மோடிக்கு ஆஸ்திரேலியா பிரதமர் கொடுத்ததே திருட்டு சிலைதான்.. இப்படி சொல்லிடீங்களே எச்.ராஜா!
பிரதமர் மோடிக்கு ஆஸ்திரேலிய பிரதமர் பரிசளித்த நடராஜர் சிலை தமிழகத்தில் இருந்து கடத்தப்பட்ட சிலையே என்று எச்.ராஜா குற்றச்சாட்டு வைத்துள்ளார்.
Recommended Video

சென்னை: பிரதமர் மோடிக்கு ஆஸ்திரேலிய பிரதமர் பரிசளித்த நடராஜர் சிலை தமிழகத்தில் இருந்து கடத்தப்பட்ட சிலையே என்று எச்.ராஜா குற்றச்சாட்டு வைத்துள்ளார்.
பாஜகவை சேர்ந்த தேசிய செயலாளர் எச்.ராஜா எதையாவது பேசி சர்ச்சைகளில் சிக்கிக் கொள்வது வழக்கம். தமிழக கோவில் சிலை திருட்டு குறித்து இவர் தீவிரமாக பேசி வருகிறார்.
இந்த நிலையில் அவர் பிரதமர் மோடி குறித்தும், ஆஸ்திரேலியாவின் முன்னாள் பிரதமர் டோனி அப்பாட் குறித்தும் பேசியது சர்ச்சையாகி உள்ளது. ஆஸ்திரேலிய அரசு மீது குற்றச்சாட்டு வைக்கும் வகையில் அவர் பேசியுள்ளார்.

என்ன நடந்தது
ஆஸ்திரேலியாவின் முன்னாள் பிரதமர் டோனி அப்பாட் கடந்த 2014 செப்டம்பர் மாதம் இந்தியா வந்தார். அப்போது அவர் இந்திய பிரதமர் மோடிக்கு இரண்டு சிலைகளை பரிசளித்தார். அந்த சிலைகள் ஆஸ்திரேலியாவின் அரசு அரும்பொருள் கண்காட்சியகத்தில் வைக்கப்பட்டு இருந்த சிலை ஆகும்.

தமிழக சிலையா?
அந்த சிலைகள் இந்தியாவை சேர்ந்த சிலைகள் என்று கூறப்படுகிறது. தமிழகத்தை சேர்ந்தவை அந்த சிலைகள் என்றும் கூறப்பட்டு வருகிறது. இவர் 11 நூற்றாண்டை சேர்ந்தது என்று தகவல்கள் வருகிறது. இரண்டும் நடராஜர் சிலை என்பது குறிப்பிடத்தக்கது.

என்ன குற்றச்சாட்டு
இந்த நிலையில் பிரதமர் மோடிக்கு ஆஸ்திரேலிய பிரதமர் பரிசளித்த நடராஜர் சிலை தமிழகத்தில் இருந்து கடத்தப்பட்ட சிலையே, இங்கிருந்து முறையாக ஒன்னும் அங்கே எடுத்து செல்லப்படவில்லை என்று எச்.ராஜா குற்றச்சாட்டு வைத்துள்ளார். தமிழகத்தில் இருந்து திருடப்பட்ட சிலைதான் அது. அந்த திருடிய சிலையைதான் அவர் இந்தியாவிற்கு கொடுத்துள்ளார் என்று எச்.ராஜா கூறியுள்ளார்.
|
என்ன கேள்வி
இந்த நிலையில் சமூக வலைதளத்தில் எச்.ராஜாவின் இந்த பேட்டி மீண்டும் வைரலாகி உள்ளது. இவர் ''எச்.ராஜா மீண்டும் அழகாக பேசியுள்ளார். ஆஸ்திரேலியா பிரதமர் கொடுத்த அந்த சிலையை திருட்டு சிலை என்கிறார். இப்போது என்ன ஆஸ்திரேலிய பிரதமர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமா? இந்தியா பிரதமர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டுமா, இல்லை மோடியை சாட்சியமாக சேர்த்துக் கொள்ளலாமா'' என்று கேள்வி எழுப்பி இருக்கிறார்.
-
மன் கீ பாத்தில் மோடி சொன்ன லஸ்ஸி! கோடைக்கு குளிர்ச்சி தரும் ‘நம்கீன் லஸ்ஸி’! வீட்டிலேயே செய்யலாமே! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications