காலையில் இருந்து இரவு வரை விஜய்யின் வீட்டை சல்லடையாய் சலித்த ஐ.டி. அதிகாரிகள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: வருமான வரித்துறை அதிகாரிகள் 7 பேர் 4 கார்களில் விஜய்யின் வீட்டிற்கு வந்து நாள் முழுவதும் சோதனை நடத்தியுள்ளனர்.

விஜய்யின் புலி படம் கணக்கில் காட்டப்படாத பணத்தில் எடுக்கப்பட்டதாக வருமான வரித்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து விஜய்யின் வீடு, அலுவலகம், புலி படக்குழுவினரின் வீடுகளில் வருமான வரித்துறை அதிகாரிகள் புதன்கிழமை அதிரடி சோதனை நடத்தினர்.

சோதனையின்போது விஜய் வீட்டில் நடந்தது பற்றிய தகவல் கிடைத்துள்ளது.

7 அதிகாரிகள்

7 அதிகாரிகள்

வருமான வரித்துறையைச் சேர்ந்த 7 அதிகாரிகள் 4 கார்களில் சென்னை நீலாங்கரையில் உள்ள விஜய்யின் வீட்டிற்கு காலை 7 மணிக்கு வந்துள்ளனர்.

தீவிர சோதனை

தீவிர சோதனை

அதிகாரிகள் விஜய்யின் வீட்டிற்குள் நுழைந்ததும் கேட்டை இழுத்து பூட்டியுள்ளனர். வீட்டில் உள்ள ஒவ்வொரு அறையாக சென்று தீவிர சோதனை நடத்தியுள்ளனர். அங்கு இருந்த ஆவணங்களை ஆய்வு செய்துள்ளனர்.

விஜய்

விஜய்

சோதனை நடந்தபோது வீட்டில் விஜய்யும், அவரது மனைவி சங்கீதாவும் இருந்துள்ளனர். அவர்கள் அதிகாரிகள் கேட்ட கேள்விகளுக்கு பொறுமையாக பதில் அளித்துள்ளனர்.

ஆடிட்டர்கள்

ஆடிட்டர்கள்

விஜய்யின் வீட்டில் சோதனை நடப்பது பற்றி அறிந்து அவரின் ஆடிட்டர்கள் 3 பேர் அங்கு வந்தனர். ஆனால் வருமான வரித்துறையினர் அவர்களை வீட்டிற்குள் விடாமல் திருப்பி அனுப்பிவிட்டனர்.

இரவு வரை

இரவு வரை

காலை 7 மணிக்கு வந்த அதிகாரிகள் விஜய்யின் வீட்டையே புறட்டிப்போட்டு இரவு வரை சோதனை நடத்தியுள்ளனர். விஜய்யின் வீட்டில் சோதனை நடந்த அதே நேரத்தில் விருகம்பாக்கத்தில் உள்ள அவரின் அலுவலகத்திலும் வருமான வரித்துறை அதிகாரிகள் குழு சோதனை நடத்தியது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+