அப்ப ஆனந்தன் மீதான இந்தப் புகாரையெல்லாம் காக்கா தூக்கிப் போச்...?
சென்னை: மீண்டும் அமைச்சராகியுள்ளார் எம்.எஸ்.எம். ஆனந்தன். ஆனால் இவர் அமைச்சர் பதவியிலிருந்து நீக்கப்படுவதற்கு சில பரபரப்புக் காரணங்கள் கூறப்பட்டன. ஆனால் அந்தப் புகாரெல்லாம் தற்போது என்னவானது என்பதுதான் புரியவில்லை.
ஓ.பன்னீர் செல்வம் முதல்வராவதற்கு முன்பு ஜெயலலிதா ஆட்சியில் அமைச்சராக இருந்தவர் ஆனந்தன். ஜெயலலிதா சிறைக்குச் சென்ற பின்னர் ஓ.பன்னீர் செல்வம் முதல்வரானபோது இவரும் அமைச்சராக தொடர்ந்தார்.
ஆனால் ஜெயலலிதா மீண்டும் முதல்வரானபோது இவர் மட்டும் விடுபட்டார். மற்ற அமைச்சர்களை மீண்டும் எடுத்துக் கொண்டார் முதல்வர் ஜெயலலிதா. ஆனந்தன் மட்டும் நீக்கப்பட என்ன காரணம் என்பது அப்போது பகிரங்கமாக தெரிவிக்கப்படவில்லை.

பெண் அளித்த புகார்
இருப்பினும் இதுதான் காரணமாக இருக்க முடியும் என்று அனுமானிக்கும் அளவுக்கு சில விஷயங்கள் வெளிப்படையாக தெரிந்தன. ஆனந்தன் மீது ஜெயமணி என்ற பெண் கொடுத்த பரபரப்பு புகார்கள் அதில் ஒன்று.

பரபரப்புப் புகார்
ஜெயமணி அதிமுகவில் இருந்தவர். அவர் ஆனந்தன் மீது பரபரப்பு புகார்களை ஜூனியர் விகடன் இதழுக்கு அளித்த பேட்டியில் கூறியிருந்தார். அவர் கூறியதாக ஜூனியர் விகடன் சொன்ன செய்தியில், வனத்துறை அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தனுக்கும் எனக்கும் நெருக்கமான பழக்கம் இருந்துச்சு. அப்போ, அமைச்சர் மேல கார்டனுக்கு நிறைய புகார் போயிட்டு இருந்துச்சு. அந்தப் புகார் எல்லாம் அம்மா கவனத்துக்குப் போகாம இருக்க கார்டன்ல இருக்குற ஒருத்தரை அட்ஜெஸ்ட் செய்யணும்னு மிரட்டினார். நான் அதுக்கு ஒத்துக்கலை. அதனால என்னை அடிச்சு சித்ரவதை செஞ்சார். போற இடத்துல எல்லாம் என்னை அவமானப்படுத்தினார். எல்லாத்துக்கும் மேல என்னை கட்சியில இருந்து நீக்கவும் செஞ்சுட்டார். சேர்ந்து பிசினஸ் செய்யலாம்னு என்கிட்ட ஒரு கோடி ரூபாயை வாங்கிட்டு ஏமாத்திட்டார்" என்று பகிரங்கமாக கூறியிருந்தார் ஜெயமணி.

சொத்துப் பட்டியலை வெளியிடப் போவதாக மிரட்டல்
மேலும் அப்போதைய முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் வரைக்கும் புகார் அளித்தார் ஜெயமணி. இருப்பினும் அது கண்டுகொள்ள்படவில்லை என்று கூறப்படுகிறது. இதையடுத்து அனந்தனிடம் ரூ. 400 கோடி அளவுக்கு சொத்து உள்ளது. அந்தப் பட்டியலை வெளியிடுவேன் என்று கூட கூறிப் பார்த்தார் ஜெயமணி. அப்போதும் அனந்தன் மீது நடவடிக்கை பாயவில்லை.

ஜெயலலிதா வந்ததும்
இந்த நிலையில்தான் ஜெயலலிதா மீண்டும் முதல்வரானார். அப்போது ஆனந்தன் அமைச்சரவையில் சேர்க்கப்படவில்லை. அவர் மீதான ஜெயமணியின் புகார்களும், கட்சியினர் தரப்பில் வந்த புகார்களுமே ஆனந்தன் பதவியிழக்க காரணம் என்று அப்போது கூறப்பட்டது.

மீண்டும் அதே துறை
முன்பும் வனத்துறை அமைச்சராகத்தான் இருந்தார் ஆனந்தன். தற்போது மீண்டும் அதே வனத்துறையையே பெறுகிறார். திருப்பூர் வடக்குத் தொகுதியில் இருந்து தமிழக சட்டசபைக்கு எம்.எல்.ஏவாக தேர்வு செய்யப்பட்ட எம்.எஸ்.எம் ஆனந்தன் எஸ்.எஸ்.எல்.சி வரை படித்துள்ளார். திருப்பூர் அதிமுக மாவட்ட செயலாளராகவும் இருந்து வருகிறார்.

புகார் என்னாச்சு
ஆனந்தன் மீது அவ்வளவு பெரிய புகார்கள் குவிந்த நிலையில் அதன் பின்னணியில் அவர் அமைச்சர் பதவியை இழந்த நிலையில் தற்போது மீண்டும் அவர் அமைச்சராகியிருப்பதால் அவர் மீதான புகார்கள் என்னவாயின என்ற கேள்வியை மக்கள் எழுப்பி வருகின்றனர்.
-
தேசிய ஜனநாயக கூட்டணியில் விஜய்.. நெருங்கும் பேச்சுவார்த்தை.. ஒரே வார்த்தையில் உடைத்த சரத்குமார் -
அமெரிக்காவை அசரடித்த அம்பானி.. ரூ.27 லட்சம் கோடி முதலீடு செய்யும் ரிலையன்ஸ்.. டிரம்ப் அறிவிப்பு -
எங்க கொண்டு போய் விட்டுடுச்சி பாருங்க.. கேஸ் தட்டுப்பாட்டால், ஸ்விக்கி, ஜொமோட்டோ டெலிவரி குறைந்தது! -
7 பொதுத்தொகுதி + 2 தனித்தொகுதி.. அதிமுக கூட்டணியில் டிடிவிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் இதுதான்! -
அமெரிக்கா இனி பிக்பாஸ் இல்லை.. நீங்க நம்பலைனாலும் அதான் நெசம்.. ஐக்கிய அரபு சகாப்தமும் வீழ்ந்தது! -
பிரேமலதாவிற்கு திமுகவின் அடுத்த ‘சர்ப்ரைஸ்'.. தேமுதிகவிற்கு தாராளம் காட்டும் ஸ்டாலின்.. காங்கிரஸ்க்கு அடி -
3 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய்யை வாங்கி குவித்த இந்திய நிறுவனங்கள்! ரஷ்யாவுக்கு கொட்டும் பண மழை! -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
கடலில் இறக்கப்பட்ட கண்ணி வெடி! எக்குத்தப்பாய் வந்து சிக்கிய அமெரிக்கா! வால் ஸ்ட்ரீட் ஜர்னல் வார்னிங் -
ஒருவேளை உண்மையா இருக்குமோ.. என்டிஏ கூட்டணியில் விஜய்! மாஜி அமைச்சர் கடம்பூர் ராஜூ சொன்ன வார்த்தை! -
துணை முதல்வர் எல்லாம் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் வேலை.. 2.5 வருஷம் முதல்வர் பதவி.. பாஜகவிடம் விஜய் டிமாண்ட் -
தமிழகத்தில் மீண்டும் ஆட்சியை பிடிக்கும் ஸ்டாலின்! 2-வது இடம் யாருக்கு? வெளியான புதிய கருத்துக்கணிப்பு












Click it and Unblock the Notifications