Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பன்முக திறமை, பக்காவான நடிப்பு.. நடிகர் மனோபாலா காலமானார்.. இறுதி சடங்கு எங்கே, எப்போது நடக்கிறது?

Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகர் மனோபாலாவின் மறைவுக்கு இன்று பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்துள்ள நிலையில், அவரது இறுதிச்சடங்கு குறித்து சில முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளது.

நடிகர் மனோபாலா வெறும் நடிகர் மட்டுமில்லை. தயாரிப்பாளர், இயக்குநர் என்று பல்வேறு முகங்களைக் கொண்டவர் மனோபாலா.. 69 வயதான மனோபாலா தொடர்ச்சியாகப் பல படங்களில் நடித்து வந்தார்.

ஒவ்வொரு மாதமும் வெளியாகும் படங்களில் ஒரு சில படங்களிலாவது இவர் நடித்திருப்பார் என்ற நிலை உருவாகியது. அந்தளவுக்குத் தமிழ் சினிமாவில் மிகவும் ஆக்டிவாக இருந்தார் மனோபாலா.

When and where actor Manobala final ritues will take palce list in Chennai

மனோபாலா: இந்தச் சூழலில் 69 வயதான மனோபாலா இன்று யாரும் எதிர்பாராத வகையில் காலமானார். உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த அவர் எதிர்பாராத விதமாக உயிரிழந்தார். மனோ பாலாவின் இந்த மரணம் பல்வேறு தரப்பினருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர் என பல்வேறு முகங்களைக் கொண்ட மனோபாலாவின் உயிரிழப்பு, தமிழ் சினிமாவுக்கு பேரிழப்பு என்றே பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

மனோ பாலாவுக்கு சில காலமாகவே உடல்நலக்குறைவு ஏற்பட்டிருந்த நிலையில், அவருக்குக் கடந்த ஜனவரி மாதம் தான் தனியார் மருத்துவமனையில் ஆஞ்சியோ சிகிச்சை அளிக்கப்பட்டது. அதன் பின்னர் இவரது உடல்நிலை சற்று மேம்பட்டு வந்த நிலையில், மீண்டும் எதிர்பாராத விதமாக அவருக்குக் கல்லீரல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதற்கு அவர் சிகிச்சை பெற்று வீடு திரும்பிய சில நாட்களிலேயே அவர் உயிரிழந்தார்.

இன்று மனோ பாலா வீட்டில் இருந்த நிலையில், அவருக்கு திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டு உயிரிழந்துள்ளார். மனோ பாலாவின் மரணத்திற்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். தன் மீது பெரிய மதிப்பு வைத்திருந்த மனோ பாலா மறைந்ததைக் கேட்டு ஆயிரிழந்த துயரம் அடைந்தாக இசையமைப்பாளர் இளைராஜா பதிவிட்டுள்ளார். அதேபோல சத்யராஜ் உள்ளிட்ட நடிகர்களும் வீடியோ வெளியிட்டுள்ளனர்.

இறுதிச்சடங்கு: நடிகர் மனோபாலாவின் உடல் சாலிக்கிராமத்தில் உள்ள வீட்டில் வைக்கப்பட்டுள்ளது.. அங்கே மனோபாலா உடலுக்கு திரையுலகினர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். விரைவில் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தவும் அனுமதிக்கப்படும் எனத் தெரிகிறது. இதற்கிடையே அவரது இறுதிச் சடங்கு குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது. அதன்படி வளரசவாக்கத்தில் உள்ள மின் மயானத்தில் நாளை காலை 10 மணிக்கு மனோபாலா உடல் தகனம் செய்யப்படும் என்று அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

When and where actor Manobala final ritues will take palce list in Chennai

மனோபாலா 1979ஆம் ஆண்டு புதிய வார்ப்புகள் என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். மேலும், இயக்குநராகவும் ஒரு ரவுண்டு வந்த மனோபாலா, இதுவரை 24 படங்களில் நடித்துள்ளார், மேலும், அவர் 345 படங்களில் நடிகராகவும் நடித்துள்ளார். கடைசியாக கஸ்டடி உள்ளிட்ட பல படங்களில் நடித்து வந்தார்.

மேலும், ஹெச் வினோத்தின் முதல் படமான சதுரங்க வேட்டை படத்தையும் தயாரித்தவரும் இவர் தான்... அதைத்தொடர்ந்து பாம்புச் சட்டை, சதுரங்க வேட்டை 2 ஆகிய படங்களையும் தயாரித்துள்ளார். இதில் சதுரங்க வேட்டை 2 படம் சில தவிர்க்க முடியாத பிரச்சினைகளால் இன்னும் வெளியாகவில்லை.

நடிகர் மனோ பாலா மறைவுக்கு இப்போது பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+