செந்தில் பாலாஜிக்கும், தம்பிதுரைக்கும் இடையே பாசமா, பகையா?
கரூர்: கரூர் தொகுதியில் கரூர் எம்.பி. தம்பிதுரைக்கும், அமைச்சர் செந்தில் பாலாஜிக்கும் இடையே பாசமா அல்லது பகையா என பட்டிமன்றமே நடைபெற்று வருகின்றதாம்.
இருவருமே முதல்வர் ஜெயலலிதாவின் விசுவாசத்துக்குரியவர்கள் என்பதுதான் இங்கு விசேஷமானது.
இவர்களில் கரூர் செந்தில் பாலாஜிக்கு சொந்த ஊர். அதுவே தம்பிதுரையை நாடாளு்மன்றத்திற்கு அனுப்பிய ஊர்.

குட்புக்கில்...
கரூர் எம்.பி.யாக உள்ள தம்பிதுரை மட்டும் முதல்வர் ஜெயலலிதாவின் நம்பிக்கைக்குரிய நட்சத்திரமாகவும், அவரது குட்புக்கில் இடம் பிடித்தும், தொடர்ந்து கரூர் தொகுதியை தக்க வைத்துக் கொண்டு வருகின்றார்.

மீண்டும் சிக்கிய கரூர்
இந்த நிலையில் கரூர் தொகுதியை மீண்டும் கைப்பற்றியுள்ளார் தம்பிதுரை.

சின்னச் சின்ன கசப்புகள்..
கரூர் மாவட்ட செயலாளராகவும், தமிழக போக்குவரத்து துறை அமைச்சராகவும் இருக்கும் செந்தில் பாலாஜிக்கும், தம்பிதுரைக்கும் இடையே சிறு மனகசப்பு உள்ளதாக கூறப்படுகின்றது.

தம்பித்துரை மட்டும் தனியே...
இதை மெய்பிக்கும் விதமாக செந்தில் பாலாஜி இல்லாமல் தம்பிதுரை தனியாக கரூர் தொகுதியில் நலத்திட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்று வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆனால் செந்தில் அப்படி இல்லையே...
கரூர் மாவட்டத்தில் நடந்த அரசு விழா மற்றும் கட்சி விழாக்களில் மாநில கொள்கை பரப்புச் செயலாளரும், எம்.பி.யுமான தம்பிதுரையுடன், அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்ந்து பங்கேற்று வந்தார். விழா மேடைகளில் அவர் தம்பிதுரைக்கு உரிய முக்கியத்துவம் கொடுத்தார்.

அரவக்குறிச்சிக்கு மட்டும் தனியாக
அமைச்சர் செந்தில் பாலாஜியுடன் நிகழ்ச்சிகளில் பங்கேற்று வந்த தம்பிதுரை, அரவக்குறிச்சி ஆண்டிப்பட்டி கோட்டையில் நடந்த சாலை பாதுகாப்பு வாரவிழாவில் தனியாக பங்கேற்றார். இந்த விழாவுக்கு அமைச்சர் செந்தில் பாலாஜி வருவதாக இருந்தது. ஆனால் வரவில்லை.

சொட்டு மருந்து நிகழ்விலும் தனியாக
அதே போல் கரூரில் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கும் விழாவிலும் தம்பிதுரை மட்டுமே பங்கேற்றார். பிறகு, மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞர் அணி சார்பில் நடந்த ரேக்ளா ரேஸ் போட்டிக்கு தம்பிதுரை தனியாக வந்து கலந்து கொண்டார்.

துண்டுப் பிரசுரம் கொடுத்தபோதும் தனியாக
அரவக்குறிச்சியில் நடந்த அதிமுக அரசின் சாதனைகள் குறித்த துண்டு பிரசுரம் வழங்கும் விழாவுக்கு தம்பிதுரை மட்டுமே சென்றார்.

மா.செதான் பெரியவர்
அதிமுகவை பொறுத்த வரை அதிமுக மாவட்டச் செயலாளர் பதவி தான் மிக அதிகாரம் மிக்க முக்கிய பதவி. அந்த பதவியிலும், போக்குவரத்து துறை அமைச்சர் பதவியிலும் வலுவாக உள்ளார் செந்தில் பாலாஜி.

பாலாஜி மனசு வச்சா...
எனவே, தம்பிதுரையின் வெற்றி செந்தில் பாலாஜி கையில் உள்ளதாக அக்கட்சியினர் மத்தியில் பேசப்பட்டு வருகின்றது.

மோதலா.. அல்லது வேறயா...
தற்போது கரூர் மாவட்டத்தை பொறுத்த வரை செந்தில் பாலாஜிக்கும், தம்பிதுரைக்கும் இடையே மோதலா அல்லது வேறு எதுவுமா என பட்டிமன்றமும் , பெட்டிங்கும் வெகு சிறப்பாக நடைபெற்று வருகின்றது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications