இசையமைப்பாளருக்குதான் பாடல் முழுமையாக சொந்தமா? காப்புரிமை சட்டம் சொல்வது என்ன?
சென்னை: இசையமைப்பாளர்கள் மட்டுமே பாடலுக்கு உரிமை கொண்டாட முடியுமா, அல்லது கவிஞரும் கொண்டாட முடியுமா, யாருக்குப் பாடல் சொந்தம்? யாருக்கு இசை சொந்தம்? என்று பலரும் கருத்துச் சொல்லி வருகிறார்கள்.
உதாரணத்திற்கு இளையராஜாவை எடுத்துக்கொள்ளலாம். தனது பாடல்களுக்கு ராயல்டி கொடுக்க வேண்டும் என்று 1985களிலேயே இந்தக் கருத்தை முன்வைக்கத் தொடங்கி இருந்தார். ஆனால், இளையராஜா சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப் பல ஆண்டுகள் காத்திருந்தார். கடந்த சில ஆண்டுகள் முன்னால் அவர் அதற்காக நடவடிக்கைகளில் இறங்கினார்.

உடனடியாக தன்னைக் கேட்காமல் தனது பாடல்களைப் பாடக்கூடாது என்று வக்கீல் நோட்டீஸ் அனுப்ப ஆரம்பித்திருந்தார். அது எஸ்பிபியுடன் சம்பந்தப்பட்டிருந்ததால் மிகப்பெரிய சர்ச்சையாக அது வெடித்தது. ஆனால் அப்போதும் கூட எஸ்பிபி கோபம் கொள்ளாமல் நாகரிகமாக நடந்துகொண்டார்.
எஸ்பிபிக்கு நடந்த கசப்பான அனுபவம்: 2017 ஏப்ரல் மாதம் இந்த விகாரம் அணுக்குண்டாக வெடித்தது. அப்போது அதிகம் அடிப்பட்ட பெயர் எஸ்.பி.பி.தான். அப்போது அவர் தனது 50 வருட இசைப் பயணத்தை மிகச் சிறப்பாக அமெரிக்காவில் உள்ள ஹூஸ்டன் நகரில் கொண்டாடிக் கொண்டிருந்தார்.
அங்கு நடந்த கச்சேரியில் அவர் ராஜா பாடல்கள் எதையும் பாடவே இல்லை. இந்தச் சம்பவம் உங்கள் மனதைப் பாதித்ததா என்று கேட்டதற்கு, "மனதைப் பாதித்தது உண்மைதான். ஆனால் என் நிகழ்ச்சியை அது பாதிக்கவில்லை.
இளையராஜா எனது நண்பர். நான் இனிமேல் இளையராஜா பாடல்களைப் பாடுவேனா என்பதைக் காலம்தான் தீர்மானிக்க வேண்டும். எந்தப் பாடலும் எனக்குச் சொந்தம் என்று நினைப்பவன் நான் இல்லை.

ஒரு பாடலில் 35% பங்களிப்புதான் என்னுடையது. மற்ற அனைத்தும் இசையமைப்பாளர், இசைக் கருவிகளை இசைக்கும் கலைஞர்கள், அதைப் பதிவு செய்யும் ஒலிப்பதிவாளர், அதைப் படமாக்க எடுக்கும் இயக்குநர், தயாரிப்பாளர், ஒளிப்பதிவாளர் என அனைவரையும் சேரும்" என்று சொல்லி இருந்தார்.
இதனைத் தொடர்ந்து சர்ச்சைக்கு விளக்கம் அளிக்கும் வகையில் இளையராஜா கடந்த 2018 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ஒரு வீடியோ பதிவை வெளியிட்டிருந்தார்.
இளையராஜா கொடுத்த விளக்கம்: அதில் இளையராஜா, "எனது பாடல்களைப் பாட விரும்பும் இசைக்கலைஞர்கள் முன் அனுமதி பெற்று, அதற்கான முறையான நடவடிக்கைகளைச் செய்துவிட்டு அதன்பிறகு பாடுவதே முறை. இல்லை என்றால் சட்டப்படி குற்றமாகும்.
என்னிடம் முன் அனுமதி பெறாமல் பாடுபவர்களும் அதற்கு மேடைகளில் இசையமைத்து கச்சேரி நடத்துபவர்களும் இப்படியான செய்தல் தவறு என்பதை உணர வேண்டும். மீறித் தொடர்ந்து பாடினால் அவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இதுவரை ஐபிஆர்எஸ் அமைப்பில் உறுப்பினராக இருந்தேன். ஆனால், இப்போது அதில் நான் இல்லை. இதுவரை எனது இசைப் பாடல்களுக்கான ராயல்டியை இந்த அமைப்புதான் வசூலித்து வந்தது. ஆனால் அந்த உரிமையைத் தென்னிந்தியத் திரைப்பட இசைக்கலைஞர்கள் சங்கத்திற்கு அந்த உரிமையை நான் வழங்கி இருக்கிறேன்.

பலரும் தவறாக நினைத்துக் கொள்கிறார்கள். நான் பாடகர்கள் பாடுவதற்குத் தடை போடவில்லை. நான் நீங்கள் பெறுகின்ற ஊதியத்திற்குத்தான் ராயல்டி கேட்கிறேன். ஒருவேளை பாடகர்கள் இலவசமாகப் பாடினால் எனக்கு ராயல்டி தர வேண்டாம். பணம் பெற்றுக் கொண்டு பாடினால்தான் ராயல்டி கேட்கிறேன். அதை நீங்கள் சரியாகப் புரிந்து கொள்ள வேண்டும்.
என் பாட்டைப் பாடுகிறீர்கள். அதற்குப் பணம் வாங்குகிறீர்கள். அப்படி என்றால் அதில் எனக்குப் பங்கு இல்லையா?" என்று உரிமை கோரியிருந்தார். இளையராஜா சொல்வதைப் போல ஐபிஆர்எஸ் என்ற அமைப்பு இசைக்காக இளையராஜாவுக்கு ராயல்டியை பெற்றுத் தருவதைப் போல் பாடலாசிரியர்களுக்கும் அது உரிய ராயல்டியை பெற்றுத் தருகிறது. அதன் மூலம் பாடலாசிரியர்கள் லட்சக் கணக்கில் ராயல்டி பெற்று வருகிறார்கள்.
இளையராஜா விவகாரத்தைப் பேசும் பலர் பாடலாசிரியர்களுக்குப் பணம் கிடைப்பது இல்லை என்பதைப் போன்று அறியாமையில் பேசுகிறார்கள். எஸ்பிபியை மனதில் வைத்து ராஜா ராயல்டி சர்ச்சையில் இறங்கவில்லை. அந்தப் பிரச்சினை நடந்து கொண்டிருந்த போது எஸ்பிபியின் 50வது விழா வந்தது. அப்படியே அவர் பக்கம் அந்தச் சர்ச்சை திரும்பிவிட்டது.
அண்ணனுக்கு எதிராக மாறிய தம்பி: இந்தச் சண்டையில் எஸ்பிபிக்கு ஆதரவாகக் கங்கை அமரன் களம் இறங்கி இருந்தார். அவர், "எனக்கு ராயல்டி கொடுத்துவிட்டுத் தான் மக்கள் இந்தப் பாடல்களைக் கேட்க வேண்டும் என்று இளையராஜா கேட்க முடியுமா? அது அசிங்கமாக இல்லையா?

இளையராஜா பாடின தியாகராஜா கீர்த்தனைகளுக்கும் எம்.எஸ்.வி பாடல்களுக்கும் முன்னுரிமை வாங்கிக் கொண்டுதான் பாடினாரா? அப்படி நடந்துள்ளதா? இது கேவலம்" என்று கடுமையாகச் சொந்த அண்ணனையே சாடி இருந்தார்.
அறிவுசார் காப்புரிமை சட்டம் சொல்வது என்ன?
பாடல் வரிகளுக்காக உரிமை பாடலாசிரியர்களுக்குத்தான். இசை அமைப்பதற்கான உரிமை மட்டும்தான் இசையமைப்பாளரைச் சேரும். இந்த இரண்டும் இணைந்த திரையிசைப் பாடல்களின் காப்புரிமை என்பது இசை நிறுவனங்களுக்கே சொந்தம் என்கிறது காப்புரிமை சட்டம்.
அடுத்துப் பாடல்களைப் பாடிய பாடகர்களுக்கு 50 ஆண்டுகளுக்கான Performer உரிமைகள் சட்டத்தில் வழங்கப்பட்டுள்ளன. அப்படிப் பார்த்தால் ஒரு பாடகரின் பாடல்கள் வணிக ரீதியாக உபயோகிக்கப்படும்போது அதற்கான ராயல்டியை தரவேண்டும் என்கிறது சட்டம்.
இப்படியான காப்புரிமையை இசையமைப்பாளர் அல்லது பாடலாசிரியர், பாடகர் ஆகியவர்கள் தாங்கள் விரும்பு நபருக்குக் கொடுக்கலாம். அதைக் காப்புரிமைச் சட்டம் அனுமதிக்கிறது.
இதைப் போன்ற காப்புரிமையைப் பெற்றவர் ஒருவேளை மறைந்து விட்டால், அதன் பிறகு வரும் 60 ஆண்டுகள் வரை அந்த உரிமை அவரே கோர முடியும். அல்லது அவரது மரபு வழியினர் கோரலாம்.
அதாவது ஒரு எழுத்தாளர் மறைந்த ஆண்டு தொடங்கிப் பின்வரும் 60 ஆண்டுகள் வரை அந்தப் படைப்புக்காக உரிமை எழுத்தாளருக்கே உண்டு. 60 ஆண்டுகள் ஆன பிறகு அந்தப் படைப்பு பொதுவெளிக்கு வந்துவிடும். அதற்கு யாரும் உரிமை கோர முடியாது. இதுவே காப்புரிமை சட்டம் சொல்லும் தகவல். அப்படிப் பார்த்தால், இளையராஜா முழுப் பாடல்களுக்கான உரிமையைக் கேட்கவில்லை. அவர் இசையமைத்தற்கான உரிமையை மட்டுமே கேட்கிறார். இதைப் பலரும் புரிந்து கொள்ளாமல் ராஜாவை விமர்சிக்கின்றனர்.
ஒரு நாவலை ஒருவர் விலை கொடுத்து வாங்குகிறார் என்று வைத்துக் கொள்வோம். அவர் கொடுத்த பணத்திற்காக நாவலைப் படிக்கலாம். அந்தக் கதையை மற்றவர்களிடம் பகிர்ந்தும் கொள்ளலாம்.
அவர்தான் பணம் கொடுத்து வாங்கிவிட்டார் என்பதற்காக அதை அப்படியே அச்சடித்து விற்க முடியாது. அது காப்பி ரைட் ஆக்டில் வரும். முறையாக அந்த நாவலாசிரியரின் அனுமதியைப் பெற்றே அச்சடித்து விற்பனை செய்ய முடியும்.
இதில் பிரச்சினை என்னவென்றால் சிவில் கேஸ் என்று நீதிமன்றம் சென்றாலே உரியத் தீர்ப்பைப் பெறப் பல ஆண்டுகள் ஆகும். இந்தியாவில் காப்புரிமை சட்டம் என்பது கறாராக இல்லை. அதில் சில ஓட்டுகள் உள்ளன. சர்வதேச காப்பி ரைட் ஆக்ட் என்பது மிகக் கண்டிப்புடன் உள்ளது.
ஆகவே, வெளிநாடுகளில் அறிவுசார் காப்புரிமையை மீறுவது என்பது மற்ற குற்றங்களைவிட, மிகப்பெரியதாகப் பார்க்கப்படுகிறது. இந்தியாவில் அதற்காக உரிமைக் கேட்டாலே வழக்குப் போட்டவரை விமர்சிக்கும் சூழல்தான் நிலவுகிறது.
-
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
எங்கிட்ட எப்படி ஆதரவு கேட்கலாம்? கவுண்டம்பாளையம் அதிமுக வேட்பாளரிடம் சொன்ன வார்த்தை.. பின்னணி -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
அதிமுக, தமிழக வெற்றிக் கழகம்.. மொத்தமாக கேம் ஓவர்.. அடித்து சொல்லும் 3 பெரிய கருத்து கணிப்புகள்!












Click it and Unblock the Notifications