டேட்டிங் போகும் ஆண்களே! வெள்ளை டீசர்ட்... புளூ ஜீன்ஸ்தான் பெஸ்ட்டாம்!!

Subscribe to Oneindia Tamil

சென்னை: டேட்டிங் செல்லும் போது ஆண்கள் வெள்ளை டீ சர்ட் மற்றும் புளூ ஜீன்ஸ் அணிந்தால் கவர்ச்சியாக இருக்கும் என பெண்கள் தெரிவித்துள்ளனர். டேட்டிங்கில் பெண்கள் முதலில் அணுகுவதையே ஆண்கள் மிகவும் விரும்புவதாக டேட்டிங் ஆப் நிறுவனம் நடத்திய ஆய்வு ஒன்றில் கூறப்பட்டுள்ளது.

ட்ரூலிமேட்லி ஆப் தேசிய அளவில் நடத்திய கணக்கெடுப்பில் சுமார் 7,000 ஆப் பயனாளிகள் பங்கேற்றுள்ளனர். இவர்களில் 18 முதல் 30 வயதுக்குட்பட்ட 4,550 ஆண்கள் மற்றும் 2,450 பெண்களிடம் நடத்தப்பட்டது.

இந்த ஆய்வில் கேட்கப்பட்ட பல்வேறு கேள்விகளுக்கு பலரும் சுவாரஸ்யமான பதில்கள் அளித்துள்ளனர். ஆய்வில், 62% பெண்கள், டேட்டிங்கில் முதலில் நாங்களே ஆண்களை அணுகுவது பிடிக்கும் என ஒப்புக் கொண்டுள்ளனர். எனினும், 88% ஆண்கள், முதலில் பெண்களாக அணுகுவதை அதிகம் விரும்புவதாக தெரிவித்துள்ளனர்.

சிவப்பு - வெள்ளை உடைகள்

சிவப்பு - வெள்ளை உடைகள்

பெண்கள் டேட்டிங் வரும் போது சிவப்பு நிற ஆடை அணிந்திருக்க வேண்டும் என்றும் ஹீல்ஸ் அணிய வேண்டும் என்று விரும்புவதாக ஆண்கள் கூறியுள்ளனர். அதேபோல் டேட்டிங் செல்ல விரும்பும் ஆண்கள் வெள்ளை டீ சர்ட் மற்றும் புளூ ஜீன்ஸ் அணிந்தால் கவர்ச்சியாக இருக்கும் என பெண்கள் தரப்பில் கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

செலவு செய்வது யார்?

செலவு செய்வது யார்?

டேட்டிங்கிற்காக வெளியே செல்லும் ஜோடிகளில், பெண்கள் தாங்களே செலவிட நினைப்பதாகவும், 45% பெண்கள் முதல் டேட்டிங்கில் ஆண்கள் செலவிட வேண்டும் என நினைப்பதாகவும் கூறியுள்ளனர். அதே நேரத்தில் 2 சதவிகித பெண்கள் முதல் டேட்டிங்கள் தாங்களே செலவிட விரும்புவதாக கூறியுள்ளனர்.

காதல் விளையாட்டு

காதல் விளையாட்டு

இந்த ஆய்வில், 62% பெண்கள், ஆண்கள் தங்களது கூந்தலுடன் விளையாடுவதை கவர்ச்சியான ஒன்றாக கருதுவதாக கூறுகின்றனர். 88% பெண்கள், கூந்தலைவிட கவர்ச்சியான விஷயங்கள் பல இருப்பதாகவும், அதனை ஆண்கள் கண்டறியவேண்டும் எனவும் கூறியுள்ளனர்.

டாட்டூ

டாட்டூ

டாட்டூக்களை பொறுத்தவரை, 83% பெண்களுக்கு டாட்டூ உடன் இருக்கும் ஆண்கள் கவர்ச்சியாக இருப்பார்கள் எனவும், டாட்டூ போட்டுள்ள பெண்களில் 89% பேர் ஈர்க்கும் வகையில் இருப்பார்கள் என ஆண்கள் தெரிவித்துள்ளனர்.

பேட் பிரீத்

பேட் பிரீத்

மேலும், டேட்டிங் செல்ல விரும்பும், ஆண்களும், பெண்களும் 67% அந்த நேரத்தில் சுகாதாரமற்ற சுவாசம் தங்களின் மூடினை அப்செட் செய்வதாக கூறியுள்ளனர். டேட்டிங் போடு எடுக்கப்பட்ட செல்ஃபிகளை சமூக வலைத்தளங்களில் போட விரும்பவில்லை என்று பெரும்பாலானவர்கள் தெரிவித்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+