டாஸ் போடும்போது கண் கலங்கனும்.. ஐசிசியும், கட்சி தலைவர்களும் ஒரு வாட்ஸப் கலகல!
சென்னை: வாட்ஸாப்பில் ஒரு ஜோக். உலகக் கோப்பைக் கிரிக்கெட் போட்டியை வைத்து எழுதப்பட்ட ஹாஸ்யம் அது.
வழக்கம் போல தலைவர்களை வைத்துதான் இந்த ஹாஸ்யமும். படிக்க சுவாரஸ்யமாக இருந்தது...
சம்பந்தப்பட்டவர்களும் கூட இதை ஜாலியாக எடுத்துக் கொள்வார்கள் என்ற நம்பிக்கையுடன், நாம் கண்டதை உங்களுக்கும் தருகிறோம்...

இதுதான் அது....
உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் தொடங்கியுள்ள நிலையில் அதை மீண்டும் கைப்பற்ற இந்திய கேப்டன் தோனிக்கு நம் தலைவர்கள் ஆலோசனை சொன்னால் எப்படி இருக்கும்? - ஒரு கற்பனை

ஜெயலலிதா:
வீரர்கள் ஒழுங்கா பந்தாடறாங்களோ இல்லையோ, அவங்களை நாம பந்தாடணும். அதிரடி பேட்ஸ்மேனை திடீர்னு பவுலிங்குக்கு அனுப்பணும். பவுலரை பந்து பொறுக்கிப் போடச்சொல்லிட்டு, அந்த வேலை செய்யுற பையனை அம்பயர் ஆக்கிடணும். "எப்போ, யாரைத் தூக்குவாங்களோ"ங்கிற கிலியில நல்லா ஆடுவாங்க. எதிர் டீம்ல நல்லா ஆடுற வீரருக்கு குவாலிஸ், இன்னோவா தரப்படும்னு ஆசை காட்டி கூப்பிட்டு வச்சுக்கலாம். அப்புறம் கப்பு நமக்குத்தான்.

கருணாநிதி:
தம்பீ! எனக்கென்னவோ இந்த ஆஸ்திரேலியாவை ஜெயிச்சு கப்பு வாங்க முடியும்னு தோணலை. அதனால ஆஸ்திரேலியாவுக்கு எதிரா உங்க தலைமையில பொது அணி உருவாகணும்னு குரல் கொடுங்க. அப்படி யாரும் சேர வரலைன்னா, "அம்பயர்களுக்கு பணம் கொடுத்து ஆஸ்திரேலியா ஜெயிச்சுடுச்சு"ன்னு புகாரைக் கிளப்பிவிடுங்க. நம்ம மக்கள் நிச்சயம் நம்புவாங்க. ஆனா ஒண்ணு.. எது நடந்தாலும் கேப்டன் பதவியை மட்டும் விட்டுடவே கூடாது.

மோடி:
‘‘ஹமாரா தேஷ் கோ இந்துஸ்தான் சப்பக் பச்சக் லேத்தா ஹூம்..'' அப்படீன்னு கம்பீரமா ஒரு சவுண்ட் விட்டுக்கிட்டே பந்தை வீசுங்க. என்ன சொல்றீங்கன்னு புரியாம ஜெர்க் ஆகியே பேட்ஸ்மேன் அவுட் ஆகிடுவாரு. முதல்ல நீலநிற டிரஸ்ஸை மாத்துங்க.

காவி கலர் யூனிபார்ம்:
நம்ம பார்ட்டி நம்பருக்கு ஒரு மிஸ்டு கால் கொடுத்தா எல்லாருக்கும் காவி கலர் யூனிபார்ம் ரெடியாகிடும். டிரெஸ்ல ஒவ்வொரு நூல்லயும் உங்க பேரை பிரின்ட் பண்ணச் சொல்லிடலாம். எதிர் டீம் உங்க டிரெஸ் பத்தி மட்டும் பேசிகிட்டு, மேட்ச்சை கோட்டை விட்டுடுவாங்க. எதுக்கும், கில்லாடி அமித்ஷாகிட்ட ஒரு தடவை ஆலோசனை கேட்டுக்கங்க. டெல்லி மேட்ச் தவிர எல்லாத்துக்கும் சூப்பரா ஐடியா கொடுப்பார்.

ராமதாஸ்:
இன்றைய இளைஞர்கள் சீரழியறதுக்கு காரணமே காதல்தான். அதனால காதலிக்கிற வீரர்களை டீம்ல இருந்து தூக்குங்க. குறிப்பா அந்த நடிகையை காதலிக்கிற ‘கோலி'ப்பயலை தூக்கிடுங்க. இதையெல்லாம் பண்ணியும் டீமைத் தேத்த முடியாதுன்னு தோணினா, பேசாம ஜெயிக்கிற நிலைமையில இருக்கிற டீமோட கூட்டணி சேர்ந்துடுங்க. அதையும் மீறித் தோத்துட்டா, கவலைப்படாதீங்க... 2019-ல் கோப்பையை வெல்வோம்னு நிதானமா அறிக்கை விட்டுக்கலாம்.

ஓ.பன்னீர்செல்வம்:
போட்டியில ஜெயிக்க உடம்பு ஃபிட்னஸ் ரொம்ப முக்கியம். சீட் நுனிகூட ஜாஸ்தி. அதைவிட கம்மியான இடத்துல உட்காரப் பழகணும். நீங்க கேப்டனாவே இருந்தாலும் உங்களை இந்தப் பதவிக்கு தேர்ந்தெடுத்தது தேர்வுக் குழுங்கிறதை மறந்துடக்கூடாது. அவங்க அனுமதியில்லாம மைதானத்துல டீம் மீட்டிங்கூட போடக்கூடாது. ஒவ்வொரு தடவை டாஸ் போடும்போதும் அவங்களை நினைச்சு கண் கலங்கணும். நாம ஏதோ சோகத்துல இருக்கமாதிரி அடிக்கடி டவலால கண்ணை துடைச்சிட்டே இருக்கணும். தேவைப்பட்டா கிளிசரின்கூட பயன்படுத்தலாம்.
-
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications