலாளர் கொடுத்துள்ளார் என்றும் இதற்காக கணிசமான தொகையை லஞ்சமாக பெற்றுள்ளார் என்றும் அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழகத்தின் தலைமைச் செயலாளர் ராமமோகன் ராவ் வீட்டில் இன்று காலை 6 மணி முதல் வருமானவரித் துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். மேலும், அவரது உறவினர்கள், நண்பர்கள் வீடுகள் உள்பட 13 இடங்களிலும் வருமானவரித் சோதனை நடைபெற்று வருகிறது.

இந்த வருமானவரிச் சோதனை நடைபெறுவதற்கு காரணமே சேகர் ரெட்டியின் வீட்டில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில்தான் நடக்கிறது என்று கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து, ராமமோகன் ராவ்தான் சேகர் ரெட்டிக்கு ரூ. 10 ஆயிரம் கோடி மதிப்புள்ள அரசு ஒப்பந்த பணிகளை அளித்திருக்கிறார் என்ற தகவலும் வெளியாகியுள்ளது. மேலும், அரசு சார்ந்த பல்வேறு விதமான வேலைகளையும் முடித்துக் கொடுத்துள்ளார் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.
சேகர் ரெட்டி போயஸ் கார்டனுக்கும் முதல்வர் ஓ. பன்னீர் செல்வத்திற்கும் மிகவும் நெருக்கமானவர் என்பது உலகறிந்த விஷயம். இவர் வீட்டில் எடுக்கப்பட்ட ஆவணங்களால் இன்னும் பல முக்கிய புள்ளிகள் சிக்குவார்கள் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications