திராவிட அரசியலுக்கு எதிராக ஆன்மீக அரசியல்.. யாருக்கான கோஷம் இது?
Recommended Video

சென்னை: தமிழகத்தில் வலுவாக திராவிட அரசியல் வேரூன்றியுள்ள நிலையில், அதன் பலன்களை மக்கள் அனுபவிக்கும் நிலையில், ஆன்மீக அரசியலுக்கு அவசியம் என்ன வந்தது, இது யாருடைய கோஷம் என்பதை ரஜினிகாந்த் மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டிய நிலையில் உள்ளார்.
ரஜினி கட்சி ஆரம்பிப்பதன் பின்னணியில் பாஜக உள்ளது என்பது பரவலாக எழுந்துள்ள விமர்சனம். இது பாஜகவின் பினாமி கட்சியாக இருக்கப் போகிறது என்று கடுமையான தாக்குதல் குரல்கள் எதிரொலிக்க தொடங்கியுள்ளன.
நேரடியாக பாஜகவுடன் கூட்டணி போட்டால் ஆரம்பமே பெரும் சறுக்கலாக இருக்கும். இதனால் திராவிடக் கட்சிகளுக்கு முற்றுப் புள்ளி என்ற பெயரில் ரஜினியை பாஜக இறக்கி விட்டுள்ளதாக பேசப்படுகிறது.

அரசியலில் ஆன்மீகம்
இந்த விமர்சனங்களுக்கான பதிலை ரஜினிகாந்த்தான் அளிக்க வேண்டும். இந்த குற்றச்சாட்டுகளை ரஜினிகாந்த் எப்படி எதிர்கொள்ளப் போகிறார் என்பதில்தான் அவரது அரசியல் எதிர்காலம் உள்ளது. திராவிடத்திற்கு எதிரான அரசியல் என்று நேரடியாக ரஜினிகாந்த் கூறாவிட்டாலும், ஆன்மீக அரசியல் என்று அவர் கூறியதன் மறைமுக பொருள் அதுதான். ஆன்மீக அரசியல் என்பது அரசியலில் ஆன்மீகத்தை இணைத்துக் கொண்டு செல்வது என்று அர்த்தம் வரும்.

ஆன்மீக அரசியலின் அர்த்தம்
நேர்மை, உண்மை போன்றவைதான் ஆன்மீக அரசியல் என்ற சொல்லின் பொருள் என ரஜினிகாந்த் கூறினாலும், ஆன்மீக அரசியலுக்கு எதிரான திராவிட அரசியலில் உள்ள யாருமே நேர்மையானவர்கள் இல்லையா என்ற கேள்வி எழுகிறது. திராவிட அரசியல் என்பது ஆன்மீகத்தை ஆட்சியில் கலக்காத அரசியல். எம்ஜிஆர், ஜெயலலிதா போன்றோர் மிகுந்த ஆன்மீக நம்பிக்கை உள்ளவர்கள். ஆனால் தமிழக பெரியாரிய சூழலை கருத்தில் கொண்டுதான், அவர்கள் தங்கள் தனிப்பட்ட ஆன்மீக நம்பிக்கையை கூட மறைத்தே மேற்கொண்டனர்.

ஜெயலலிதா கற்ற பாடம்
ஜெயலலிதா தனது ஆட்சிகாலத்தின் தொடக்கத்தில் ஆன்மீக வழிபாடுகளை வெளிப்படையாகவே செய்தார். ஆனால், அதற்கான எதிர்விளைவுகள் கடுமையாக இருந்ததால், பின்னர், தன்னை மதசார்பற்றவர் என்பதை போல காட்டிக்கொள்ளவே மிகவும் பிரயத்தனப்பட்டார். அதேநேரம், சிறுபான்மை இந்து மத பிரிவின் வலியுறுத்தலால், 2003ம் ஆண்டு கோயில்களில், ஆடு, மாடுகளை பலியிடுவதை தடை செய்யும் உத்தரவை பிறப்பித்தார். ஆனால், அடுத்த லோக்சபா தேர்தலிலேயே அதிமுக பெரும் தோல்வியை சந்தித்தது. ஒரு இடத்திலும் வெற்றி பெற முடியவில்லை. இதன்பிறகு அந்த உத்தரவு வாபஸ் பெறப்பட்டது.

ஆன்மீக கொள்கைகள்
எனவே ஆன்மீக கொள்கைகளை அரசியலில் திணிக்க முற்பட அனைத்து தலைவர்களுமே அஞ்சி வந்தனர். இது ஒருபக்கம் என்றால், திராவிடக் கட்சிகளால் தமிழகம் எந்த விதத்திலும் பின் தங்கிவிடவில்லை.தேசிய அளவில் கல்வியில் 2ம் இடம், வேலைவாய்ப்பு, பொது நலம், போக்குவரத்து, சாலைகள், சுகாதாரம், பொது வளர்ச்சி என அனைத்திலும் டாப் மாநிலங்களில் ஒன்றாகவே தமிழகம் விளங்குகிறது.

முன்னேறிய மாநிலம்
காங்கிரஸ் ஆண்ட, இப்போது பாஜக ஆளும் மற்ற மாநிலங்களை ஒப்பிடுகையில் தமிழகம் முன்னேறிய மாநிலமே. இந்நிலையில் திராவிடக் கட்சிகள் வேண்டாம் என்பது யாருடைய கோஷம்? என்ற கேள்விக்கு பாஜக என்ற பதில் தான் வரும். பாஜகவின் அரசியல் கொள்கைக்கு ரஜினி ஏன் வேலை பார்க்க வேண்டும் என்ற கேள்விக்கு ரஜினி பதில் சொல்ல வேண்டி வரும்.
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
எடப்பாடி பழனிசாமி இந்த அதிர்ச்சியை தாங்குவாரா? மேலும் 3 அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா? -
திமுகவே கணிக்கல.. விஜய்யுடன் நெருங்கிய காங்கிரஸ்! பாஜகவை வீழ்த்த இந்தியா கூட்டணி மாஸ்டர் ஸ்கெட்ச் -
“கொளத்தூரில் ஸ்டாலின் தோற்பார் என முன்பே தெரியும்.. திமுகவிடம் சொன்னோம்”.. காதர் மொய்தீன் தடாலடி! -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
“EPS மாலையிட்டால்தான் என் ஆத்மா சாந்தியடையும்”.. அதிமுக தொண்டனின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய எடப்பாடி -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த் -
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
பெரிய திமிங்கலம்! அதிமுகவில் அடுத்த விக்கெட்? திருச்சி வரும் முதல்வர் விஜய்யை சந்திக்கும் சிவிஎஸ்?












Click it and Unblock the Notifications