''மூத்தவனே.. முத்துவுக்கு பின் பிறந்தவனே.. ''.. அழகிரியைச் சந்தித்து கருணாநிதியே ஆதரவு கேட்டுட்டா??
மதுரை: மு.க.அழகிரிதான் இப்போதைக்கு தமிழக அரசியல்வாதிகளிலேயே ரொம்பப் பிசி... காரணம் அவரைச் சந்தித்து ஆதரவைப் பெற்றுக் கொண்டு பரம திருப்தி அடைவதில் பலரும் படு மும்முரமாக மதுரைக்குப் படையெடுத்து கொண்டிருக்கிறார்கள்.
அழகிரியும் சளைக்காமல் சந்திக்க வருபவர்களை எல்லாம் சந்தித்து ஆகட்டும் பார்க்கலாம் என்று வருகவர்கள் விடுக்கும் கோரிக்கைகளை மனப் பாக்கெட்டில் போட்டு வைத்துக் கொண்டிருக்கிறார்.
மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூப்பிட்டாக.. பாஜக ராஜா வந்து சந்திச்சாக.. மதிமுக அழகு சுந்தரம் வந்து போனாக.. காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகனும் வரப் போராக.. என்று அழகிரியை நாடி வரும் பக்தர் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இப்படியே போனால் யார் யாரெல்லாம் அழகிரியைச் சந்தித்து ஆதரவு கேட்பார்களோ என்று சற்றே திகிலுடன் நினைத்துப் பார்க்க வேண்டியுள்ளது.

''மூத்தவனே.. முத்துவுக்குப் பின் பிறந்தவனே.. ''
நாளையே திமுக தலைவர் கருணாநிதி பாண்டியன் எக்ஸ்பிரஸ் ரயில் ஏறி டிவிஎஸ் நகர் வந்து இறங்கலாம். மூத்தவனே.. முத்துக்குப் பின் பிறந்த நல்லவனே.. நீ வேறு நான் வேறா.. போகட்டும் வேறுபாடு.. ஆர்த்தெழுந்து கிளம்பு.. இந்த அப்பனுக்கும் வாய்ஸ் கொடு... என்று மகனிடம் ஆதரவு கேட்டாலும் கேட்கலாம்.

மெயன் ஹூ சோனியாஜி
அதேபோல சோனியா காந்தி வாய்ஸ் கேட்டு, வாய்ஸ் மெசேஜ் முதல் பேஸ்புக் வரை பல ரூபங்களில் அழகிரியைத் தொடர்பு கொள்ள வாய்ப்புள்ளது. அதற்குரிய அனைத்து 'எம்பவர்மென்ட்' நடவடிக்கைளையும் ராகுல் காந்தி மேற்கொள்ளக் கூடிய அறிகுறிகளையும் நாம் காண நேரிடலாம்.

கெஜ்ரிவால் வரலாம்
தமிழகத்தில் தனக்கென தனி முத்திரை பதிக்க காத்திருக்கும் ஆம் ஆத்மிக்கு ஆதரவு கேட்டு கெஜ்ரிவால் கூட இன்லேன்ட் லெட்டர் எழுதி ஆதரவு கேட்கலாம். ஆனால் காலையில் எழுந்து ஹார்லிக்ஸ் குடித்த பின்னர் அவர் இந்த லெட்டரை எழுதினால் அந்த கடிதம் கடைசி வரை போஸ்ட் செய்ய்யப்படாமலேயே போகக் கூடும்.

லாலு கூட கேட்கலாம்
தென் மாவட்டங்களில் யாதவ சமூகத்தினர் வாக்குகளை அப்படியே உங்களுக்குத் தருபகிறோம். பதிலுக்கு நீங்கள் உங்கள் உழைப்பைத் தாருங்கள் என்று தனது மகள் மிசா பாரதி மூலமாக அழகிரியைத் தொடர்பு கொண்டு லாலு பிரசாத் யாதவ் ஆதரவு கேட்கலாம்.

என்ன பொருத்தம்.. நமக்குள் என்னப் பொருத்தம்
ஒரு வேளை மன்மோகன் சிங் திடீரென தேர்தலில் போட்டியிடும் மூடுக்கு வந்து நிற்க முடிவும் எடுத்து விட்டால் அவரும் கூட ஆதரவு கேட்கலாம். நீங்களும் நாடாளுமன்றத்தில் பேசியதே இல்லை. நானும் பெரும்பாலும் எங்கேயுமே பேச மாட்டேன். நமக்குள் நல்ல பொருத்தம் உள்ளது. பேசாமல் யு கேன் சப்போர்ட் மீ.. வி வில் மேக் தி நேஷன் ஸ்டிராங் அன்ட் தி எக்கானமி வில் குரோ இன் த ரேட் ஆப் 9 பர்சன்ட் பெர் இயர் டெஸ்பைட் தி நேஷன்...

அட ஏண்ணே, வாண்ணே...
இப்படியே போனால் கடைசியில் மு.க.ஸ்டாலினே வந்து ஏண்ணே, நாந்தாண்ணே.. அட வாண்ணே என்று கூறி உருக்கமாக பேசி அழகிரியை அழ வைத்து, கண்ணீரைத் துடைக்க கர்ச்சீப் கொடுத்து கடைசியில் ஆதரவை மட்டும் கபளீகரம் செய்து கொண்டு போகக் கூடிய வாய்ப்புகளையும் நாம் பார்க்கக் கூடும்.












Click it and Unblock the Notifications