அப்போ எல்லாமே பக்கா ப்ளானிங்தானா!... அபிராமியின் இந்த மெசேஜ் சொல்வது என்ன?
Recommended Video

சென்னை: அபிராமியின் பேஸ்புக்கில் கடந்த 28-ஆம் தேதி கடைசியாக சொல்லப்பட்ட பதிவை பார்க்கும் போது இவர் ஏதோ ஆத்திரத்தில் குழந்தைகளை கொலை செய்யவில்லை என்பதும் எல்லாமே பிளானிங்தான் என்பதும் தெரியவந்துள்ளது.
குன்றத்தூர் மூன்றாம் கட்டளை பகுதியை சேர்ந்த அபிராமி. திருமணத்துக்கு முன்பு வடபழனியில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் வரவேற்பாளராக பணிபுரிந்து வந்தார். இதனால் அழகை பாதுகாப்பதில் அக்கறை கொண்டவர்.
அடிக்கடி ப்யூட்டி பார்லர் செல்வதும் தன் அழகை மேம்படுத்தி கொள்வதும் அதை பார்த்து விட்டு யாராவது பாராட்ட வேண்டும் என நினைப்பதுமே அபிராமியின் நோக்கமாக இருந்துள்ளது.

அறிமுகம்
அழகு எப்போதும் ஆபத்து என்பதை அறியாத அபிராமி நாளடைவில் டப்ஸ்மாஷ் செய்து அசத்தியுள்ளார். இதனால் பேஸ்புக்கில் ஏகப்பட்ட நண்பர்கள் கிடைத்துள்ளனர். இந்நிலையில் பிரியாணி கடையில் பணிபுரிந்த சுந்தரமும் பேஸ்புக்கில் அறிமுகமானவர் என்று கூறப்படுகிறது.

சுந்தரத்தை மறக்க முடியவில்லை
இதையடுத்து சுந்தரத்துக்கும் அபிராமிக்கும் இடையே கள்ளக்காதல் ஏற்பட்டது. விவரம் தெரிந்த கணவர் மற்றும் குடும்பத்தினர் அபிராமியை வீட்டுக் காவலில் வைத்துள்ளனர். இதனால் அவரால் சுந்தரத்தை மறக்க முடியவில்லை.

நம்பலாம்
சுந்தரத்துடன் சேர்ந்து வாழ்வதற்காக இரு குழந்தைகளுக்கு விஷம் வைத்து கொன்றுள்ளார். இந்நிலையில் அவர் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். கள்ளக்காதல் மீது கொண்ட திடீர் வெறி காரணமாக அவர் குழந்தைகளை கொன்றுவிட்டதாக நம்பப்படுகிறது.
வாசகம்
ஆனால் இதெல்லாம் திட்டமிட்ட சம்பவம் என அவரது பேஸ்புக் பதிவு சொல்லாமல் சொல்கிறது. அவர் கொலை செய்தது ஆகஸ்ட் 30-ஆம் தேதி. ஆனால் 28-ஆம் தேதியே தனது பேஸ்புக்கில் யார் என்ன சொல்வார்கள் என கவலைப்படாதீர், உங்களுக்கு பிடித்தமான வழியில் வாழ்க்கையை மகிழ்ச்சியாக்கி கொள்ளுங்கள் என்று அந்த வாசகத்தில் இடம்பெற்றுள்ளது.

வேறு ஆதாரம்
இதை பார்க்கும் போது ஏதோ ஜஸ்ட் லைக் தட் என்பது போல் அவர் பதிவு செய்யவில்லை என்றே தெரிகிறது. எல்லாமே திட்டமிட்டப்படியே நடந்துள்ளதற்கு இதை விட வேறு ஆதாரம் என்ன வேண்டும்?
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications