ஆஹாவென்றெழுந்தது பார் யுகப் புரட்சி.. மெரீனா "செல் ஒளி"யை மறக்க முடியுமா... பிளாஷ்பேக்!
Recommended Video

சென்னை: உலகையே தன் பக்கம் திரும்ப வைத்த தைப் புரட்சியின் மகத்தான நாட்களை எத்தனை முறை நினைவு கூர்ந்தாலும் மறக்க முடியாது. செல்போன் விளக்கொளியில் மெரீனா கடற்கரையை மின்ன வைத்து ஒட்டு மொத்த உலகையும் வியக்க வைத்த நாட்களை அசை போடுவோம்.
2017ம் ஆண்டின் தொடக்கமே தமிழகத்தை நெருப்புக் களமாக்கி வேடிக்கை பார்த்தது. தடை விதிப்பதா எங்கள் ஜல்லிக்கட்டுக்கு என்று கொதித்தெழுந்த இளைஞர் பட்டாளம், வங்கக் கடலே மருண்டு ஓடும் அளவுக்கு மெரீனாவை நிரப்பி அமர்க்களப்படுத்தியது.
இது புரட்சி அல்ல.. சாதனை சரித்திரம் என்று தங்க எழுத்துக்களால் வரலாறு சமைத்தது மெரீனாவில் கூடிய இளம் படை. இளைஞர் பட்டாளத்தின் முழக்கம் டெல்லி வரை எதிரொலித்து ஆட்டம் கா்ட்டியது.

கடல் அலையை விரட்டிய மக்கள் தலைகள்
மெரீனாவில் கூடியிருந்த லட்சக்கணக்கான இளம் பெண்கள், இளைஞர்களின் மாபெரும் எழுச்சிப் போராட்டத்தால் கடற்கரை திணறியது. காண வந்தோர் திகைத்து நின்றனர். பார் எங்கள் இளம் சிங்கங்களின் எழுச்சிப் பெருங்குரலை என்று கூறி வியந்து பேசியது தமிழகம்.

செல் ஒளியில் புதுமை
போராட்டத்தை ஒடுக்கவும், கூடியிருந்தோரை கலைந்து போக வைக்கவும் மெரீனா கடற்கரையில் இருந்த ராட்சத விளக்குகளை அணைத்துப் பார்த்தது காவல்துறை. அடங் போகப்பா. நீங்க வேற என்று கூறி கையில் இருந்த செல்போன்களை ஒளிர விட்டு புது வரலாறு படைத்து விரட்ட நினைத்தோரை வெட்கிப் போக வைத்தனர் இளம் படையினர்.

விளக்குகளால் நிரம்பிய மெரீனா
செல்போன் டார்ச் ஒளியில் போராட்டம் புது உருவம் பெற்றது, புது எழுச்சி பெற்றது. தமிழகத்திற்கு இது புதிது என்பதால் இந்த, விளக்கு வெளிச்சப் போராட்டம் மக்களை உற்சாகக் கடலில் பொங்க வைத்தது. இருண்டு போன கடற்கரை விளக்குகள் வெட்கிப் போய் மீண்டும் வெளிச்சத்திற்கு வந்தன.

மகத்தான மக்கள் சக்தி
புரட்சிப் போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர் பட்டாளத்தின் செல்போன் வெளிச்சத்தில் மீண்டும் மெரீனா ஒளிர்ந்து மக்கள் சக்தியை மகத்தான வெளிச்சத்தில் மூழ்கடித்துக் காட்டி அசர வைத்த நாள் இது. செல்போன் விளக்கொளியில் மெரீனாவே ஒளிர்ந்ததை உலகமே பார்த்து தடதடத்துப் போனது. இதை யாரும் எதிர்பார்க்கவில்லை. இந்த விளக்கொளி போராட்டமும் வரலாற்றில் பதிவாகி விட்டது.
மக்கள் சக்திக்கு முன்பு எல்லாமே தூசு என்பதை நிரூபித்த மெரீனா போராட்டத்தின் மறக்க முடியாத நாள் இன்று.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications