Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

குமட்டும் ஆபாசம்.. "ஸ்லீப்பர் கோச்" பஸ்ஸில், மூடிய ஸ்கிரீன்.. கண்ணே கூசுது..ங்க..வெடிக்கும் புலம்பல்

Subscribe to Oneindia Tamil

சென்னை: லாட்ஜ்களில் எப்படி ரெயிடுகள் நடத்தப்படுகிறதோ, அதுபோல, ஆம்னி ஸ்லீப்பர் கோச் பஸ்களிலும் ரெயிடுகள் அடிக்கடி நடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கைகள் எழ துவங்கி உள்ளன.

முன்புபோல் சாதாரண பஸ்கள் இல்லாமல், இப்போது ஆம்னி பஸ்கள் அதிகம் பெருக தொடங்கிவிட்டன. அதிலும் ஏசி பஸ் என்றால் சொல்லவே தேவையில்லை. மெத்தை, ஸ்க்ரீன், உட்பட ஏகபோக வசதிகளை கொண்டு உள்ளது.

இதில் கட்டணம் அதிகம்.. அதிலும் பண்டிகை காலங்களில் 3 மடங்கு அதிகம்.. எனினும், இதுபோன்ற ஆம்னி பஸ்கள், பயணிகளுக்கு சவுகரியத்தை தருகிறது.. அலைச்சல் இல்லாமல், குறிப்பிட்ட நேரத்திற்குள் ஊர்களுக்கு செல்ல முடிகிறது.. நேரத்தை மிச்சப்படுத்துகிறது..

What are the obscenities in omni buses and Prostitution in Omni Sleeper coach buses

ஸ்லீப்பர் கோச்: அதேசமயம், ஸ்லீப்பர் கோச்களில் அநாகரீக காரியங்களும் அதிகரித்துவருகின்றன.. பஸ்ஸுக்குள்ளேயே விபச்சாரம் நடப்பதாக நிறைய புகார்கள் போலீசாருக்கு வந்த வண்ணம் உள்ளன.. அதனால் ஆம்னி பஸ்கள் மீது நம் போலீசாரும் ஒரு கண் வைத்து அடிக்கடி தடாலடி சோதனைகளை நடத்தி, குற்றசெயல்களை குறைத்து வருகின்றனர்.

சேலம் சிறுமி: இப்படித்தான் 6 மாதத்துக்கு முன்பு சேலத்தில் ஒரு சம்பவம் நடந்தது.. சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே தலைவாசல் காட்டுக்கொட்டாயை சேர்ந்த சிறுமி அவர்.. 17 வயதுதான் ஆகிறது.. பிளஸ்-2 படித்து வருகிறார்.. இவருக்கு தினேஷ்குமார் என்பவர் பேஸ்புக்கில் அறிமுகமாகி உள்ளார்.. ஆத்தூர் வளையமாதேவியை சேர்ந்தவர் தினேஷ்குமார்.. 24 வயதாகிறது.. இந்நிலையில், மாணவியிடம், ஒருமுறை நேரில் சந்தித்து பேச வேண்டும் என்று கூறியுள்ளார்.. அதன்படியே மாணவியும் தினேஷை தேடி வந்தார்.

அப்போது, மாணவியை காதலிப்பதாகவும், திருமணம் செய்து கொள்வதாகவும் ஆசை வார்த்தை சொல்லியிருக்கிறார்.. ஒருகட்டத்தில் வீட்டை விட்டு வந்துவிடும்படியும், திருமணம் செய்து கொள்ளலாம் என்றும் தினேஷ்குமார் சொல்லி உள்ளார்.. இதை நம்பி அந்த சிறுமியும், கடந்த ஆகஸ்ட் 12ம் தேதி வீட்டில் இருந்து மாயமானார்... சிறுமியை அழைத்துக் கொண்டு, பஸ்ஸில் சிறுமியுடன் தினேஷ்குமாரும் வந்துள்ளார்..

ஸ்லீப்பர் கோச்: இருவருமே ஸ்லீப்பர் கோச்சில், ஸ்கிரீனால் மூடப்பட்ட படுக்கையில் வந்துள்ளனர்... உளுந்தூர்பேட்டை டோல்கேட் பகுதியில் பஸ் வந்தபோது, டிராபிக் ஜாம் ஆகிவிட்டது.. அதனால், ரொம்ப நேரம் பஸ் அங்கேயே நின்றுள்ளது... அந்த நேரத்தில்தான், சிறுமியை பஸ்ஸிலேயே தினேஷ்குமார் பாலியல் பலாத்காரம் செய்திருக்கிறார்.. மைனர் சிறுமியை சீரழித்த குற்றத்திற்காக தினேஷ் கைதானார்..

இப்படி தெரியாமல் நடக்கும் சம்பவங்கள் குறைவு என்றாலும், தெரிந்தே பாலியல் சேட்டைகளும், ஆபாசங்களும் நிறைந்து வழிகின்றன என்று நொந்து போய் சொல்கிறார்கள் ஆம்னி ஸ்லீப்பர் கோச் ஊழியர்கள்.. இதனால் பல்வேறு நடைமுறை சிக்கல்களையும், தங்கள் மீதான மிரட்டல்களையும், புகார்களையும் சந்திக்க நேரிடுவதாக புலம்புகிறார்கள்.. அவர்கள் சொல்வதாவது:

"ஸ்லீப்பர் கோச்சில், சொல்ல முடியாத அளவுக்கு ஆபாசம் கிடக்கும்.. பெண் பெயரிலேயே ஆண்கள் டிக்கெட்டை போட்டுவிடுவதால் எதையும் கண்டுபிடிக்க முடிவதில்லை.. உதாரணமாக, வெளியூர் மாணவி, சென்னை காலேஜில் படிக்கிறார் என்று வைத்து கொள்வோம்.. அந்த பெண், விடுமுறை முடிந்து மறுபடியும் சென்னை செல்ல நேரிடும்போது, அவரது பெற்றோர் ஆம்னியில் டிக்கெட் புக் செய்வார்கள்.. அப்போது, பஸ்ஸில் லேடீஸ் யாராவது புக் செய்திருக்கிறார்களா என்று பார்க்கிறார்கள்..

புக்கிங் சீட்டுகள்: டபுள் சீட்டுகளில், பக்கத்து சீட்டில் உள்ளவர்களும் பெண்களாகவே இருந்தால், அந்த பெண்ணுக்கு அங்கேயே சீட் போட்டுவிடுகிறார்கள்.. "பாப்பாவை பத்திரமாக கொண்டுபோய் இறக்கிவிட்டுடுங்கப்பா" என்று சொல்வார்கள்.. அடுத்த ஸ்டாப்பிங்கிலேயே, அந்த பக்கத்து சீட்டிற்கு ஒரு ஆண் வந்து ஏறுவார்.. இப்படி பெண்கள் பெயரில் டிக்கெட்டை முன்கூட்டியே புக்கிங் செய்துவிடுகிறார்கள்.

3 மணி நேர டிராவல் என்றாலும் சரி, 7 மணி நேர டிராவல் என்றாலும் சரி, அதை தவறாகவே பயன்படுத்தி கொள்கிறார்கள்.. ஆனால், எல்லாரும் அப்படி கிடையாது.. 10 சதவீதம்தான் இப்படி தவறுகள் நடக்கிறது.. வழியில் சாப்பிட நிறுத்திவிட்டு, மறுபடியும் பஸ்ஸை கிளப்பும்போது, வண்டியில் எல்லாரும் ஏறிவிட்டார்களா என்பதை நாங்கள் செக் செய்ய வேண்டும்.. ஒருத்தரை மிஸ் செய்துவிட்டாலும் அது, புகாராக மாறிவிடும். நாங்கள் கேட்டாலும் பதில் சொல்ல மாட்டார்கள்.. அதனால் ஸ்கிரீனை திறந்து பார்க்க வேண்டியதாக இருக்கு..

What are the obscenities in omni buses and Prostitution in Omni Sleeper coach buses

டிரஸ்கள்: அப்படி பார்க்கும்போது நிறைய தப்புதான் எங்கள் கண்ணில் படும்.. தலையில் அடித்து கொண்டுதான் அங்கிருந்து நகர வேண்டியிருக்கும்.. ஏன் இப்படி பார்க்கறீங்க என்று சில சமயம் எங்களிடம் சண்டைக்கும் வந்திருக்கிறார்கள்.. ஒருநாள் பார்த்தால், ஒரே பெர்த்தில், 4 ஆண்கள், 2 பெண்கள் இருக்கிறார்கள்.. பஸ்ஸூக்குள்ளேயே டிரஸ்ஸை கழட்டிட்டு அவ்ளோ அக்கிரமங்கள் நடக்குது..

பஸ்ஸிலேயே சிலர் தண்ணி அடிப்பார்கள்.. குடித்துவிட்டு பாட்டிலையும் இங்கேயே போட்டு போயிடுவாங்க.. வாந்தி எடுத்து வெச்சிருப்பாங்க.. பாட்டிலில் சிறுநீரை பிடித்து வைத்துவிட்டு போயிருப்பார்கள்.. நாங்கள் தண்ணி பாட்டில் கொடுக்க போனால், உடனே ஸ்கிரீனை திறந்துவிட மாட்டோம்.. அங்கேயே வெளியே நின்று சீட்டின் மேல் தட்டுவோம்.. அந்த சத்தம் கேட்டுகூட பதில் சொல்ல மாட்டார்கள்..

லாட்ஜ்கள்: லாட்ஜ்களில் ரெயிடு நடப்பதுபோல், பஸ்களில் ரெயிடு நடப்பதில்லை.. அதனால், ஆம்னி பஸ்களிலும் அடிக்கடி ரெய்டு நடத்த வேண்டும்.. லாட்ஜ்களில் பிடிபட்டவர்கள் மீது கேஸ் போடுவதுபோல, பஸ்ஸில் இப்படி நடந்து கொள்பவர்கள் மீதும் கேஸ் போட வேண்டும் என்று கோரிக்கை விடுக்கிறார்கள் ஆம்னி ஸ்லீப்பர் கோச் ஊழியர்கள்..!!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+