சோறு கேட்கும் சித்தப்பா… முறைச்சுப் பார்க்கும் மாமா... இது கல்யாண சொந்தங்கள்!
சென்னை: வீட்டைக் கட்டிப்பார்... கல்யாணத்தைப் பண்ணிப்பாருனு சும்மாவா சொன்னாங்க? ஆனா, அதுமட்டும் கஷ்டமில்ல... கல்யாணத்தில் யார், யார் எப்படினு கண்டுபிடிக்கறதும் கஷ்டம்தான்... அப்படி எல்லாரையும் கண்டுபிடிக்கற சுலபமான வழிதான் இந்த வாட்ஸ் அப் மெசேஜ்.
திடீர்ன்னு ஒரு கல்யாணத்துக்குள்ள நுழைஞ்சிட்டோம்னா, பொண்ணு மாப்ளைய மட்டும் படக்குன்னு கண்டுபுடிச்சிடலாம்.

ஆனா, மத்த எல்லாரையும் யார் யாருன்னு அவங்க செய்கைகளை வச்சே எப்படி கண்டுபுடிக்கிறதுங்குறதத் தான் இப்போ பாக்கப் போறோம்.
புல் மேக்கப்பா.... பொண்ணோட தங்கச்சி:
கல்யாண மேடையில, ஃபுல் மேக்கப்புல பாத்த உடனே பளிச்சின்னு தெரியிறது பொண்ணுதான். ஆனா அந்தப் பொண்ண விட அதிகமா மேக்கப் போட்டுக்கிட்டு ஒண்ணு அந்த ஸ்டேஜ்ல சுத்திக்கிட்டு இருந்தா அது தான் பொண்ணோட தங்கச்சி.
கோல்ட் சங்கிலி அக்கா:
கல்யாண வீடியோ கவரேஜ்ல எல்லா ஃப்ரேம்லயும் பொண்ணும், மாப்ளையும் இருப்பாங்க. அவங்களுக்கு அடுத்த படியா, எல்லா ஃப்ரேம்லயும் ரெண்டு, மூணு தங்க சங்கிலிகள் தெரியிற மாதிரி நிக்கிற ஒரு பொண்ணு இருக்கும். அது வேற யாரும் இல்லை. பையனோட அக்கா.
கோட் போட்ட கோட்டான்:
ஆளுக்கும், போட்டுருக்கிற ட்ரஸ்ஸுக்கும் சம்பந்தமே இல்லாம, ஆனா மாப்ளைக்கு ஈக்குவலா ஒருத்தரு கோட் சூட்டெல்லாம் போட்டுக்கிட்டு டம்மியா, ஸ்டேஜ்ல நின்னுகிட்டு இருப்பாரு. அது வேற யாரும் இல்லை. மாப்ளையோட அக்கா புருஷன். அந்தக் கோட்டை, அவர் கல்யாண ரிஷப்ஷனுக்கு அப்புறம் இப்பதான் போட்டுருப்பாரு.
ரூட்டு கிளியர் மாப்பிள்ளை தம்பி:
இன்னொருத்தரு மாப்ள மாதிரியே வேஷ்டி, சட்டையெல்லாம் போட்டுக்கிட்டு, ஸ்டேஜ்ல நிக்காம, டான் மாதிரி அங்க இங்க ஓடுறது ஒடியாறது, வர்றவங்கள கவனிக்கிறது, ஸ்டேஜ்ல ஏறுறது இறங்குறதுன்னுரொம்ப ஆக்டிவா ரொம்ப சந்தோஷமா திரிஞ்சிட்டு இருப்பாரு. அவருதான் மாப்ளையோட தம்பி. ரூட்டு கிளியரான சந்தோஷத்துல தலைகால் புரியாம சுத்திக்கிட்டு இருப்பாப்டி மேற்படி தம்பியா பிள்ளை!
துடைச்சு விடும் ஸ்கூல் பிரண்ட்:
மாப்ளைக்கு லைட்டா வேர்த்தாலோ, வாழ்த்த வர்றவங்க கூட்டத்துல பொட்டுவைக்கும் போது லைட்டா அங்க இங்க அப்பிட்டாலோ, மின்னல் மாதிரி ஒருத்தன் ஒரு கர்ச்சீப்ப வச்சிக்கிட்டு மாப்ள மூஞ்ச தொடைச்சிட்டே இருப்பான். அவன் மாப்ளையோட ஸ்கூல் பிரண்டா இருக்கும். மொதநாள் நைட்டு பேச்சிலர் பார்ட்டில மூச்சுத் தெணறத், தெணறக் குடிச்சவனும் அவனாத்தான் இருக்கும்
எடுறா அந்த அருவாள:
கல்யாணம் முடிஞ்சி ஒரு பத்து நிமிஷம் கழிச்சி, "இய்ய்ய்யாய்...எவண்டா அவன் நா வர்றதுக்கு முன்னால தாலியக் கட்டுனது.." ன்னு மண்டபத்தோட வாசல்ல ஒருத்தன் ஃபுல் போதையில கத்திக்கிட்டு இருப்பான். அவனை யாருமே மதிக்காம, ஆனா ஒரே ஒரு அம்மா மட்டும் போய் அவன உள்ள கூப்டாங்கன்னா அவன் தான் மாப்ளையோட தாய் மாமன்.
மாட்டிகிட்டு முழிக்கும் மாப்பிள்ளை அம்மா:
பத்து மணி கல்யாணத்துக்கு பதினொன்னே முக்காலுக்கு வருவாரு. ஆனா கல்யாணம் அவர் வந்ததுக்கப்புறம் தான் நடக்கனும்னு வேற எதிர்பாப்பாரு. அப்போ அவனப் போய் கூப்டுறது யாருன்னு உங்களுக்கே தெரியும்.
சோறு எப்ப போடுவீங்க?:
கூட்டத்துல உக்காந்துருக்க எல்லாரும் "எப்பப்பா... கல்யாணம் முடியும்.. எப்பப்பா சோறு போடுவாய்ங்க" ன்னு ஒரே ஆவலோட உக்கார்ந்திருக்கும்போது, ஒரே ஒரு அம்மா மட்டும் வச்ச கண்ணு வாங்காம கல்யாணப் பொண்ணையே மொறைச்சி பாத்துகிட்டு இருக்கும்.
முறைச்சு பாக்கும் அப்பா வழி அத்தை:
அப்டி இருந்தா. அது பொண்ணோட அப்பா வழி அத்தைன்னும், அவங்க பையனுக்கு இந்தப் பொண்ணை கேட்டு, பொண்ணு வீட்டுல இல்லைன்னு சொல்லிட்டாங்கன்னும் நீங்களே கண்டுபுடிச்சிடலாம்.
பாவமான பொண்ணோட அப்பா:
மே மாசம், பீக் அவர்ல சென்னை சிட்டி பஸ்ல ட்ராவல் பண்ண மாதிரி ஒரு களைப்போட, ஒரு நிமிஷம் கூட உக்காராம, ஸ்டேஜ்ல கல்யாணம் முடிஞ்சிருச்சா இல்லையான்னு கூட கவனிக்காம எல்லாரையும் போய், "வாங்க வாங்க.. சாப்டு போங்க" ன்னு ஒருத்தர் கூப்டுட்டு இருந்தா அவர்தான் பொண்ணோட அப்பா.
பீதியில் சுத்தும் பையனோட அண்ணி:
பொண்ணுக்கு எத்தனை சவரன் நகை போட்டுருக்காய்ங்க, யார் யார் என்ன செய்றாங்கங்குற விஷயத்த, பையனோட அம்மா அப்பாவ விட, இன்னொரு முக்கியமான கேரக்டர் ரொம்ப கூர்மையா, திருட்டுப்பய நகைய கவ்வ போறப்போ பாக்குற மாதிரி ஒண்ணு பாத்துக்கிட்டு இருக்கும். அதுவேற யாரும் இல்லை. பையனோட அண்ணி.. எங்க நம்மள விட அதிகமா, கிதிகமா நகையப் போட்டுவிட்டு நம்மள டம்மி ஆக்கிறப் போறாய்ங்களோங்குற பீதியிலயே இருக்கும்.
அலட்டல் அப்பா சொந்தம்:
அந்த கல்யாணக் கூட்டத்துலயே, ஒரே ஒரு குரூப்பு மட்டும், அந்த கல்யணத்துக்கும் அவங்களுக்கும் எந்த சம்பந்தமுமே இல்லாத மாதிரி, தனியா ஒரு மீட்டிங் போட்டுக்கிட்டு இருக்கும். அதுதான் பொண்ணோட அப்பாவோட சொந்தக்காரய்ங்க.
பேச்சுலர் பார்ட்டி பிரண்ட்ஸ்:
கல்யாணமெல்லாம் முடிஞ்ச உடனே அரக்க பரக்க ஒரு கும்பல், வீங்கிப்போன மூஞ்சியோட, ஒழுங்கா சீவாத தலையோட வேக வேகமா வந்து மாப்ளைக்கும் பொண்ணுக்கும் வெறும் கைய மட்டும் குடுப்பாய்ங்க. அவிங்க வேற யாரும் இல்லை.மாப்ளையோட ஆஃபீஸ் மேட்ஸோ இல்லை காலேஜ் மேட்ஸோ. ரூம்போட்டு விடியகாலம் வரைக்கும் குடிச்சிட்டு இப்பதான் எழுந்து வர்றாய்ங்கன்னு அர்த்தம்.
குழந்தையும், பொண்டாட்டியும், கேமராவும்:
அதே கல்யாணத்துல, யாரு கூடவும் பேசாம, ஒரு இளம் கணவன், மனைவி அவங்க குழந்தைய விளையாட விட்டுட்டு, அதுக்கு ஐஸ்கிரீம் வாங்கி சாப்ட குடுத்துகிட்டு, கையில் ஒரு கேமராவ வச்சிகிட்டு சீட்டுல உக்காந்த படியே ஸூம் பண்ணி மாப்ளைய ஃபோட்டோ எடுக்குறதும், அப்பப்போ மாப்ளைய பாத்து கைகாட்டுறதுமா இருப்பாய்ங்க.
சோகத்தில் இருக்கும் காலேஜ் பிரண்ட்:
அவனும் வேற யாரும் இல்லை. மாப்ளையோட காலேஜ் ஃப்ரண்டாத்தான் இருப்பான். அவசரப்பட்டு அவிய்ங்க பேட்ச்லயே மொதல்ல கல்யாணம் பண்ணிக்கிட்டு, குழந்தை குட்டின்னு ஆயிட்டதால இப்டி பேச்சிலர் பார்ட்டில கலந்துக்க முடியாம சோகத்துல இருக்கிறவன்.
எங்கம்மா இருந்தீங்க இவ்வளோ நாளா:
கடைசியா கல்யாணம் முடிஞ்சி, எல்லாரும் ஃபோட்டோ எடுக்க வரும்போது, பொண்ணோட ஃப்ரண்ட்ஸ பாத்து "இவ்வளவு நாளா நீங்கல்லாம் எங்கம்மா இருந்தீங்கன்னு" மைண்டுல நினைக்கிறான் பாருங்க. அவந்தான் நம்ம மாப்ள.












Click it and Unblock the Notifications