கேப்டனின் அசால்ட் லுக்.. கமலின் சமாளிப்பு சிரிப்பு.. ரெண்டு பேரும் அப்படி என்ன பேசியிருப்பார்கள்?
Recommended Video

சென்னை: நடிகர் விஜயகாந்த்தை சந்தித்து அரசியல் கட்சி துவங்கும் முடிவிற்கு வாழ்த்து பெற்றார் கமல்ஹாசன். இதுகுறித்து நெட்டிசன்கள் அதிருப்தி வெளிப்படுத்தி வருகிறார்கள்.
அப்படியே, வைகோவையும் ஒரு எட்டு பார்த்துவிட்டால் கமல்ஹாசன் அரசியல் பயணம் நிறைவு பெறும் என்று சிலர் கேலி செய்தால், வேறும் சிலரோ, ஏன், கமல் ஜெ.தீபாவையும் சந்தித்து வாழ்த்து பெறலாமே என்று அசத்தல் ஐடியாக்களையும் அள்ளி வீசுகிறார்கள்.

இந்த நிலையில்தான் விஜயகாந்த்-கமல் இருவரும் சந்தித்த போட்டோக்கள் வெளியாகியுள்ளன. சன் கிளாஸ் அணிந்தபடி, சுழல் நாற்காலியில் அமர்ந்தபடி காட்சியளிக்கிறார் விஜயகாந்த்.
அதில் கேப்டன் ரியாக்ஷன்தான் டாப். எந்த ஒரு உணர்வுகளையும் முகத்தில் காட்டாமல், "ஏதோ வந்துட்டீங்க, டீ, காபி சாப்பிட்டுவிட்டு போங்க" என்று, கூறுவதை போல உள்ளது விஜயகாந்த் முகபாவனை.
விஜயகாந்த்தும், கமலும் அப்படி கண்களால் என்னதான் பேசியிருப்பார்கள், ஒரு ஜாலியான கற்பனை:
விஜயகாந்த்: என்ன கமல் நீங்களுமா? அரசியலுக்கு உங்களுக்கு முன்னாடியே நான் வந்து படுறபாட்டை பார்த்துமா வந்தீங்க?
கமல்: அரசியலில் விஜயகாந்த் மாதிரி ஆவேன்னு சொல்லவில்லை, ஆகாவிட்டால் நல்லதுன்னு சொல்றேன்.
விஜயகாந்த்: ஆங்.. இதச் சொல்லத்தான் இவ்வளவு தூரம் வந்தீங்களா? கடுப்புகள கெளப்பிகிட்டு..
கமல்: கடுப்புகள பார்த்தா விடுப்பு எடுத்து இவ்வளவு தூரம் வந்திருப்பேனா?

விஜயகாந்த்: இதுல எதுகை மோனை வேறையா? அரசியல் 'தூக்கியடிச்சிடும்', அம்மையார் இருக்கும்போதே எதிர்க்கட்சி தலைவரான நான் இன்று ஒரு எம்எல்ஏ சீட் கூட இல்லாம தவிக்கிறேன். இதெல்லாம் நான் ஏன் சொல்றேன்னா, தண்ணி பாட்டில் வெல 10 ரூபாய்க்கு விக்குது மக்களே.
கமல் (மைண்ட் வாய்ஸ்): நான்பேசுறதுதான் அடுத்தவங்களுக்கு புரியாதுன்னா, இவரு பேசுறது எனக்கே புரியலியை.
விஜயகாந்த்: இப்பவே யோசிக்கிறீங்க பார்த்தீங்களா, அதான் அரசியல் (தனது ட்ரேட் மார்க் சிரிப்பை உதிர்க்கிறார்).
கமல்: ச்சேச்ச.. தண்ணீர் பாட்டில் 10 ரூபாய்க்கு விற்பது, தரம்கெட்ட அரசியல்வாதிகளால், தயவாய் எனது ஆட்சி மலர்ந்ததும், தானாக எல்லாம் குறையும் என்பதை தயக்கமின்றி நான் உரைப்பேன், தயவு கூர்ந்து கேளும் கேப்டனே.
விஜயகாந்த்: @!$
-
மதிமுகவை சேர்க்காதீங்கன்னு படிச்சு படிச்சு சொன்னேன், கேட்டீங்களா.. திமுக முன்னாள் நிர்வாகி ஆதங்கம்! -
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான் -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்! -
நேரம் ஒதுக்காத அமித்ஷா.. கிரீன் சிக்னல் கொடுக்காத பாஜக தலைமை! டெல்லியில் காத்திருக்கும் அண்ணாமலை









Click it and Unblock the Notifications