சேலம் 8 வழி சாலை எதற்காக போடுகிறீர்கள்? ஒன்றுமே புரியவில்லை.. உச்ச நீதிமன்றம் நெத்தியடி கேள்வி!
சென்னை சேலம் இடையே எதற்காக 8 வழி சாலை போடப்படுகிறது என்று உச்ச நீதிமன்றம் தமிழக அரசுக்கும் மத்திய அரசுக்கும் பரபரப்பு கேள்வி எழுப்பி உள்ளது.
Recommended Video
சென்னை: சென்னை சேலம் இடையே எதற்காக 8 வழி சாலை போடப்படுகிறது என்று உச்ச நீதிமன்றம் தமிழக அரசுக்கும் மத்திய அரசுக்கும் பரபரப்பு கேள்வி எழுப்பி உள்ளது.
பசுமை வழி சாலை என்ற பெயரில் ரூ 10 ஆயிரம் கோடி செலவில் சென்னை- சேலம் இடையே 8 வழிச்சாலை திட்டத்தை நிறைவேற்ற தமிழக அரசு நிலங்களை கையகப்படுத்தி வந்தது. இதில் விவசாய நிலங்கள், வீடுகள் கையகப்படுத்தப்பட்டன. இந்த திட்டத்திற்கு எதிராக பூவுலகின் நண்பர்கள் அமைப்பு, பாமக எம்பி அன்புமணி உள்ளிட்டவர்கள் வழக்கு தொடுத்தனர்.

இந்த வழக்கில் கடந்த ஏப்ரல் மாதம் சேலம் 8 வழி சாலைக்கு நிலம் கையகப்படுத்தியது செல்லாது என்று சென்னை ஹைகோர்ட் தீர்ப்பு வழங்கியது. இந்த தீர்ப்பிற்கு எதிராக மத்திய நெடுஞ்சாலை துறை இயக்குனர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார்.
இந்த வழக்கு மீதான விசாரணை இன்று நடைபெற்றது. இதில் மத்திய அரசுக்கும், தமிழக அரசுக்கும் உச்ச நீதிமன்றம் பல கேள்விகளை எழுப்பியுள்ளது.
அதில், சென்னை சேலம் இடையே எதற்காக 8 வழி சாலை போடப்படுகிறது. சேலம் 8 வழிச் சாலை திட்டமே குழப்பமாக இருக்கிறது. 8 வழி சாலைக்காக விரிவான திட்டம் தயாரிக்கப்பட்டதா?
திட்டம் இருக்கிறது என்றால் அதை சமர்ப்பியுங்கள். சாலைக்காக எதன் அடிப்படையில் நிலம் கையகப்படுத்தப்பட்டது.சுற்றுச்சூழல் அனுமதி பெறப்பட்டதா? இல்லையென்றால் ஏன் சாலை போட இத்தனை அவசரம்.
சேலம் 8 வழி சாலைக்கு சுற்றுச்சூழல் அனுமதி கிடைப்பதில் கால தாமதம் ஆனால் என்ன செய்வீர்கள் சுற்றுச்சூழல் அனுமதி இல்லாமல் திட்டத்தை தொடங்கி விடுவீர்களா? பாரத் மாலா திட்டத்தின் கீழ் இந்த திட்டம் உள்ளதா?. அப்படி பாரத் மாலா திட்டம் என்றால் அதற்கான அறிவிப்பானை எங்கே என்று நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது.
இது தொடர்பான கேள்விகள் அனைத்திற்கும் மத்திய அரசு பதில் அளிக்க வேண்டும் என்று கூறி உச்ச நீதிமன்றம் வழக்கை ஒத்தி வைத்தது.
-
சென்னை மின்தடைக்கு முற்றுப்புள்ளி? கடலூர், நகையில் இருந்து பறந்து வந்த ஸ்பெஷல் டீம்.. குட்நியூஸ் -
4 மணி நேர மின்வெட்டு.. சென்னை ஆவடியில் கொந்தளித்த மக்கள்! சாலை மறியலால் போக்குவரத்து பாதிப்பு! -
பெங்களூரு, மும்பை எல்லாம் ஓரம் போ.. சம்பள உயர்வு அதிகம் கொடுப்பதில் இந்த சிட்டிதான் டாப்! -
சர்க்கரை அட்டை உங்களிடம் இருக்கா? சென்னை மக்களுக்கு ஒரே நாளில் பெயர் மாற்றத் தீர்வு தரும் தமிழக அரசு -
பெங்களூருக்கு வேட்டு! இந்தியாவிலேயே அதிக சம்பள உயர்வு கிடைக்கும் நகரம் எது தெரியுமா? -
சென்னையில் இன்று விளாசப் போகுது மழை.. நெல்லை, குமரி உள்பட 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள்












Click it and Unblock the Notifications