அரசியல் தலைவர்கள் பெயரில் பட்டாசு வந்தால் எப்படி வெடிக்கும் தெரியுமா? வாட்ச்அப் கலகல
சென்னை: அரசியல் தலைவர்கள் பெயரில் தீபாவளி பட்டாசு வெளியானால், அவை எப்படி வெடிக்கும் என்பது குறித்து, நகைச்சுவையாக ஒரு மெசேஜ் வாட்ச்அப்பில் சுற்றி வருகிறது.
அந்த மெசேஜ் இதுதான்: தீபாவளி வந்தாச்சு..... .இந்த வருஷம் என்னன்ன புது வெடி வந்துருக்குனு பார்ப்போம்.

1. மோடி வெடி - இது இந்தியாவில் தயாரிக்கப்பட்ட வெடி. இதை நீங்க பத்தவைச்சா சீனா, ஜப்பான், சிங்கப்பூர் அமெரிக்கானு எல்லா நாட்டுக்கும் போகும். குழந்தைகள் கிட்டகொடுத்து பத்த வைக்கச் சொல்லலாம். செல்பியும் எடுக்கலாம் .இதோட ஸ்பெஷாலிட்டியே கடைசி வரைக்கும் இந்தியாவில் வெடிக்காது.
2. ஸ்டாலின் வெடி - இது கொஞ்சம் ஈசியான வெடி. 'நமக்கு நாமே' வெடிக்கலாம். இதை நீங்க பத்த வச்சீங்கனா ஏதாவது போட்டோ ஸ்டுடியோகிட்ட போய்த்தான் வெடிக்கும்.
3. அம்மா வெடி - இதுல மெயின் வெடி கூட ஒரு கட்டு வெடி இருக்கும். நீங்க மெயின் வெடியை பத்த வச்சீங்கனாதான் அந்த கட்டுல மிச்ச வெடியெல்லாம் வெடிக்கும்.
4. கேப்டன் வெடி - இந்த வெடியோட சிறப்பம்சமே இதை தண்ணியில நனைச்சு வச்சீங்கனாத்தான் வெடிக்கும். கவனமா இருக்கனும் சில நேரம் " தூக்கி அடிச்சிரும்"
5. கலைஞர் வெடி - இந்த வெடி முதல்ல வெடிக்கிற மாதிரி இருக்கும். அப்புறம் புஸ்னு போக்கும். திரும்பவும் வெடிக்கிற மாதிரி போகும். இப்படி போக்கு காமிச்சுகிட்டே இருக்கும். ஆனா கடைசி வரைக்கும் வெடிக்காது.
6. சுப்பிரமணியசாமி வெடி - இதை நீங்க பத்த வச்சீங்கனா ரொம்ப நாள் கழிச்சு கோர்ட்டில போய் வெடிக்கும்.
7. வைகோ வெடி - இது நீங்க பத்தவச்சீங்கன்னா, பயங்கர ஆக்ரோஷமா கொஞ்ச தூரம் சீறிகிட்டு. ஆனா கடைசில புஸ்ஸுன்னு போயிரும். வெடிக்க மட்டும் செய்யாது.
8. நயன்தாரா வெடி - இதுல மூணு பட்டாசு இருக்கும். ஒண்ணு டூப்ளிகேட். இன்னொன்னும் டூப்ளிகேட். மூணாவதா உள்ளது டூப்ளிக்கேட்டுதானான்னு கண்டுபிடிக்கனும். இதுல என்ன விசேஷம்னா ஒரிஜினல் பத்த வச்சா இந்தப் பட்டாசு வெடிக்காது. டூப்ளிகேட் பத்த வச்சாத்தான் வெடிக்கும்.
9. விஷால் வெடி- இந்த வெடியோட ஸ்பெஷலே உங்ககிட்ட இருக்க வெடி திருட்டு வெடியானு கண்டுபிடிக்கும். அப்புறம் சிவகாசிக்கே போய் வெடிக்கும்.
10. டி.ஆர் வெடி- இது அற்புத வேடி, அசால்ட் வெடினு.. சவுண்ட் வரும் ஆனா வெடிக்காது. அப்றம் பக்கத்துல வைக்கிற வேற வெடியும் புஸ்சுனு போயிரும்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications