விக்கிரவாண்டி வி.சாலையின் மேற்கு புறம் கவனிச்சீங்களா? இதுதான் தவெகவினர் மயங்கி விழ காரணமாம்!
விக்கிரவாண்டி: தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு நடைபெறும் இடத்தில் 100-க்கும் மேற்பட்டோர் மயங்கி விழுவதாக தகவல்கள் வருகின்றன. தண்ணீர் பற்றாக்குறை, அதிக வெப்பம் இதை காட்டிலும் மயங்கி விழுவது ஏன் என்பது குறித்து பார்ப்போம்.
நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு இன்று மாலை 5 மணிக்கு விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெறுகிறது. இதற்காக விஜய் நேற்றே விக்கிரவாண்டிக்கு சென்றுவிட்டார்.

அவர் மாநாட்டின் இறுதிக் கட்ட பணிகளை பார்வையிட்டார். இதையடுத்து அவர் தங்குவதற்காக விக்கிரவாண்டியில் வீடு ஒன்று வாடகைக்கு எடுக்கப்பட்டுள்ளது. இந்த வீட்டில்தான் அவர் தங்கியுள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் தங்கியிருக்கும் இடத்தில் இருந்து அவர் கேரவன் மூலம் மாநாட்டுக்கு வருவார் என சொல்லப்படுகிறது. ஒரு சிலர் அவர் நேற்று இரவு மாநாட்டு இடத்தை ஆய்வு செய்துவிட்டு கேரவனிலேயே தங்கிவிட்டார் என்கிறார்கள். இந்த நிலையில் விஜய் தனது மாநாட்டை எப்படி நடத்த வேண்டும் என சில வழிமுறைகளை வகுத்துள்ளார்.
அதில் பெண் போலீஸாரிடம் மரியாதையாக நடந்து கொள்ள வேண்டும். யாரும் மது அருந்திவிட்டு வரக் கூடாது., சாலையில் எந்த வாகனங்களுக்கும் இடையூறு ஏற்படுத்தக் கூடாது. அதிகாரிகளிடமும் மரியாதையாக நடந்துக் கொள்ள வேண்டும். கிணறு, ஆபத்தான பகுதிகளில் கவனமாக இருத்தல் வேண்டும்.
இரு சக்கர வாகனங்களில் வருபவர்கள் சாகசங்களை செய்யக் கூடாது. பேருந்து, வேன்களில் அனுமதிக்கப்பட்ட அளவிலேயே ஆட்களை ஏற்றிக் கொண்டு வர வேண்டும். மருத்துவக் குழு, தீயணைப்புத் துறையினருக்கு உரிய ஏற்பாடுகள் செய்து தர வேண்டும் என்பன உள்ளிட்ட நிபந்தனைகளை எல்லாம் விதித்துள்ளனர்.
இந்த மாநாட்டுக்கு 1 லட்சம் பேர் வருவார்கள் என எதிர்பார்த்த நிலையில் தற்போது அதையும் தாண்டி கூட்டம் வருவதாக தகவல்கள் வருகின்றன. மாநாடு நடைபெறும் இடத்தில் அதிகளவு வெப்பம் இருப்பதால் தொண்டர்கள் நூற்றுக்கணக்கானோர் மயங்கி விழுகிறார்கள். அவர்களுக்கு அங்கிருக்கும் மருத்துவக் குழுவினர் சிகிச்சை அளிக்கிறார்கள்.
இந்த நிலையில் குடிநீர் பற்றாக்குறையை போக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. இதையெல்லாம் தாண்டி ஏன் நிறைய பேர் மயங்கி விழுந்தனர் என்பதற்கான காரணத்தை பார்க்கலாம்.
இதுகுறித்து தனியார் வானிலை ஆய்வாளர் ஹேமசந்திரன் கூறுகையில் மாநாடு நடைபெறும் இடத்தில் மேற்கு திசையில் இருந்து வீசும் காசு வறண்டு காணப்படுகிறது. இதனால் உடலின் வெப்பநிலை மேலும் அதிகரித்து பலருக்கு மயக்கம் ஏற்படுகிறது.
இன்றைய தினம் மாநாடு நடைபெறும் இடத்தில் மழை வராது. இந்த வெயில் 4 மணி வரை இருக்கும். அதன் பிறகு பனிப்பொழிவு தொடங்கி மாநாட்டில் இயல்பான சூழல் நிலவும் என தெரிவித்துள்ளார். இதுகுறித்து பூவுலக நண்பர்கள் இயக்கத்தின் சுந்தரராஜன் கூறியிருப்பதாவது: இன்றைய தினம் மாநாடு நடைபெறும் விக்கிரவாண்டியில் 32 டிகிரி செல்சியஸ் வெப்பம் இருக்கிறது. ஒரு வெட்ட வெளியில் லட்சக்கணக்கானோர் கூடும் போது இயல்பாகவே ஒவ்வொருவரின் வெப்பநிலையும் 2 அல்லது 3 டிகிரி சென்டிகிரேட் அதிகரிக்கும் என்கிறார்கள்.
எனவே இது போன்ற அரசியல் மாநாடுகளை மாலை அல்லது இரவு நேரத்தில் வைத்துக் கொண்டால் யாருக்கும் இது போன்ற பாதிப்புகள் வராது. இல்லாவிட்டால் எத்தனை பேர் வருவார்கள் என்பதை கணித்து தண்ணீர் இருப்பை அதிகரித்திருக்க வேண்டும். இல்லாவிட்டால் ஷாமியானா பந்தலையாவது போட்டிருக்கலாம். மேலும் தற்போது மாநாட்டில் பல இடங்களில் தண்ணீர் தெளித்துவிட்டாலும் மயங்கி விழுவது இல்லாமல் இருக்கும் என்கிறார்கள்.












Click it and Unblock the Notifications