Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

காத்திருக்கும் "3 கண்கள்".. காஞ்சிபுரத்தில் என்ன சொல்வார் விஜயகாந்த்??

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக அரசியில் களம் மட்டுமல்லாமல், மக்களும் இதுவரை கண்டிராத ஒரு அதிசயத் தலைவர் விஜயகாந்த். கடைசி நொடி வரை கப்சிப்பென்று இருந்து விட்டு காரியத்தை சாதிப்பவர் இவர். இப்போதும் அப்படித்தான் 3 பேரை ரொம்பவே இம்சைப்படுத்தி வருகிறார் விஜயகாந்த்.

கொள்கை, கோட்பாடு என்று எதுவுமே இல்லாமல் இத்தனை காலம் அரசியலில் தாக்குப்பிடித்த, சக்தியாகவும் மாறி நிற்கிற ஒரே கட்சி தேமுதிகவாக மட்டுமே இருக்க முடியும். அதுவே அதிசயம்தான்.

விஜயகாந்த் வைத்திருந்த ஒரே கொள்கை, தேர்தல்களில் தனித்துப் போட்டியிடுவது என்பது மட்டுமே. அதையும் கூட கடந்த சட்டசபைத் தேர்தலோடு கைகழுவி விட்டார்.

தேர்தல் கால மாநாடு

தேர்தல் கால மாநாடு

கடந்த சட்டசபைத் தேர்தலுக்கு முன்பாக சேலத்தில் கூட்டம் போட்டார் விஜயகாந்த். பயங்கர கூட்டம். அத்தனை பேரும் விஜயகாந்த் என்ன சொல்லப் போகிறார் என்ற எதிர்பார்ப்பில் இருந்தனர். அந்தத் தேர்தலி்ல கூட்டணியில் இணைந்தே ஆக வேண்டும் என்ற நிலையில் இருந்தது தேமுதிக.

அதிமுகவில் இணைந்தார்

அதிமுகவில் இணைந்தார்

கூட்டணியில் சேராமல் மீண்டும் தனித்துப் போட்டியிட்டால் கட்சி காலியாகி விடும் என்ற இக்கட்டான நிலையால் அதிமுக கூட்டணிக்கு ஆதராக முடிவெடுத்தார் விஜயகாந்த். அதையும் கூட கூட்டத்தில் தெளிவாக, பளிச்சென சொல்லவில்லை விஜயகாந்த். பூசி மெழுகி அலங்கார வார்த்தைகளைப் போட்டுக் குழப்பமாகத்தான் சொல்லி முடித்தார்.

லோக்சபா தேர்தலில் பாஜகவுக்குத் தாவல்

லோக்சபா தேர்தலில் பாஜகவுக்குத் தாவல்

அடுத்து வந்த லோக்சபா தேர்தலில் அதிமுக தனித்துப் போட்டியிட்டது. திமுகவோ, விஜயகாந்த்தை எதிர்பார்த்தது. ஆனால் அவரோ பாஜக பக்கம் போனார். படு தோல்வியைச் சந்தித்தது தேமுதிக. பாஜகவுக்கோ ஒரு சீட் கிடைத்தது. பாமகவுக்கும் கூட ஒரு சீட் கிடைத்தது. திமுக நிலை பரிதாபம். பிளவைப் பயன்படுத்தி செமத்தியான லாபம் பார்த்தது அதிமுக.

இப்போது யாருடன் குலவால்?

இப்போது யாருடன் குலவால்?

இப்படி குறுகிய காலத்தில் இருந்த இடத்திலிருந்தே அடுத்தடுத்து 2 கூட்டணிகளுக்குத் தாவிய விஜயகாந்த் இப்போது அடுத்த கூட்டணிக்கு மாறும் நிலைக்கு வந்துள்ளார். இப்போது அவர் எந்தக் கூட்டணிக்குப் போகப் போகிறார் என்பதுதான் பெரிய சஸ்பென்ஸாக இருக்கிறது.

திமுக - பாஜக - மக்கள் நலக் கூட்டணி

திமுக - பாஜக - மக்கள் நலக் கூட்டணி

தற்போது விஜயகாந்ததை எதிர்பார்த்து 3 பேர் காத்துள்ளனர். திமுக, பாஜக மற்றும் மக்கள் நலக் கூட்டணி ஆகியவை அவை.

கவலைப்படாத திமுக

கவலைப்படாத திமுக

திமுக ஒரு கட்டத்தில் தேமுதிகவுக்காக கடுமையாக முயன்று வந்தது. ஆனால் இப்போது வந்தால் வரட்டும், வராட்டியும் கவலை இல்லை என்ற மன நிலைக்கு திமுக வந்து விட்டது.

இப்படியா பேரம் பேசுவது

இப்படியா பேரம் பேசுவது

விஜயகாந்த் தரப்பு பேசி வரும் பேரம் திமுகவை கடுப்புக்குள்ளாக்கி இருப்பதாக விவரம் தெரிந்தவர்கள் கூறுகிறார்கள். ஒரு அளவுக்குத்தானே கேட்க வேண்டும். ஒரேயடியாக கேட்டால் எப்படி என்று திமுக தரப்பில் சொல்கிறார்களாம்.

பாஜக

பாஜக

அடுத்து பாஜக. தேமுதிக வந்தால்தான் பாஜக கூட்டணிக்கு பலமே என்பதால் அந்தக் கட்சியும் தேமுதிகவை தொடர்ந்து தீவிரமாக எதிர்பார்த்து உள்ளது. பாஜகவுடனும் விஜயகாந்த் தரப்பு தொடர்ந்து பேரம் பேசியபடிதான் உள்ளதாம்.

மக்கள் நலக் கூட்டணி

மக்கள் நலக் கூட்டணி

இவர்களுடன் பேரம் பேச வாய்ப்பில்லை. எனவே இந்தக் கூட்டணி வாய்ப்பை கடைசி சாய்ஸாகத்தான் வைத்துள்ளாராம் விஜயகாந்த். திமுக அல்லது பாஜக என்ற முடிவுக்கு அவர் வந்தால் மக்கள் நலக் கூட்டணியைக் கைவிடலாம். முதல் இரு வாய்ப்பும் வேண்டாம் என்றால் இந்தக் கூட்டணிக்கு அவர் வரலாமாம்.

3வது மாநாடு

3வது மாநாடு

தேமுதிகவைப் பொறுத்தவரை இது 3வது முக்கிய மாநாடு. இதற்கு முன்பு 2011ல் சேலத்தில் நடந்த உரிமை மீட்பு மாநாடு ( அது என்ன உரிமைன்னு தெரியலையே). 2014ல் விழுப்புரத்தில் நடந்த ஊழல் எதிர்ப்பு மாநாடு. அடுத்து இப்போது நடத்தப் போகும் அரசியல் திருப்புமுனை மாநாடு.

கூட்டம் நல்லா வரணும்

கூட்டம் நல்லா வரணும்

மாநாட்டில் அதிக அளவில் தொண்டர்களைத் திரட்டி மாஸ் காட்ட வேண்டும் என்று விஜயகாந்த் உத்தரவிட்டுள்ளாராம். எனவே அதிக அளவில் ஆட்களைத் திரட்டிக் கொண்டு வரும் ஏற்பாடுகளும் நடந்து வருகிறதாம்.

காஞ்சி குலுங்கும்.. ஆட்சி மாறுமா??

காஞ்சி குலுங்கும்.. ஆட்சி மாறுமா??

காஞ்சி குலுங்கட்டும், காலம் கனியட்டும், ஆட்சி மாறட்டும் என்ற கோஷத்துடன் தமிழக அரசியலின் திருப்புமுனை மாநாட்டை வெற்றிபெறச் செய்ய அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன் என்று விஜயகாந்த் கூறியுள்ளார். பார்க்கலாம் அவர் சொன்னது நடக்குமா என்பதை.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+