இவங்கெல்லாம் ஹெல்மெட் போட ஆரம்பிச்சுட்டாங்க.. அப்ப நீங்க..? வாட்ஸ் ஆப் வறுவல்!
சென்னை: எது எடுத்தாலும் பத்து ரூபாய்க்கு என்பது போல, எந்தப் பிரச்சின என்றாலும் வாட்ஸ் ஆப்பில் வறுத்து எடுத்து விடுவது வாட்ஸ் ஆப்பர்களின் வழக்கம். அந்த வகையில் தற்போது ஹெல்மெட்டை கையில் எடுத்துள்ளனர்.
இன்று முதல் ஹெல்மெட் கட்டாயம் என்ற உத்தரவை (மீண்டும்) கட்டாயமாக அமல்படுத்த காவல்துறையினர் களம் இறங்கியுள்ள நிலையில் அதை வைத்து ஏகப்பட்ட படங்களை வாட்ஸ் ஆப்பில் பலர் வலம் விட்டு வருகின்றனர்.
ஒவ்வொரு படமும் ஒரு மார்க்கமாகததான் இருக்கிறது. ரசித்துப் பார்க்க வைக்கிறது.

பரிணாம வளர்ச்சி
இந்தப் படம் ஹெல்மெட்டின் பரிணாம வளர்ச்சியை காட்டுவதாக சித்தரிக்கிறது. 2015ல் டூவீலர், 2018ல் சைக்கிள், 2020ல் நடப்பதற்கு, 2022ல் படுத்துத் தூங்கும்போது என்று சித்தரித்துள்ளனர்.

அடேங்கப்பா
இந்த ஐடியா அய்யாச்சாமிகளின் ஐடியாவைப் பாருங்களேன்.. பெரிய சைஸ் பைப் ஜாயிண்டுகளையே ஹெல்மெட்டாக்கி விட்டனர்.

நாய் ரைடு
பின்னாடி யாரு உட்கார்ந்தாலும் ஹெல்மெட் போடனும்ல.. அதான் போட்டுட்டாங்க.. இது ஜாய் ரைடு அல்ல நாய் ரைடு...!

டிரம்மைத் தூக்கி தலையில போடு
இவர் டிரெண்ட் செட்டரா அல்லது டிரம் செட்டரா என்றே தெரியலையே!

சட்டி ரெடி.. வடை ரெடியா
வெளில போகும்போது ஹெல்மெட்டாகவும், வீட்டுக்கு வந்ததும் வடைச் சட்டியாகவும் டூ இன் ஒன்னாக பயன்படுத்துவார் போல.!

வப்போம்ல.. ரியர் வியூ மிர்ரர்
இவர் சூப்பர் மேன் கிடையாது பாஸ்.. ரியர் வியூ மிர்ரர் மேன்.. இப்படிப்பட்ட மிராக்கிள் ஐடியா எல்லாம் எங்கிருந்துதான் வந்து கொட்டுமோ தெரியலை.. நல்லவேளை வைப்பர் வைக்காம விட்டாரே!

வேர் இஸ் தி பார்ட்டி!
ஊருக்கு உபதேசம்.. என்பதை சொல்லாமல் சொல்லிக் காட்டும் படம் இது.

நீங்க போடாட்டி என்ன நாங்க போடுவோம்ல
பாபநாசம் பட போஸ்டரில் இந்தப் படத்துக்கு ஹெல்மெட் போடாமல் விட்டதற்காக கமல்ஹாசன் வருத்தப்பட்டார் இல்லையா.. உடனேயே போட்டு வலம் விட்டுட்டாங்க பாருங்க..!

அடியாத்தாடீ..!
இது செம பாஸ்.. ஒரே சட்டியில் இரண்டு பேர்.. அம்மாவும், பிள்ளையும்.. அப்பா தலை மட்டும் வேகன்ட்!

இது பாபநாசம் பார்ட் டூ
இதுவும் பாபநாசம் குரூப் போலத்தான். இத்தனை பேரை, அதுல பாருங்க ஒரு குட்டியை. பெயிண்ட் வாளிக்குள்.. ஏத்தி ஓட்டிட்டுப் போற அந்த மகராஜன், ஹெல்மெட் வாங்கவே பேங்க்ல கடன் வாங்கனும் போலயே!
-
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு? -
விஜய்யின் கனவு திட்டம்.. கூவம், அடையாறு ஆறுகளை மாற்றப்போகும் மாஸ்டர்பிளான்.. கைகோர்க்கும் டெல்லி












Click it and Unblock the Notifications