லாக் ஆன ஸ்டியரிங்.. குன்னூர் விபத்து நடந்தது எப்படி? மறக்க முடியாத துயரத்தை தந்த மலைகளின் அரசி
குன்னூர்: குன்னூர் மரபாலம் அருகே நடந்த விபத்தில் 9 பேர் பலியாகி உள்ளனர். மலைகளின் அரசி உதகை மண்டலத்தை பார்க்க சென்று திரும்பிய மக்களுக்கு மறக்க முடியாத துயரத்தை தந்துள்ளது மலைகளின் அரசி.
தமிழ்நாட்டையே உலுக்கிய விபத்துகளில் ஒன்றாக இது மாறி உள்ளது. தென்காசியில் இருந்து கேரளாவில் சில பகுதிகள், தமிழ்நாட்டில் ஊட்டி உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று பின்னர் தென்காசி நோக்கி சென்ற போது மரப்பாலம் அருகே குன்னூரில் விபத்து ஏற்பட்டு உள்ளது.

மரப்பாலம் அருகே வளைவில் திரும்பிய போது இந்த விபத்து ஏற்பட்டு உள்ளது. வளைவில் திரும்பிய போது வாகனத்தின் ஸ்டியரிங் அப்படியே லாக் ஆகி உள்ளது. அதாவது வளைவில் திருப்ப வலது பக்கம் வாகனத்தை திருப்பி உள்ளார் டிரைவர்.
அதன்பின் டிரைவர் இடது பக்கம் வாகனத்தை திருப்ப முயன்று உள்ளார். ஆனால் திருப்பி முடியவில்லை. இதனால் அப்படியே குழிக்குள் வண்டி விழுந்துள்ளது. 50 அடி ஆழத்தில் ஒரு மரம் இருந்துள்ளது. நேராக அந்த மரத்தில் சென்று குத்தி அந்த பேருந்து நின்றுள்ளது. இதனால் பேருந்து மேலும் கீழே செல்லாமல் தடுக்கப்பட்டுள்ளது.
இல்லையென்றால் பேருந்து 150 மீட்டர் அடி ஆழத்தில் விழுந்து மேலும் பலர் பலியாகி இருப்பார்கள். இதையடுத்து அங்கே இரவோடு இரவாக மீட்பு பணி நடந்தது. இதில் 8 பேர் சடலமாக மீட்கப்பட்டனர். இன்று காலை மேலும் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டார். 51 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். பேருந்தில் 60 பேர் பயணம் செய்துள்ளனர்.
இந்த விபத்திற்கு வாகன பழுதுதான் காரணமா அல்லது வேறு எதுவும் விபத்திற்கு காரணமா என்று விசாரணை செய்யப்பட்டு வருகிறது.

தமிழ்நாடு அரசு இரங்கல்: இது தொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்ட இரங்கலில் நீலகிரி மாவட்டம் சுற்றுலாப் பேருந்து பள்ளத்தில் விழுந்து ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தவர்களின் தென்காசி மாவட்டத்திலிருந்து உதகமண்டலத்திற்கு தனியார் பேருந்து மூலம் சுற்றுலாவிற்கு சென்றவர்கள் இன்று (30-9-2023) தென்காசிக்கு திரும்பும் வழியில், சுற்றுலாப் பேருந்து நீலகிரி மாவட்டம், குன்னூர், பர்லியாறு அருகே வந்துகொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக பள்ளத்தில் விழுந்த ஏற்பட்ட விபத்தில் பேருந்தில் பயணம் செய்த திருமதி.முப்புடாதி (வயது 67), திரு.முருகேசன் (வயது 65), திரு. இளங்கோ (வயது 64), திருமதி.தேவிகலா (வயது 42), திருமதி.கௌசல்யா (வயது 29) மற்றும் செல்வன். நிதின் (வயது 15) ஆகியோர் உள்ளிட்ட எட்டு பேர் உயிரிழந்தனர் என்ற துயரமான செய்தியினைக் கேட்டு மிகுந்த வேதனையடைந்தேன்.
மாண்புமிகு சுற்றுலாத்துறை அமைச்சர் திரு.கா.ராமச்சந்திரன் அவர்களை விபத்து நடந்த இடத்தில் நடைபெற்றுவரும் மீட்பு மற்றும் நிவாரணப்பணிகளை மேற்பார்வையிட்டு துரிதப்படுத்தவும், மேலும் இவ்விபத்தில் படுகாயம் மற்றும் லேசான காயமடைந்து மருத்துவமனையில் அறிவுறுத்தியுள்ளேன். அனுமதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு சிறப்பு சிகிச்சை வழங்கவும் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும், அவர்களது உறவினர்களுக்கும் எனது ஆறுதலையும், ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக்கொள்வதோடு, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா இரண்டு இலட்சம் ரூபாயும், படுகாயமடைந்து சிகிச்சை பெற்றுவருபவர்களுக்கு தலா ஒரு இலட்சம் ரூபாயும், லேசான காயமடைந்து சிகிச்சை பெற்றுவருபவர்களுக்கு தலா ஐம்பதாயிரம் ரூபாயும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிட உத்தரவிட்டுள்ளேன், என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications