குளோபல் வார்மிங்கிற்கே சிம்புதான் காரணம் என்பீர்களா? வரிந்துகட்டும் விமர்சகர்
சென்னை: கெட்ட வார்த்தைகளுடன் கூடிய ஒரு பாடலுக்கு அனிருத் இசையமைக்க, சிம்பு பாடியதாக கூறப்படும் ஒரு பாடல் யூடியூப் வழியாக உலகமெங்கும் பரவியுள்ளது. கெட்ட வார்த்தை வரும் இடத்தில் பீப்.. ஒலி கொடுக்கப்பட்டுள்ளதால் இது பீப் சாங் என பெயர் பெற்றுவிட்டது.
மகளிர் சங்கங்கள் ஆர்ப்பாட்டம், போலீசில் புகார் என இந்த பீப் சாங், எந்திரன்-2 படத்தைவிட அதிக பப்ளிசிட்டி தேடிவிட்டது.
இந்நிலையில், சிம்புவுக்கு ஆதரவாக யூடியூப் திரைப்பட விமர்சகர் பிரசாந்த் சில கருத்துகளை கூறியுள்ளார். இதை சிம்பு தனது டிவிட்டர் கணக்கில் ரீடிவிட் செய்து, அவரது கருத்துக்கு தனது ஒப்புதல் இருப்பதை பறைசாற்றியுள்ளார்.

சீண்டவில்லை
அதில் பிரசாந்த் பேசுகையில், பீப் சாங்கில் ஏதோ கெட்ட வார்த்தை மாதிரி வருகிறது. அதுவும் மியூட் செய்யப்பட்டுள்ளது. பெண்களை பெரிதாக கேவலப்படுத்தவில்லை. வழக்கமாகவாவது பொண்ணுங்களை சீண்டும் பாடல் வரிகள் இருக்கும். இதில் அதுவும் இல்லை. பசங்கள பார்த்து நீங்க பண்றதுதான் தப்பு என்று சொல்லி பாட்டு முடிகி்றது.

க்ளோபல் வார்மிங்
இந்த பாட்டுக்காக நாடே பற்றி எரியும் அளவுக்கு எதிர்வினை ஆற்றப்படுகிறது, வார பத்திரிகையொன்று 2 பக்கங்களுக்கு கட்டுரை போட்டு, சீர்கேட்டுக்கு சிம்புதான் காரணம் என கட்டுரை எழுதியுள்ளது. உலகம் வெப்பமயமாவதற்கும் சிம்புதான் காரணம் என்று கூறும் அளவுக்கு விமர்சனங்கள் உள்ளன.

சென்சார் ஆனதா?
ஒரு பாடலை பற்றி விமர்சனம் செய்யும் தகுதி அது, சரியான பிளாட்பாரமில் வெளியாகும்போதுதான் வருகிறது, சென்சார் போய் வந்த படத்தைதான் திட்டவோ, பாராட்டவோ முடியும். பீப் சாங் எனப்படுவது திருடி, ஆன்லைனில் போடப்பட்ட பாடல். நாமே ஆன்லைனில் வான்டடாக போய் பாடலை கேட்டுவிட்டு, சிம்பு அனிருத்தை திட்டுகிறதோம். இதில் நமக்கு என்ன உரிமையுள்ளது.

மாற்றியிருக்கலாமே
இந்த பாடல் ஆயிரம் வெர்ஷனில் ஒன்றாக இருக்கலாம், இதை மாற்றம் செய்து வெளிக்கொண்டுவரவும் சம்மந்தப்பட்டவர்கள் திட்டமிட்டிருக்கலாம். அபீசியலாக வெளியான பாடலாக இருந்திருந்தால், ரெண்டு பேரையும் கழுவி ஊற்ற நமக்கு உரிமையுள்ளது. ரிலீசாகாத பாடலுக்காக சட்டையை பிடித்து இழுப்பது நியாயமா

பாராட்டுங்கள்
இதே சிம்பு, ரொம்ப சிரமப்பட்டு, லவ் அந்தம் என்ற பெயரில் அழகான பாடலை வெளியிட்டார். 100 பேரில் 2 பேர்தான் பாராட்டினர். மற்றவர்கள் அதை கண்டுக்கலை. பீப் பாடலை சிம்பு ரிலீஸ் செய்யவில்லை. நெகட்டிவ் என்றதும், சிம்பு மீது பாய்வது சரியில்லை. சிம்பு ஒரு கொடிய மனிதர் என்ற தோற்றத்தை உருவாக்க முயற்சி செய்வது ஆரோக்கியமில்லை, அபத்தமானது.

ஆபாச படம் பார்க்கலியா
ஆன்லைனிலும், ஆப்லைனிலும் கொந்தளிக்கும் மக்கள், எத்தனை பேர் ஹரஹர மகாதேவி ஆடியோவில், பொண்ணுங்களை கேவலப்படுத்தியதை பார்க்காமல் இருந்துள்ளீர்கள்? பார்த்துவிட்டு கெக்கபிக்க என சிரிக்கவில்லையா. ஆபாச படம் யாரும் பார்க்கவில்லையா? அதையும் ஜாலியாக பார்த்து கடந்தவர்கள்தானே நாம். அடுத்தவன் பெட்ரூம், பாத்ரூமில் கேமரா வைத்து எடுத்த வீடியோவை ஜட்ஜ் பண்ணுவதற்கு சமமானதுதான் பீப் சாங் மீதான விமர்சனம்.

சுதந்திரம்
ஏ சர்டிபிகேட்டோடு வெளியானால் அடல்ட் விவகாரங்களை கூட அந்த படத்திலோ, பாடலிலோ கூற இந்த நாட்டில் சுதந்திரம் உள்ளது. வட இந்தியாவில், ஒரு நாடக குழு பத்தாயிரம் பேரை உட்கார வைத்துக்கொண்டு மேடையில் மாறி மாறி ஜாலிக்காக ஒருவர் குடும்பத்தை மற்றவர்கள் திட்டுகிறார்கள். இது கருத்து சுதந்திரம் என பாராட்டும் நாம், பீப் சாங்கை ஜாலியாக எடுத்தகாமல் உள்ளோம். சர்ச்சைகளை தேடி சென்று கண்டுபிடித்து நாம் சண்டை போடுவவதை போல உள்ளது.
அபீசியல் இல்லை
இதேபாடல் அபீசியலாக வெளியிடப்பட்டிருந்தால், சிம்புவை காரி துப்புங்கள். தப்பில்லை. பாசிட்டிவை பாராட்டும் மனப்பாங்கை நாம் வளர்த்துக்கொள்ள வேண்டும். இவ்வாறு பிரசாந்த் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications