முதல் பக்க விளம்பரத்தில் முதல் முறையாக "அன்புமணியாகிய நான்".. !
சென்னை: திமுகவினர் கிட்டத்தட்ட குத்தகை எடுத்திருந்தது போல தொடர்ந்து போட்டு வந்த முழுப்பக்க விளம்பரத்திற்கு மத்தியில் இன்று பாமகவின் முழுப்பக்க விளம்பரத்தைக் காண நேர்ந்தது. இன்று சென்னை வண்டலூரில் பாமக மாற்றம் முன்னேற்றத்துக்கான பாமகவின் மாநாடு நடைபெறும் நிலையில் டாக்டர் அன்புமணியாகிய நான் என்ற பெயரில் இன்று முழுப்பக்க விளம்பரத்தை பாமக கொடுத்துள்ளது.
சட்டசபைத் தேர்தலில் பாமக தனித்துப் போட்டியிடப் போவதாகவே தொடர்ந்து கூறி வருகிறது. மேலும் டாக்டர் அன்புமணியை முதல்வர் வேட்பாளராக அறிவித்துள்ள பாமக, தனது தலைமையில் கூட்டணி அமையும் என்றும் கூறி வருகிறது.
இந்த நிலையில் இன்று மாலை வண்டலூர் விஜிபி மைதானத்தில் தனது 9வது மண்டல மாநாட்டை நடத்துகிறது பாமக.

மாற்றத்துக்கான மாநாடு
மாற்றம் முன்னேற்றம் அன்புமணி என்ற முழக்கத்துடன் செயல்பட்டு வரும் பாமக, இன்றைய மாநாட்டை மாற்றம், முன்னேற்றத்துக்கான மாநாடாக நடத்துகிறது.

பிரமாண்ட ஏற்பாடுகள்
இந்த மாநாட்டுக்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்து பின்னர் அனுமதி அளித்தது என்பதால் பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இதனால் வரலாறு காணாத வகையில் பெரும் கூட்டத்தைக் கூட்ட பிரமாண்ட ஏற்பாடுகளை பாமக செய்துள்ளது.

மாலை 5 மணிக்கு
இன்று மாலை 5 மணிக்கு வண்டலூர் விஜிபி மைதானத்தில் இந்த மாநாடு நடைபெறும். இங்குதான் முன்பு மோடி கூட்டமும் நடைபெற்றது என்பது நினைவிருக்கலாம்.

9வது மண்டல மாநாடு
இதுவரை 8 மண்டல மாநாடுகளை நடத்தியுள்ள பாமக இதை 9வது மண்டல மாநாடாகவும் நடத்துகிறது. மேலும் டாக்டர் அன்புமணியை முதல்வர் வேட்பாளராக அறிவித்து ஒரு ஆண்டு ஆகிறது. அதையொட்டியும் இந்த மாநாட்டை வெற்றியாக்க பாமகவினர் துடிப்பாக உள்ளனர்.

முக்கிய அறிவிப்புகள் - கூட்டணி
இந்த மாநாட்டில் டாக்டர் ராமதாஸ் பல முக்கிய அறிவிப்புகளை வெளியிடலாம் என்று தெரிகிறது. குறிப்பாக பாமகவின் கூட்டணி தொடர்பான அறிவிப்பு வெகுவாக எதிர்பார்க்கப்படுகிறது.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications