For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பத்தே நாளில் பிக்பாஸ் சூட்டிங் ஓவர்.. 100 நாளுன்னு பூவா சுத்துறீங்க?: வாட்ஸ்அப் வைரல்

By Veera Kumar
Google Oneindia Tamil News

சென்னை: பிக்பாஸ் பார்த்தால் உங்களை கடவுளால் கூட காப்பாற்ற முடியாது என்று கூறி ஒரு வாட்ஸ்அப் தகவல் வைரலாக பரவி வருகிறது.

அந்த மெசேஜ் இப்படி சொல்கிறது. விஜய் TV யின் பிக்பாஸ்! நிறைய பேருக்கு இந்த நிகழ்ச்சியை பற்றி முழுசா தெரிந்திருக்க வாய்ப்பில்லை! ஹிந்தியில் பல வருஷமா ஓடிட்டு இருக்குர நிகழ்ச்சி இப்போ தமிழ்நாட்டுக்கு வந்திருக்கு!!

100 நாள்னு சொன்னாலும் அதோட சூட்டிங்க மிஞ்சி போனா பத்தே நாள்ல முடிச்சிடுவாங்க, அத அரை மணி நேரம் அல்லது ஒரு மணி நேர கணக்குல பிரிச்சு 100 நாளைக்கு ஒளிபரப்புவாங்க !!!

Whatsapp message says, even God can't save the people who are watching Biggboss

என்னன்ன நடக்கனும் பேசனும்னு எல்லாமே முன்கூட்டியே ஸ்கிரிப்ட் ரெடி பண்ணிட்டு தான் சூட்டிங்கே தொடங்கும்!
ஒவ்வொருத்தரா மக்கள் ஓட்டு போட்டு வெளியேத்திட்டு இருப்பாங்க, ஆனா உண்மையிலேயே யாரு வெளியேரனும்னு முடிவு பண்ணிதான் அதுக்கு ஏத்த மாதிரி காட்சிகள் அமைக்க பட்டிருக்கும் !!!

நிறைய சண்டைகள் , மோதல்கள், விவாதம், சச்சரவில் தொடங்கி காதல், கள்ளகாதல், பாலியல் தொல்லைகள் உட்பட நடப்பதுபோல் காட்சிகள் அரங்கேறும் !!! மக்கள் அதை கண்டு கொதித்தெழுந்து தவறு செய்தவனுக்கு எதிராக ஓட்டு அளித்து வெளியேற்றும்படி நடைபெறும்!!! சிலர் தாங்கலாகவே உள்ளே இருக்க முடியாமல் கோபத்தில் வெளியேருவதுபோல் வைத்து TRP ஏற்றுவார்கள் !!!

இளைஞர்களை கவர வீட்டினுள் கவர்ச்சியான அரைகுறை ஆடைகளையே அணிந்து வருவார்கள் நடிகைகள்!! ஊரெங்கிலும் இதில் நடைபெறும் சம்பவங்களையே பேசுமாறு வைப்பார்கள்!! இறுதியில் அவர்கள் முடிவு செய்தபடியே ஒருவரை மக்களே தேர்ந்தெடுத்தது போல் பரிசு வழங்கி அடுத்த சீசனுக்கான வேலைகள் தொடங்கி விடும் !!!

Whatsapp message says, even God can't save the people who are watching Biggboss

இது எல்லாம் தானாக நடப்பதாக நம்பி இதுவரை அக்கம் பக்கத்து வீட்டில் என்ன நடக்கிறது என பார்த்து வந்த மக்கள் , இனி இந்த பிக்பாஸ் வீட்டில் என்ன நடக்கிறது என பார்க்க ஆரம்பித்து விடுவார்கள்!! அடுத்த சீசனுக்காக ஏங்கவும் செய்வார்கள்.

அடுத்தவர் வீட்டில் நடப்பதை மிகுந்த அக்கறை கொண்டு எட்டி பார்க்கும் நம் மன ஓட்டமே இந்த நிகழ்ச்சியின் உயிர் நாடி !!!
அதை வைத்தே கலாச்சாரத்தை சீர்அழித்து காசு பார்க்கும் ஒரு கும்பல். அதை கிண்டல் செய்கிரேன் என மீம்ஸ் போட்டு மக்களிடையே இன்னும் அதிகமாக பகிர வைக்கும் சில இளைஞர்கள்! முடிந்தால் விழிப்புணர்வு மீம்ஸ் போட்டு மக்களுக்கு புரிய வையுங்கள்! இந்த முறையாவது மீடியா TRP பசிக்கு பலி ஆகாமல் சாமர்த்தியமாக விழித்து கொண்டு மக்கள் பிரச்சனையில் தலையிடு தமிழா !!!

"இனியும் பிக்பாஸில் இன்று யார் அழுதாள்? இன்று யார் சிரித்தார்? இன்று யார் மானம் போயிற்று? இன்று யார் வெளியேறுவா? இன்று யாருக்கும் யாருக்கும் சண்டை வரும் கடைசியில் யார் வெற்றி பெறுவார்? என்று அலுவலகத்தில், டீ கடையில் வீட்டில் அக்கம் பக்கத்தில் தெரு கோடியில் மொபைல் போனில் வாட்ஸ் ஆப் இல் பேஸ்புக் இல் வெட்டிக் கதை பேசாமல் வேலையையும் குடும்பத்தையும் கவனியுங்கள்!! மீறி இத்தொடரை பார்க்க நினைத்தால் உங்களை அந்த கடவுளால் கூட காப்பாற்ற முடியாது!! இப்படி சொல்கிறது அந்த மெசேஜ்.

அதெல்லாம் ஓ.கே. மற்ற டிவி சேனல்கள் டிவி சீரியல்களையும் குடும்ப பெண்கள் இப்படித்தானே உட்கார்ந்து பார்க்கிறார்கள். அடுத்து இந்த கேரக்டருக்கு என்னவாகப்போகிறதோ என்று விவாதிக்கிறார்களே, அது மட்டும் சரியா?

English summary
A whatsapp message says, even God can't save the people who are watching Biggboss in the tv channel.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X