மிடில் கிளாஸ்தான் டார்கெட்.. வங்கிகள் விரிக்கும் வலை.. சுதாரிக்காவிட்டால் ஆயுசுக்கும் கடனாளிதான்
சென்னை: பர்சனல் லோன் வாங்க ஆசைப்படும் மிடில் கிளாஸ் மக்கள் தான் வங்கிகளின் பிரதான டார்கெட். நீங்களோ அல்லது உங்களுக்கு தெரிந்தவர்களோ பர்சனல் லோன் வாங்க விரும்பினால் உஷாராக இருங்கள். சுதாரிப்பாக இருக்க என்ன செய்ய வேண்டும் என்பதை இப்போது பார்ப்போம்.
பர்சனல் லோன் எனப்படும் தனிநபர் கடன் வாங்க பலரும் ஆசைப்படுவார்கள். குறிப்பாக ஓரளவு மாத சம்பளம் வாங்கி வாழ்க்கையை தொடங்கும் இளம் தம்பதிகள் அல்லது இளைஞர்கள், திருமணம், கல்வி, பெற்றோர் வாங்கிய கடன் அல்லது வீட்டுக்கு அட்வான்ஸ் கொடுக்க அல்லது நிலம் வாங்க பர்சனல் லோன் தான் வாங்குகிறார்கள்.

அப்படி அவர்கள் வாங்க விரும்பாவிட்டால், அவர்களை எப்படியாவது பர்சனல் லோன் வாங்க வைக்க மிகப்பெரிய டீம் செயல்படுகிறது. இதில் எதுவுமே தவறும் இல்லை. கடன் வாங்குவேதா அல்லது கடனை வாங்க வைப்பதோ எல்லாமே சரிதான். ஆனால் அந்த கடனை எப்படி வாங்க போகிறீர்கள் என்பதை முடிவு செய்துவிட்டு வாங்குங்கள்.
சிலருக்கு வங்கிகள் அவர்களின் சிபில் ஸ்கோர் நன்றாக இருந்தால் உடனே சில நிமிடங்களில் கடன் பணம் வங்கியில் ஏறிவிடும். அப்படி வங்கியில் ஏறிய பணத்திற்கு அடுத்த மாதமே இஎம்ஐ ஆரம்பித்துவிடும். இந்த இஎம்ஐ விவகாரத்தில் தான் நாம் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.
கடன் வாங்கும் முன்பு எந்த வங்கியில் என்ன வட்டி, எத்தனை மாதம் இஎம்ஐ போடுவார்கள். பிராசசிங் பீஸ் எவ்வளவு உள்ளிட்ட அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ளுங்கள். அதன்பிறகு எந்த வங்கி என்பதை முடிவு செய்யுங்கள். வங்கியில் கடன் வாங்கும் முன்பு எந்த வங்கி குறைவான இஎம்ஐ இல் கடனை கட்ட அனுமதிக்கின்றன என்பதை பாருங்கள்.இப்போதெல்லாம் வங்கிகள் கடன் கொடுத்தாலே 36 மாதம் அல்லது 48 மாதம் அல்லது 60 மாதம் என்கிற அளவில் தான் கடன் கொடுக்கின்றன.
அதாவது ஒரு வருடத்தில் கடனை கட்டி வெளியேற வேண்டியவர்கள் 3 வருடம் கடனை கட்ட வேண்டிய நிலை இருக்கிறது. அசந்தால் 4 வருடம் அல்லது 5 வருடம் கூட கடனை கட்டும் நிலை ஏற்படலாம். ஏனெனில் இஎம்ஐ காலம் அதிகரிக்க அதிகரிக்க மாதந்தோறும் கட்ட வேண்டிய தொகை குறைவாக இருக்கும். இதை பார்த்து மக்களும் அதிக மாதங்கள் இஎம்ஐ போட்டு கடனை கட்டுகிறார்கள். எனவே நீங்கள் கடனை வாங்க போகிறீர்கள் என்றால் இஎம்ஐ காலங்கள் ஒரு வருடத்தில் அல்லது இரண்டு வருடம் என்கிற அளவில் இருக்குமா என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்.
அதிக இஎம்ஐ எடுத்ததால் அதிக வட்டி வரும். அதேநேரம் பர்சனல் லோன் எடுப்பவர்கள் கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயம். 3 வருடம் கடன் என்றால் முதல் வருடம் முழுவதும் கட்டும் பணத்தில் பெரும்பாலும் வட்டிக்கே போய்விடும் என்பதை புரிந்து கொள்ளுங்கள். இரண்டாவது வருடத்தில் ஓரளவு வட்டியும், 3வது வருடத்தில் ரொக்கமும் கழியும் என்பதையும் புரிந்து கொள்ளுங்கள். எனவே வங்கியின் பர்சன்ல் லோன் வாங்க போகிறீர்கள் என்றால், இஎம்ஐ, வட்டி, திருப்பிச் செலுத்தும் காலம் ஆகியவற்றை கேட்டுவிட்டு முடிவு செய்யுங்கள். வங்கியில் தனிநபர் கடனை பொறுத்தவரை மிககுறைவான இஎம்ஐ காலத்தில் முடித்தால் தான் நல்லது. அதற்கு ஒப்புக்கொள்ளும் வங்கியில் கடனை எடுங்கள். அதேநேரத்தில் வட்டி, பிரசாசிங் பீஸ் , முன்கூட்டியே கடனை அடைத்தால் அதற்கு கட்டணம் எவ்வளவு என்பதை தெளிவாக அறிந்துவிட்டு முடிவு செய்யுங்கள்.
ஒருவேளை உங்களிடம் தங்கம் இருக்கிறது என்றால், மறந்தும் பர்சனல் லோன் பக்கம் போய்விடாதீர்கள். தங்க நகையை அடகு வைத்து உங்களுக்கு வேண்டிய தொகையை பெற்றுக்கொள்ளுங்கள். வாழ்க்கையில் முன்னேற விரும்பும் மிடில் கிளாஸ் மக்கள் இதை பின்பற்றினால் சிறப்பாக இருக்கும். மாறாக மீண்டும் மீண்டும் பர்சனல் லோன் வலைக்குள் விழுந்தால் பல வருடங்கள் நீங்கள் கடனாளியாகவே வாழ்க்கையை ஒட்ட வேண்டிய நிலை வரும். இது அனுபவம் உள்ளவர்கள் சொன்ன பாடம்.
-
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி உற்சாகம்.. LIC பாலிசிதாரர்களுக்கு காத்திருக்கும் அந்த ஒரு ரகசியம் -
தமிழ் புத்தாண்டில் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 லக்கி ராசிகள்.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா பாருங்க -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
வைத்திலிங்கம் வயிற்றில் பாலை வார்த்த ஸ்டாலின்! திமுகவுக்கு ஜம்ப்பான 5 பேருக்கு சீட்! யார் அவர்கள்? -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
தமிழ் புத்தாண்டு பலன்: எச்சரிக்கையாக இருக்க வேண்டிய 3 ராசிகள்.. உங்க ராசி இருக்கா பாருங்க -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
போடியில் ஓபிஎஸ்! ஆலங்குளத்தில் மனோஜ் பாண்டியன்! திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு -
164.. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.. திமுக பட்டியலில் கடைசி பெயராக வந்த முதல்வர் பெயர் -
சட்டமன்ற தேர்தலில் நடிகர் சுந்தர் சி போட்டி.. மதுரை மத்திய தொகுதியில் களம் இறங்குகிறார்.. ஏசி சண்முகம் அறிவிப்பு












Click it and Unblock the Notifications