மயிலாடுதுறையில் பிரிட்ஜ்ஜில் பழுது நீக்கிய கடை .ஓனருக்கு.. கம்பரசரால் கனவிலும் நினைக்காத சம்பவம்
மயிலாடுதுறை: பிாிட்ஜ் இல்லாத வீடுகளை விரல் விட்டு எண்ணலாம் என்கிற நிலை தமிழ்நாட்டில் உருவாகி வருகிறது. அந்த அளவிற்கு பயன்பாடு அதிகமாக உள்ளது. பிரிட்ஜை பொறுத்தவரை கூலிங்கை தருவது கம்ப்ரசர் தான். அது பழுதாகும் நிலை வந்தால் உடனே கவனிப்பது நல்லது. சில நேரங்களில் நினைத்தே பார்க்க முடியாத எதிர்பாராத நிகழ்வுகள் நடந்து விடும். மயிலாடுதுறையில் மின்சாதன பொருட்கள் பழுது நீக்கும் கடையில் நடந்த சம்பவம் பற்றி பார்ப்போம்.
பிரிட்ஜ் என்பது நம்முடைய தினசரி வாழ்க்கையில் முக்கியமானதாக இருக்கிறது. பால் முதல் பழம் வரை, ஐஸ்கிரீம் முதல் கறிகுழம்பு வரை பிரிட்ஜில் வைக்கப்படுகிறது. ஒரு நாள் சட்னி வைத்து 2 நாளைக்கு அதையே சாப்பிடுபவர்களும் இருக்கிறார்கள். அதேபோல் குழப்பு வைத்து அதையே 3 நாள் சூடு செய்து சாப்பிடுபவர்களும் இருக்கிறார்கள்.

கெட்டுப்போகாமல் உணவை பாதுகாக்க உதவும் பிரிட்ஜ், குளுகுளுவென குளிர்பானங்களையும் வைத்திருக்க உதவுகிறது. குளிர்சாதன பெட்டியில் கம்ப்ரசர் தான் முக்கியமானது. இது மிகவும் சூடாகும் போது வெடித்து விட வாய்ப்பு உள்ளது. அதாவது பழுதாகி இருக்கும் போது வெடித்து விட வாய்ப்பு உள்ளது.
குளிர்சாதனப் பெட்டியானது அதிக வெப்பத்திற்கு உட்படுத்தப்படும் போது அல்லது சரியான குளிரூட்டல் இல்லாமல் நீண்ட நேரம் செயல்படும்போது கம்ப்ரஸர் வெப்பமடைந்து வெடிக்கிறது. அதேநேரம் பழுது பார்க்கும் போதும், சில நேரங்களில் கம்ப்ரசர் வெடிப்பது உண்டு.. அப்படியொரு சம்பவம் தான் மயிலாடுதுறையில் நடந்துள்ளது.
மயிலாடுதுறை கூறைநாடு திருமஞ்சன வீதியை சேர்ந்த 53 வயதாகும் பாலாஜி என்பவர் மயிலாடுதுறை காமராஜர் பஸ் நிலையம் அருகே ஏ.சி., பிரிட்ஜ் உள்ளிட்ட மின்சாதன பொருட்கள் பழுது நீக்கும் கடை நடத்தி வந்திருக்கிறார். இவருடைய கடையில் கணேஷ்(26) வேலை பார்த்து வருகிறார். இந்த கடையில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த மக்கள் தங்கள் வீடுகளில் பழுதடைந்த பிரிட்ஜ், ஏ.சி. உள்ளிட்ட வீட்டு உபயோக பொருட்களை பழுதுநீக்க கொடுத்திருக்கிறார்.
நேற்று மதியம் கடை உரிமையாளர் பாலாஜி கடையில் வைத்து ஒரு பிரிட்ஜில் பழுது நீக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார். அவரது அருகே ஊழியர் கணேஷ் இருந்தாா். பிரிட்ஜில் பாலாஜி பழுது நீக்கி கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக அதனுடன் இணைக்கப்பட்டிருந்த 'கம்ப்ரசர்' பயங்கர சத்தத்துடன் வெடித்தது. அப்போது கடை உரிமையாளர் பாலாஜி தலையில் காயம் அடைந்தார். அருகில் இருந்த ஊழியர் கணேசுக்கும் காயம் ஏற்பட்டது.
இதை கண்ட அக்கம் பக்கத்தினர், கடைக்குள் காயமடைந்து கிடந்த உரிமையாளர் பாலாஜி மற்றும் ஊழியர் கணேசை மீட்டு சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர்களை பரிசோதனை செய்த டாக்டர்கள் பாலாஜி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். கணேஷ் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். சம்பவம் குறித்து மயிலாதுறை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications