அழகிரியிடம் ஆதரவு கேட்டேன்: வாழ்த்தி, எல்லாம் நல்லபடியாக நடக்கும் என்றார்- வைகோ
மதுரை: அழகிரியிடம் மதிமுக வேட்பாளர்களை ஆதரிக்குமாறு தான் கேட்டதற்கு அனைத்தும் நல்லபடியாக நடக்கும் என்று அவர் தெரிவித்ததாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
மதிமுக பொதுச் செயலாளர் வைகோ மதுரையில் உள்ள அழகிரி வீட்டுக்கு சென்று அவரை இன்று காலை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு சுமார் அரை மணிநேரம் நடந்தது.
அதன் பிறகு வைகோ செய்தியாளர்களிடம் கூறுகையில்,

அழைப்பு
அண்மையில் நானும், அழகிரியும் மதுரையில் இருந்து ஒரே விமானத்தில் பயணம் செய்தோம். அப்போது இருவரும் பேசி அன்பை பரிமாறினோம். அந்த சமயத்தில் தான் மதிமுகவுக்கு ஆதரவு அளிக்குமாறு அவரிடம் கேட்டேன். அவரோ வீட்டுக்கு வாருங்கள் என்றார். அதன் படி இன்று அவரை சந்தித்து பேசினேன்.

சினிமா பாடல்கள்
இன்று நாங்கள் இருவரும் பழைய நினைவுகளை பரிமாறினோம். இருவருக்கும் பழைய சினிமா பாடல்கள் என்றால் மிகவும் பிடிக்கும். அழகிரிக்கு பழைய சினிமா பாடல்கள் கேட்பது மிகவும் பிடிக்கும். நாங்கள் ஏற்கனவே பழைய பாடல்கள் அடங்கிய சி.டி.க்களை பரிமாறிக் கொண்டிருக்கிறோம்.

சி.டி.
நான் அமெரிக்கா சென்றபோது அங்கிருந்து செங்கிஸ்கான் சிடி வாங்கி வந்து அழகிரிக்கு கொடுத்தேன். கடந்த 1993ம் ஆண்டு நான் அழகிரியை அவரது வீட்டில் சந்தித்து பேசியதை அவர் நினைவு கூர்ந்தார். இருவரும் பழைய நினைவுகளை பரிமாறினோம்.

ஆதரவு
வரும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் மதிமுக வேட்பாளர்களுக்கு ஆதரவு அளிக்குமாறு அழகிரியிடம் கேட்டேன். அவரும் வாழ்த்திவிட்டு, அனைத்தும் நல்லபடியாக நடக்கும் என்றார்.
-
காவி வண்ணத்தில் வள்ளுவர்., ஆளுநர் செய்தது அயோக்கியத்தனம்! வெடித்துக் கிளம்பிய வைகோ! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications