பல சிக்கல்கள்.. மணல் குவாரிகளை திறக்க லாரி உரிமையாளர்கள் கோரிக்கை.. என்ன முடிவெடுக்கும் தமிழக அரசு?

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மணல் குவாரிகளையும் அரசு இயக்க வேண்டும் என்று லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் தமிழக முதல்வருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த விவகாரத்தில் அரசு என்ன முடிவு எடுக்கும் என்ற பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர்கள் சங்கத் தலைவர் ஆர்.முனிரத்னம், முதல்வர் ஸ்டாலினுக்கு அனுப்பிய கடிதத்தில், “தமிழகத்தில் பெட்ரோல், டீசல் மீதான விற்பனை வரியை குறைக்க வேண்டும். இதன் மூலம் அத்தியாவசிய பொருட்கள் விலை குறையும். ஏற்கெனவே ஜிஎஸ்டி காரணமாக தொழில் நடத்த முடியாமல் தவித்து வரும் நிலையில், சாலை வரியும் உயர்த்தப்பட்டுள்ளது. இதைக் குறைக்க உத்தரவிட வேண்டும்.

what decision the government will take in sand quarrys issue

காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர் ஆகிய மாவட்டங்களில் இருந்து எம் சாண்ட், ஆற்று மணல் போன்றவற்றை சென்னைக்கு எடுத்து வரும்போது ஆண்டுக்கு ரூ.8 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை சுங்கவரியாக செலுத்த வேண்டியிருக்கிறது. இதனால் தொழில் அழியும் சூழல் உள்ளது. எனவே, தமிழகத்தில் உள்ள 26 காலாவதியான சுங்கச்சாவடிகளை அகற்றுவதோடு, சென்னைக்கு அருகே உள்ள அனைத்து சுங்கச்சாவடிகளையும் அகற்ற வேண்டும்.

மத்திய, மாநில அரசுகளின் கட்டுமானப் பணிகள், தனியார் குடியிருப்பு கட்டுமானம் போன்றவற்றுக்கு முழுமையாக மணல் கிடைப்பதில்லை. தற்போது ஆன்லைன் மூலம் அனைத்து மாவட்டங்களிலும் நாள் ஒன்றுக்கு சுமார் 300 லோடு மணல் தருகிறார்கள். ஆனால் சென்னை மற்றும் சுற்றுப்புற மாவட்டங்களில் கட்டுமானத் தொழிலுக்கு மட்டும் 3 ஆயிரம் லோடு மணல் தேவைப்படுகிறது. எனவே, மழைக்காலம் முடிந்த பிறகு அனைத்து மாவட்டங்களில் உள்ள 90 மணல் குவாரிகளையும் விரைவில் இயக்க வேண்டும்” என வலியுறுத்தியுள்ளார்.

மணல் குவாரிகள், விதிகளை மீறி அதிகளவில் மணல் கொள்ளையில் ஈடுபட்டதாகவும், முறைகேடுகளில் ஈடுபட்டதாகவும் புகார்கள் எழுந்த நிலையில், அமலாக்கத்துறையினர் மணல் குவாரிகளில் அதிரடி ரெய்டு நடத்தினர். இந்த விவகாரத்தில் விசாரணை தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்தச் சூழலில், அனைத்து மணல் குவாரிகளையும் இயக்க வேண்டும் என லாரி உரிமையாளர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். இந்த விவகாரத்தில் அரசு என்ன முடிவெடுக்கப்போகிறது என்ற பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+