மாரடைப்பு, கார்டியாக் அரெஸ்ட் வித்தியாசம் என்ன? எப்படி தவிர்க்கலாம்?
Recommended Video

சென்னை: நடிகை ஸ்ரீதேவி மரணத்திற்கு பிறகு மாரடைப்பு மற்றும் 'கார்டியாக் அரெஸ்ட்' பற்றிய பேச்சுக்கள் நாடு முழுக்க அதிகரித்துள்ளது.
54 வயதிலேயே ஸ்ரீதேவி மரணமடைவார் என யாருமே எதிர்பார்க்கவில்லை.'கார்டியாக் அரெஸ்ட்' என்ற நோய்தான் இதற்கு காரணம் என முதல்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஆரோக்கிய விஷயத்தில் கவனம் செலுத்தும், பெரும் பிரபலம் ஒருவரை சில வினாடிகளில் கொன்றுவிட்ட 'கார்டியாக் அரெஸ்ட்' நோய் மாரடைப்பு அதாவது ஹார்ட் அட்டாக் என்பதில் இருந்து மாறுபட்டது.

மிக மோசமானது
இரு வகை நோய்களுமே மோசமானவை என்றாலும், 'கார்டியாக் அரெஸ்ட்' என்பது மிகவும் மோசமானது. இதற்கு காரணம், எந்தவித அறிகுறியும் இல்லாமல் திடீரென ஒருவரை தாக்க கூடியது 'கார்டியாக் அரெஸ்ட்'. மாரடைப்புக்கு சில அறிகுறிகள் உடலில் தென்படும். நெஞ்சு, தோள்பட்டை வலி, மூச்சு திணறல் போன்ற சில அறிகுறிகளை காண்பித்துவிட்டு தாக்க கூடியது மாரடைப்பு என்பதால் அது தாக்கிய நோயாளிகள் பிழைக்கும் வாய்ப்பு அதிகம்.

திடீரென நிறுத்திவிடும்
'கார்டியாக் அரெஸ்ட்' என்பதற்கும் மாரடைப்பு என்பதற்கும் மருத்துவ ரீதியில் வித்தியாசம் உள்ளது. 'கார்டியாக் அரெஸ்ட்' என்பது இதயத்தை முற்றிலுமாக செயல்படுவதில் இருந்து நிறுத்திவிடும் தன்மை கொண்டது. இதயம் நிறுத்தப்படும்போது, ரத்தம் உடலின் பிற பகுதிகளுக்கு செல்லாது. இதனால், மூளை உள்ளிட்ட முக்கிய உறுப்புகள் அனைத்தும் செயலிழந்து நோயாளிக்கு மரணம் ஏற்படுகிறது.

சிகிச்சை
'கார்டியாக் அரெஸ்ட்' தாக்கப்பட்ட சில வினாடிகள் அல்லது நிமிடங்களுக்குள் எலக்ட்ரிக் ஷாக் சிகிச்சை கொடுக்கப்பட்டால்தான் அந்த நோயாளியை காப்பாற்ற முடியும். எனவேதான், 'கார்டியாக் அரெஸ்ட்' என்பது மோசமான நோயாக பார்க்கப்படுகிறது. மருத்துவ உதவி கிடைக்கும் முன்பாக வாய் வழியாக காற்றை ஊதி செலுத்துவது, நெஞ்சு பகுதியை அழுத்துவது போன்ற முதலுதவி முறைகளை செய்யலாம்.

மாரடைப்புக்கு காரணம்
மாரடைப்பு என்பது, ரத்த குழாய்களில் ஏற்படும் அடைப்பால் ஏற்படுவது. அதிகப்படியான கொழுப்பு உணவுகளை சாப்பிட்டு உடல் கொழுப்பை தேக்கி வைத்தாலும், போதிய அளவுக்கு உடல் உழைப்பு இல்லாமல் கொழுப்பு சேர்ந்தாலும் இதுபோல நோயாளிகளின் இதய வால்வு பகுதியில் அடைப்பு ஏற்பட்டு மாரடைப்பு ஏற்படும். அடைப்பு காரணமாக உடல் உறுப்புகளுக்கு ரத்தம் செல்லாமல் அந்த உறுப்புகள் சேதமடையும் என்பதால், நோயாளிக்கு மரணம் ஏற்படுகிறது. இருப்பினும் உரிய நேரத்திற்குள் சிகிச்சை ஆரம்பிக்கப்பட்டால் உயிர் பிழைக்கும் வாய்ப்பு அதிகம்.

ஆரோக்கியம் அவசியம்
பொதுவாக இதய நோய் உள்ளவர்கள், மிகவும் முதியவர்கள், உடல்பருமன் அதிகம் உள்ளவர்கள், கட்டுக்கடங்காத ரத்த கொதிப்பு உள்ளவர்கள் போன்றோருக்குத்தான்'கார்டியாக் அரெஸ்ட்' ' எனப்படும் நோய் தாக்குமாம். 54 வயதுகொண்ட ஸ்ரீதேவிக்கு இந்த நோய் தாக்கியது அதிசயம் என்கிறார்கள் மருத்துவர்கள். காஸ்மெட்டிக் அறுவை சிகிச்சைகள் பலவற்றை செய்ததன் விளைவாக இந்த நோய் தாக்கியிருக்கலாம் என்பது சிலரது கருத்தாக உள்ளது. ஸ்ரீதேவி மட்டுமல்ல, அன்னை தெரசா அவரது 87வது வயதில் இந்த நோயால்தான் உயிர் துறந்தார். 'கார்டியாக் அரெஸ்ட்' குறித்து பொதுவான அச்சம் தேவையில்லை. நல்ல ஆரோக்கியமாக உடலை பார்த்துக்கொள்வோருக்கு இளம் வயதில் 'கார்டியாக் அரெஸ்ட்' என்பது தாக்குவதற்கான வாய்ப்பு மிகவும் அரிது என்பதே மருத்துவர்கள் கருத்து.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications