குற்றாலம் ஐந்துருவி சொகுசு லாட்ஜ்.. ஆண்கள் மத்தியில் அவ்வளவு கிராக்கி.. உள்ளே பார்த்து மிரண்ட போலீஸ்
தென்காசி: தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் தற்போது சீசன் களைகட்ட தொடங்கி உள்ளது. ஐந்தருவில் உள்ள தனியார் விடுதியில் 'ஸ்பா' என்ற பெயரில் ஆண்களுக்கு மசாஜ் செய்யும் சென்டர் திடீரென பிரபலம் ஆகி உள்ளது. அங்கு சென்று போலீசார் விசாரித்த போது தான் அங்கு என்ன நடந்தது என்பது தெரியவந்துள்ளது.
தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் ஏராளமான அருவிகள் உள்ளன. மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்யும் மழை, மெயின் அருவி, பழைய குற்றலாம், ஐந்தருவி, தேனருவி, புலிவால் அருவி என ஏராளமானஅருவிகள் உள்ளன. கேரளாவில் மழைக்காலம் தொடங்கிய பின்னர், குற்றாலத்தில் சாரல் மழை விழுந்த கொண்டு இருக்கும்.

குற்றாலத்தில் ஜூன், ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர் ஆகிய நான்கு மாதங்கள் சீசன் களைகட்டும். சாரல் மழையில் நனைந்து அருவிகளில் குளிப்பது மற்றும் அங்கு தற்போது குளுகுளு கால நிலையை அனுபவிப்பது அருமையான அனுபவம் ஆக இருக்கும்.
குற்றாலத்தில் தற்போது சீசன் களைகட்டியுள்ளது. மலையில் சென்று மலையில் நனைந்து, அருவியில் குளித்து, பிடித்த உணவுகளை சமைத்து சாப்பிட்டு, அந்த பகுதியை சுற்றிபார்ப்பது என்பது பலருக்கும் பேரானந்தமாக இருக்கும். குற்றால சீசன் நன்றாக உள்ள காலக்கட்டத்தில் தமிழகம் மட்டுமல்லாமல் பிற மாநிலங்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் ஏராளமானோர் வருவார்கள்.
அந்த வகையில் குற்றாலத்திற்கு தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் தற்போது வந்த வண்ணம் உள்ளனர். குற்றாலத்தில் அருவியில் குளிக்க விரும்புவோருக்கு வசதியாக பல்வேறு தனியார் தங்கும் விடுதிகளில் மசாஜ் சென்டர்கள் இயங்குகின்றன. 'ஸ்பா' என்று பெயரில் தனியார் விடுதிகளில் இயங்கும் இந்த மசாஜ் சென்டர்கள் ஏக பிரபலம் ஆகும். இங்கு பெரும்பாலும் ஆண்களுக்கு பெண்களே மசாஜ் செய்து வருகிறார்கள்.
இந்நிலையில் ஐந்தருவி சாலையில் அமைந்துள்ள ஒரு தனியார் தங்கும் விடுதியில் 'ஸ்பா' என்ற பெயரில் பெண்களை வைத்து விபசாரம் நடைபெறுவதாக குற்றாலம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுரேஷ்குமார் இதுகுறித்து சோதனை நடத்தி, உடனடியாக நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். அதன்பேரில், குற்றாலம் போலீசார் நேற்று அந்த தனியார் தங்கும் விடுதிக்கு விரைந்து சென்று அதிரடியாக சோதனை செய்தார்கள்..

அப்போது அங்கு 'ஸ்பா' என்ற பெயரில் பெண்களை வைத்து விபசாரம் நடத்தி வந்ததை அவர்கள் கண்டுபிடித்தனர். இதுதொடர்பாக அங்கிருந்த 3 பேரை பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர்கள், கேரள மாநிலம் கோழிக்கோடு பகுதியைச் சேர்ந்த நாராயணனின் மகன் நந்தகுமார் (வயது 24), கோட்டயத்தை சேர்ந்த ராஜப்பனின் மகன் அகில் (28) மற்றும் ஆலப்புழாவை சேர்ந்த முரளியின் மகன் ஆனந்த் (28) ஆகியோர் தான் இந்த விபச்சாரத்தை நடத்தி வந்தது என்பது தெரியவந்தது. அவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்தார்கள்.
மேலும், அங்கிருந்த 4 இளம்பெண்களை மீட்டு காப்பகத்துக்கு அனுப்பி வைத்தனர். கைதான 3 இளைஞர்களையும் போலீசார் தென்காசி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.












Click it and Unblock the Notifications