அண்ணாத்தே.. பேட்மேன் மட்டும் இன்னேரம் சென்னையில பொறந்திருந்தார்னு வைய்யேன்....!
சென்னை: சூப்பர்ஹீரோ பேட்மேன் சென்னையில் பிறந்திருந்தால் எப்படி இருந்திருக்கும் என்ற கற்பனையை வீடியோவாக்கி யூடியூப்பில் வெளியிட்டிருக்கிறார்கள். புட் சண்டி வெளியிட்டுள்ள இந்த வீடியோ வைரலாகியுள்ளது.
உலகப் புகழ் பெற்ற சூப்பர் ஹீரோ பேட்மேன். இவர் சென்னையில் பிறந்திருந்தால் அவருடைய தினசரி வாழ்க்கையில் என்னென்ன மாதிரியான சவால்களை எதிர்கொள்வார் என்ற கோணத்தில் நகைச்சுவையாக இந்த வீடியோ உருவாக்கப் பட்டுள்ளது.

இந்த வீடியோவில் பேட்மேனின் சித்தப்பாவாக டெல்லி கணேஷ் நடித்துள்ளார்.
8 நிமிடம் ஓடுகிறது இந்த வீடியோ. இதில் பேட்மேனின் புரூஸ் வாய்னே என்ற பெயர் புருஷோத்தமன் வெங்கட்ராமன் என்று குறிக்கப்படுகிறது.
காலையில் கையில் பேப்பரும், பால் பாக்கெட்டுமாக வந்து நிற்பதில் இருந்து, வண்டியில் செல்லும் போது துப்பட்டாவைப் பத்திரமாக எடுத்து வைக்கச் சொல்வது என யதார்த்தமான காட்சிகள் ரசிக்க வைக்கிறது, நன்றாக சிரிக்க வைக்கிறது.
பதிவேற்றம் செய்த சில மணி நேரங்களிலேயே இந்த வீடியோ வைரலாகியுள்ளது.
ஏற்கனவே கல்சர் மெஷின் (Culture Machine) என்ற பெயரில் யூடியூபில் பல்வேறு சுவாரசிய வீடியோக்களைப் பதிவேற்றிய வீடியோ நிறுவனம் தான், தற்போது தென்னிந்திய மக்களைக் குறிவைத்து புட் சட்னி என்ற பெயரில் புதிய யூடியூப் சானலோடு களமிறங்கியுள்ளது.
தொடர்ந்து கிரிக்கெட் நம்பிக்கைகள், பொறியியல் படித்த இளைஞனின் வாழ்க்கை, வாழை இலையில் சாப்பிடுவது என பல்வேறு வகையான நகைச்சுவை வீடியோக்களை புட் சட்னி பதிவேற்றவுள்ளது.
-
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications