அவருக்கு அறிவு இருக்கு... அதனால் தான் பாஜகவை எதிர்த்து கோஷமிட்டார்... தமிழிசை -வீடியோ
பாஜக தமிழக தலைவர் தமிழிசை விமான நிலையத்தில் தவறாக பேசி காமெடி செய்த வீடியோவும் வைரல் ஆகியுள்ளது.
Recommended Video

சென்னை: பாஜக தமிழக தலைவர் தமிழிசை விமான நிலையத்தில் தவறாக பேசி காமெடி செய்த வீடியோவும் வைரல் ஆகியுள்ளது. சோபியாவிற்கு அறிவு இருப்பதால்தான் அப்படி கோஷமிட்டார் என்று தமிழிசை கூறியுள்ளார்.
தூத்துக்குடி விமான நிலையத்தில் சோபியா பேசியதும், தமிழிசை அதற்கு புகார் கொடுத்ததும், சோபியா பிறகு கைது செய்யப்பட்டதும் வைரல் ஆகியுள்ளது. அதே சமயத்தில் தமிழிசை விமான நிலையத்தில் தவறாக பேசி காமெடி செய்த வீடியோவும் வைரல் ஆகியுள்ளது.
பாசிச பாஜக ஆட்சி ஒழிக என்று தூத்துக்குடி விமான நிலையத்தில் மாணவி சோபியா கோஷமிட்டார். இதையடுத்து அவர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.

போலீசுடன் வாக்குவாதம்
இதில் தமிழிசை போலீசில் புகார் அளித்ததோடு, விமான நிலையத்திலேயே சோபியாவுடன் வாக்குவாதம் செய்துள்ளார். பாஜகவினர், அங்கேயே சோபியாவின் தந்தையை திட்டி இருக்கிறார்கள். தமிழிசை, போலீசிடம் ''எப்படி ஒரு மாநில பாஜக தலைவரை அந்த பெண் அப்படி பேச முடியும்'' என்று கோபமாக கேட்டு வாக்குவாதம் செய்துள்ளார்.

பாசிசம் என்று எப்படி சொல்ல முடியும்
மேலும், பாஜகவின் பாசிச ஆட்சி ஒழிக என்று சொல்றது பேச்சு உரிமையா?. நீங்க என்னை பார்த்து அப்படி சொன்னால் நான் வாயை மூடிக்கொண்டு செல்ல வேண்டுமா? நான் ஒரு மாநில தலைவர், என்னிடம் எப்படி அவர் அப்படி பேச முடியும், என்று போலீசிடம் கோபமாக வாக்குவாதம் செய்துள்ளார்.

அறிவு இல்லை
இதற்கு அங்கு இருந்த பெண் போலீஸ், சோபியாவிற்கு அறிவில்லை அதனால்தான் பேசிவிட்டார் என்றுள்ளார். அதற்கு தமிழிசை கோபமாக ''அவருக்கு அறிவில்லையா. அவருக்கு அறிவு இருக்கிறது. அதனால்தான் அவர் அப்படி பாஜகவிற்கு எதிராக கோஷமிட்டார்'' என்று கூறியுள்ளார். இந்த வீடியோதான் வைரல் ஆகியுள்ளது.
|
இப்படி சொல்லிட்டீங்களே
அறிவு இருப்பதால்தான் அவர் பாஜகவை எதிர்கிறார் என்று தமிழிசை கூறியது இணையம் முழுக்க வைரல் ஆகியுள்ளது. அறிவு இருப்பவர்கள் பாஜகவை எதிர்கிறார்கள் என்று தமிழிசையே சொல்லிவிட்டார் என்று இணையம் முழுக்க காமெடி செய்து கலாய்த்து வருகிறார்கள்.
-
பாஜக கொடியை நீக்கிய அண்ணாமலை.. உருவாகும் 'மக்கள் சக்தி இயக்கம்'.. காரில் வரும் புதிய கொடி! -
ரொம்ப அவசரப்படாதீங்க அண்ணாமலை.. அமித் ஷா போட்ட அன்புக் கட்டளை! இன்னும் தமிழ்நாடு திரும்பாதது ஏன்? -
பலே ஆளுங்க அண்ணாமலை.. ‘பயோ’வைப் பாருங்களேன்! பிள்ளையையும் கிள்ளி.. தொட்டிலையும் ஆட்டி.. பரபர பாஜக! -
அடிச்சு ஆடுங்க ஜி.. இனி உங்க காலம்! சாமியாரைப் பார்த்து ஐடியா கேட்ட அண்ணாமலை.! இது தான் காரணமா? -
அண்ணாமலை முடிவால் கண்சிவந்த அமித்ஷா.. நயினாரை உடனே டெல்லி அழைத்த பாஜக மேலிடம்.. பாஜகவில் பரபரப்பு -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
பாஜக போல் வேண்டாம்.. அண்ணாமலையின் பிளான் என்ன? கிறிஸ்தவர் + இஸ்லாமியர்களையும் அரவணைத்து தனிக்கட்சி -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான் -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்! -
அண்ணாமலை தலைவராக இருந்தால் இந்த வெற்றி கூட வந்திருக்காது.. பாஜக துணை தலைவர் கேபி ராமலிங்கம் விளாசல்












Click it and Unblock the Notifications