மழையால் அடித்துச் செல்லப்பட்ட சகோதரர்கள்.. வாட்ஸ்அப்பில் பரவும் பகீர் வீடியோ
காஞ்சிபுரம்: மழை வெள்ளத்தில் சகோதர்கள் இருவர் அடித்துச் செல்லப்பட்ட வீடியோ வாட்ஸ்அப் போன்ற சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு ஷாக் ஏற்படுத்தியுள்ளது.
காஞ்சிபுரம் கோனேரி குப்பத்தை சேர்ந்தவர் குமரவேல் (45). கூலி தொழிலாளியான, இவருக்கு சரத் (19), சதீஷ் (17) என்ற 2 மகன்கள் இருந்தனர்.

இதில் சரத் காஞ்சிபுரத்தில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் 2ம் ஆண்டும், சதீஷ் அங்குள்ள ஒரு பள்ளியில் பிளஸ்-2 வும் படித்து வந்தனர்.
இந்நிலையில் கடந்த சில தினங்களாக பெய்த கன மழையில் ஏனாத்தூர் ஏரி தண்ணீரால் நிரம்பி வழிந்தது.
இதை பார்த்து ரசிப்பதற்காக, குமரவேல் தனது மகன்கள் சரத், சதீஷ்வுடன் மாலை நேரத்தில் ஏனாத்தூர் ஏரிக்கு சென்றார். ஏரியின் மேல் நின்று பார்த்து கொண்டு இருக்கும் போது குமரவேல் கால் தவறி ஏரிக்குள் விழுந்தார்.
இதனால் பதற்றம் அடைந்த சரத், சதீஷ்சும் தந்தையை காப்பாற்ற ஏரிக்குள் குதித்தனர். அப்போது 3 பேரையும் வெள்ளம் அடித்து சென்றது. குமரவேல் ஒரு மரத்தின் முனையை பிடித்து ஏரியின் கரைக்கு வந்து சேர்ந்தார்.
சரத், சதீஷ் ஆகிய இருவரும் என்ன ஆனார்கள் என்று தெரியவில்லை. அவர்கள் 2 பேரையும் பேரிடர் மீட்பு குழுவும், தீயணைப்புதுறையினரும் தேடி வந்தனர்.
இந்நிலையில் இன்று காலையில் ஏனாத்தூர் ஏரியில் இருந்து சற்று தொலைவில் சரத் உடல் கண்டெடுக்கப்பட்டது. காஞ்சிபுரம் போலீசார் சரத் உடலை மீட்டு பிரதே பரிசோதனைக்காக காஞ்சீபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
சதீஷ் நிலை என்ன என்பது தெரியவில்லை. தொடர்ந்து சதீசை பேரிடர் மீட்பு குழுவும், தீயணைப்பு துறையினரும் தேடி வருகிறார்கள். இதனிடையே, அவர்கள் அடித்து செல்லப்படும்போது சிலர் எடுத்த செல்போன் காட்சிகள் வாட்ஸ்அப்பில் உலா வருகிறது.
-
வேலூர் டூ கன்னியாகுமரி.. 19 மாவட்டங்களில் கொட்டி தீர்க்கப்போகும் மழை! அடுத்த 2 மணி நேரம் உஷார்! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்! -
கத்திரி வெயில் முடிஞ்சுபோச்சு.. சென்னை உட்பட 5 மாவட்டங்களில் இன்று காலையிலேயே மழைக்கு வாய்ப்பு! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி












Click it and Unblock the Notifications