தோல்வியால் கதறி அழுது, கருணாநிதியையும் அழ வைத்த திமுக பெண் வேட்பாளர்
சென்னை: சட்டசபை தேர்தலில் கோவை வடக்கு தொகுதியில் தோல்வி அடைந்த திமுக வேட்பாளர் மீனா லோகு கோபாலபுரத்தில் திமுக தலைவர் கருணாநிதியை பார்த்ததும் கதறி அழுதுள்ளார். அவரை பார்த்து கருணாநிதியும் அழுதுள்ளார்.
தமிழக சட்டசபை தேர்தலில் கோவை வடக்கு தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட மீனா லோகு தோல்வி அடைந்தார். அவர் நிச்சயம் வெற்றி பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர் தோல்வி அடைந்தார்.
இந்நிலையில் மீனா திமுக செயற்குழு கூட்டத்தில் கலந்து கொண்டார்.

மீனா
செயற்குழு கூட்டத்தில் மீனா தான் தோல்வி அடைய காரணம் என்ன என்பதை தெரிவித்தார். திமுக நிர்வாகிகள் தனக்கு ஆதரவாக வாக்கு சேகரிக்கவில்லை என்றும், பிரச்சாரத்தில் செல்லும் இடம் எல்லாம் கட்சியினர் குவாட்டருக்கு பணம் கேட்டால் நான் என்ன செய்வேன் என்றும் குமுறினார்.

ஒத்துழைப்பே இல்லை
திமுகவினர் எனக்கு ஆதரவளிக்காமல் என்னை புறக்கணித்தார்கள். நான் 7 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைய நம் கட்சியினரே காரணம் என்று சபையில் உண்மையை போட்டு உடைத்தார் மீனா.

கோபாலபுரம்
செயற்குழு கூட்டத்தில் பங்கேற்கும் முன்பு திமுக தலைவர் கருணாநிதியை சந்திக்க கோபாலபுரம் சென்றார் மீனா. அங்கிருந்த டி.கே.எஸ். இளங்கோவன் மீனாவை பார்த்து, வாக்கு எண்ணும்போது பல சுற்றுகளில் முன்னிலையில் இருந்த நீங்கள் தோல்வி அடைவீர்கள் என நினைக்கவில்லை. தலைவரை பார்த்ததும் அழுதுவிடாதீர்கள் என்று அறிவுரை வழங்கியுள்ளார்.

கருணாநிதி
இளங்கோவன் அவ்வளவு சொல்லியும் கருணாநிதியை பார்த்தவுடன் மீனா கதறி அழுதுவிட்டார். அவரது கதறலை பார்த்த கருணாநிதியும் அழுதுவிட்டார். பிறகு கண்ணீரை துடைத்துக் கொண்டு கருணாநிதி மீனாவுக்கு ஆறுதல் கூறியுள்ளார்.
-
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்!












Click it and Unblock the Notifications